பல் இதழ் மென் மலர்
|
|
திரை உழந்து அசைஇய நிரைவளை ஆயமொடு
|
|
உப்பின் குப்பை ஏறி, எல் பட,
|
|
வரு திமில் எண்ணும் துறைவனொடு, ஊரே
|
|
ஒரு தன் கொடுமையின் அலர் பாடும்மே;
|
5
|
அலமரல் மழைக் கண் அமர்ந்து நோக்காள்;
|
|
அலையல் வாழி! வேண்டு, அன்னை! உயர்சிமைப்
|
|
பொதும்பில், புன்னைச் சினை சேர்பு இருந்த
|
|
வம்ப நாரை இரிய, ஒரு நாள்,
|
|
பொங்கு வரல் ஊதையொடு புணரி அலைப்பவும்,
|
10
|
உழைக்கடல் வழங்கலும் உரியன்; அதன்தலை
|
|
இருங் கழிப் புகாஅர் பொருந்தத் தாக்கி
|
|
வயச் சுறா எறிந்தென, வலவன் அழிப்ப,
|
|
எழில் பயம் குன்றிய சிறை அழி தொழில
|
|
நிரைமணிப் புரவி விரைநடை தவிர,
|
15
|
இழுமென் கானல் விழு மணல் அசைஇ,
|
|
ஆய்ந்த பரியன் வந்து, இவண்
|
|
மான்ற மாலைச் சேர்ந்தன்றோ இலனே!
|
தோழி செவிலித்தாய்க்கு
அறத்தொடு நின்றது. - உலோச்சனார்
|
|
மேல் |