பின்னொடு முடித்த
|
|
பின்னொடு முடித்த மண்ணா முச்சி
|
|
நெய் கனி வீழ் குழல் அகப்படத் தைஇ;
|
|
வெருகு இருள் நோக்கியன்ன கதிர் விடுபு
|
|
ஒரு காழ் முத்தம் இடைமுலை விளங்க,
|
5
|
வணங்குறு கற்பொடு மடம் கொளச் சாஅய்,
|
|
நின் நோய்த் தலையையும் அல்லை; தெறுவர
|
|
'என் ஆகுவள்கொல், அளியள்தான்?' என,
|
|
என் அழிபு இரங்கும் நின்னொடு யானும்
|
|
ஆறு அன்று என்னா வேறு அல் காட்சி
|
10
|
இருவேம் நம் படர் தீர வருவது
|
|
காணிய வம்மோ காதல்அம் தோழி!
|
|
கொடி பிணங்கு அரில இருள் கொள் நாகம்
|
|
மடி பதம் பார்க்கும், வயமான் துப்பின்,
|
|
ஏனல் அம் சிறுதினைச் சேணோன் கையதைப்
|
15
|
பிடிக் கை அமைந்த கனல் வாய்க் கொள்ளி
|
|
விடு பொறிச் சுடரின் மின்னி, அவர்
|
|
சென்ற தேஎத்து நின்றதால், மழையே.
|
தலைமகன் பொருள்வயிற்
பிரிகின்றான் குறித்த பருவ வரவு கண்டு
அழிந்த தலைமகட்குத் தோழி சொல்லியது. -
எருமை வெளியனார்
|
|
மேல் |