பனைத் திரள் அன்ன
|
|
பனைத் திரள் அன்ன பரு ஏர் எறுழ்த் தடக் கை,
|
|
கொலைச் சினம் தவிரா மதனுடை முன்பின்,
|
|
வண்டு படு கடாஅத்து, உயர் மருப்பு, யானை
|
|
தண் கமழ் சிலம்பின் மரம் படத் தொலைச்சி;
|
5
|
உறு புலி உரறக் குத்தி; விறல் கடிந்து;
|
|
சிறு தினைப் பெரும் புனம் வவ்வும் நாட!
|
|
கடும் பரிக் குதிரை ஆஅய் எயினன்
|
|
நெடுந் தேர் ஞிமிலியொடு பொருது, களம்
பட்டென,
|
|
காணிய செல்லாக் கூகை நாணி,
|
10
|
கடும் பகல் வழங்காதாஅங்கு, இடும்பை
|
|
பெரிதால் அம்ம இவட்கே; அதனால்
|
|
மாலை, வருதல் வேண்டும் சோலை
|
|
முளை மேய் பெருங் களிறு வழங்கும்
|
|
மலை முதல் அடுக்கத்த சிறு கல் ஆறே.
|
பகல் வருவானை 'இரவு வருக'
என்றது. - பரணர்
|
|
மேல் |