பிரிதல் வல்லியர் இது
|
|
'பிரிதல் வல்லியர், இது, நத் துறந்தோர்
|
|
மறந்தும் அமைகுவர்கொல்?' என்று எண்ணி,
|
|
ஆழல் வாழி, தோழி! கேழல்
|
|
வளை மருப்பு உறழும் முளை நெடும் பெருங் காய்
|
5
|
நனை முதிர் முருக்கின் சினை சேர் பொங்கர்,
|
|
காய் சினக் கடு வளி எடுத்தலின், வெங் காட்டு
|
|
அழல் பொழி யானையின் ஐயெனத் தோன்றும்
|
|
நிழல் இல் ஓமை நீர் இல் நீள் இடை,
|
|
இறந்தனர்ஆயினும், காதலர் நம்வயின்
|
10
|
மறந்து கண்படுதல் யாவது புறம் தாழ்
|
|
அம் பணை நெடுந் தோள் தங்கி, தும்பி
|
|
அரியினம் கடுக்கும் சுரி வணர் ஐம்பால்
|
|
நுண் கேழ் அடங்க வாரி, பையுள் கெட,
|
|
நன் முகை அதிரல் போதொடு, குவளைத்
|
15
|
தண் நறுங் கமழ் தொடை வேய்ந்த, நின்
|
|
மண் ஆர் கூந்தல் மரீஇய துயிலே?
|
பிரிவிடை வேறுபட்ட
தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - பாலை
பாடிய பெருங்கடுங்கோ
|
|
மேல் |