பாம்புடை விடர பனி
|
|
பாம்புடை விடர பனி நீர் இட்டுத் துறைத்
|
|
தேம் கலந்து ஒழுக, யாறு நிறைந்தனவே;
|
|
வெண் கோட்டு யானை பொருத புண் கூர்ந்து,
|
|
பைங் கண் வல்லியம் கல் அளைச் செறிய,
|
5
|
முருக்கு அரும்பு அன்ன வள் உகிர் வயப் பிணவு
|
|
கடி கொள, வழங்கார் ஆறே; ஆயிடை
|
|
எல்லிற்று என்னான், வென் வேல் ஏந்தி,
|
|
நசை தர வந்த நன்னராளன்
|
|
நெஞ்சு பழுதாக, வறுவியன் பெயரின்,
|
10
|
இன்று இப்பொழுதும் யான் வாழலெனே;
|
|
எவன்கொல்? வாழி, தோழி! நம் இடை முலைச்
|
|
சுணங்கு அணி முற்றத்து ஆரம் போலவும்,
|
|
சிலம்பு நீடு சோலைச் சிதர் தூங்கு
நளிப்பின்
|
|
இலங்கு வெள் அருவி போலவும்,
|
15
|
நிலம் கொண்டனவால், திங்கள் அம் கதிரே!
|
இரவுக்குறிச் சிறைப்புறமாகத்
தோழி சொல்லியது. - வெள்ளிவீதியார்
|
|
மேல் |