பெய்து புறந்தந்த
|
|
'பெய்து புறந்தந்த பொங்கல் வெண் மழை,
|
|
எஃகு உறு பஞ்சித் துய்ப் பட்டன்ன,
|
|
துவலை தூவல் கழிய, அகல் வயல்
|
|
நீடு கழைக் கரும்பின் கணைக் கால் வான் பூக்
|
5
|
கோடைப் பூளையின் வாடையொடு துயல்வர,
|
|
பாசிலை பொதுளிய புதல்தொறும் பகன்றை
|
|
நீல் உண் பச்சை நிறம் மறைத்து அடைச்சிய
|
|
தோல் எறி பாண்டிலின் வாலிய மலர,
|
|
கோழிலை அவரைக் கொழு முகை அவிழ,
|
10
|
ஊழ் உறு தோன்றி ஒண் பூத் தளை விட,
|
|
புலம்தொறும் குருகினம் நரல, கல்லென
|
|
அகன்று உறை மகளிர் அணி துறந்து நடுங்க,
|
|
அற்சிரம் வந்தன்று; அமைந்தன்று இது என,
|
|
எப் பொருள் பெறினும், பிரியன்மினோ' எனச்
|
15
|
செப்புவல் வாழியோ, துணையுடையீர்க்கே;
|
|
நல்காக் காதலர் நலன் உண்டு துறந்த
|
|
பாழ் படு மேனி நோக்கி, நோய் பொர,
|
|
இணர் இறுபு உடையும் நெஞ்சமொடு, புணர்வு வேட்டு,
|
|
எயிறு தீப் பிறப்பத் திருகி,
|
20
|
நடுங்குதும் பிரியின் யாம் கடு பனி உழந்தே.
|
பிரிவு உணர்த்திய
தோழிக்குத் தலைமகள் ஆற்றாமை மீதூரச்
சொல்லியது. -கழார்க்கீரன் எயிற்றியார்
|
|
மேல் |