பனி வரை நிவந்த
|
|
பனி வரை நிவந்த பயம் கெழு கவாஅன்,
|
|
துனி இல் கொள்கையொடு அவர் நமக்கு உவந்த
|
|
இனிய உள்ளம் இன்னாஆக,
|
|
முனிதக நிறுத்த நல்கல் எவ்வம்
|
5
|
சூர் உறை வெற்பன் மார்பு உறத் தணிதல்
|
|
அறிநதனள் அல்லள், அன்னை; வார்கோல்
|
|
செறிந்து இலங்கு எல் வளை நெகிழ்ந்தமை
நோக்கி,
|
|
கையறு நெஞ்சினள் வினவலின், முதுவாய்ப்
|
|
பொய் வல் பெண்டிர் பிரப்பு உளர்பு இரீஇ,
|
10
|
'முருகன் ஆர் அணங்கு' என்றலின், அது செத்து,
|
|
ஓவத்தன்ன வினை புனை நல் இல்,
|
|
'பாவை அன்ன பலர் ஆய் மாண் கவின்
|
|
பண்டையின் சிறக்க, என் மகட்கு' எனப் பரைஇ,
|
|
கூடு கொள் இன் இயம் கறங்க, களன் இழைத்து,
|
15
|
ஆடு அணி அயர்ந்த அகன் பெரும் பந்தர்,
|
|
வெண் போழ் கடம்பொடு சூடி, இன் சீர்
|
|
ஐது அமை பாணி இரீஇ, கைபெயரா,
|
|
செல்வன் பெரும் பெயர் ஏத்தி, வேலன்
|
|
வெறி அயர் வியன் களம் பொற்ப, வல்லோன்
|
20
|
பொறி அமை பாவையின் தூங்கல் வேண்டின்,
|
|
என் ஆம்கொல்லோ? தோழி! மயங்கிய
|
|
மையற் பெண்டிர்க்கு நொவ்வல் ஆக
|
|
ஆடிய பின்னும், வாடிய மேனி
|
|
பண்டையின் சிறவாதுஆயின், இம் மறை
|
25
|
அலர் ஆகாமையோ அரிதே, அஃதான்று,
|
|
அறிவர் உறுவிய அல்லல் கண்டருளி,
|
|
வெறி கமழ் நெடு வேள் நல்குவனெனினே,
|
|
'செறிதொடி உற்ற செல்லலும் பிறிது' எனக்
|
|
கான் கெழு நாடன் கேட்பின்,
|
30
|
யான் உயிர்வாழ்தல் அதனினும் அரிதே.
|
தலைமகன் சிறைப்புறத்தானாக,
தோழி தலைமகட்குச் சொல்லுவாளைச்
சொல்லியது; தோழிக்குத் தலைமகள்
சொல்லியதூஉம் ஆம். - வெறிபாடிய
காமக்கண்ணியார்
|
|
மேல் |