பிரசப் பல் கிளை ஆர்ப்ப
|
|
பிரசப் பல் கிளை ஆர்ப்ப, கல்லென
|
|
வரை இழி அருவி ஆரம் தீண்டித்
|
|
தண் என நனைக்கும் நளிர் மலைச் சிலம்பில்,
|
|
கண் என மலர்ந்த மா இதழ்க் குவளைக்
|
5
|
கல் முகை நெடுஞ் சுனை நம்மொடு ஆடி,
|
|
பகலே இனிது உடன் கழிப்பி, இரவே
|
|
செல்வர்ஆயினும், நன்றுமன் தில்ல
|
|
வான்கண் விரிந்த பகல் மருள் நிலவின்
|
|
சூரல் மிளைஇய சாரல் ஆர் ஆற்று,
|
10
|
ஓங்கல் மிசைய வேங்கை ஒள் வீப்
|
|
புலிப் பொறி கடுப்பத் தோன்றலின், கய வாய்
|
|
இரும் பிடி இரியும் சோலைப்
|
|
பெருங் கல் யாணர்த் தம் சிறுகுடியானே.
|
தலைமகன் சிறைப்புறத்தானாக,
தலைமகட்குச் சொல்லுவாளாய், தோழி சொல்லி
யது. - அண்டர் மகன் குறுவழுதியார்
|
|
மேல் |