பார்வல் வெருகின்
|
|
பார்வல் வெருகின் கூர் எயிற்று அன்ன
|
|
வரி மென் முகைய நுண் கொடி அதிரல்
|
|
மல்கு அகல் வட்டியர், கொள்வு இடம் பெறாஅர்
|
|
விலைஞர், ஒழித்த தலை வேய் கான் மலர்
|
5
|
தேம் பாய் முல்லையொடு ஞாங்கர்ப் போக்கி,
|
|
தண் நறுங் கதுப்பில் புணர்ந்தோர் புனைந்த
என்
|
|
பொதி மாண் முச்சி காண்தொறும், பண்டைப்
|
|
பழ அணி உள்ளப்படுமால் தோழி!
|
|
இன்றொடு சில் நாள் வரினும், சென்று, நனி
|
10
|
படாஅவாகும், எம் கண்ணே கடாஅ
|
|
வான் மருப்பு அசைத்தல்செல்லாது, யானை தன்
|
|
வாய் நிறை கொண்ட வலி தேம்பு தடக் கை
|
|
குன்று புகு பாம்பின் தோன்றும்,
|
|
என்றூழ் வைப்பின், சுரன் இறந்தோரே!
|
பிரிவிடை வற்புறுத்தும்
தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - காவன்
முல்லைப் பூதனார்
|
|
மேல் |