பெருங் கடல் வேட்டத்துச்
|
|
பெருங் கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர்
|
|
இருங் கழிச் செறுவின் உழாஅது செய்த
|
|
வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி,
|
|
என்றூழ் விடர குன்றம் போகும்
|
5
|
கதழ் கோல் உமணர் காதல் மடமகள்
|
|
சில் கோல் எல் வளை தெளிர்ப்ப வீசி,
|
|
'நெல்லின் நேரே வெண் கல் உப்பு' எனச்
|
|
சேரி விலைமாறு கூறலின், மனைய
|
|
விளி அறி ஞமலி குரைப்ப, வெரீஇய
|
10
|
மதர் கயல் மலைப்பின் அன்ன கண் எமக்கு,
|
|
இதை முயல் புனவன் புகைநிழல் கடுக்கும்
|
|
மா மூதள்ளல் அழுந்திய சாகாட்டு
|
|
எவ்வம் தீர வாங்கும் தந்தை
|
|
கை பூண் பகட்டின் வருந்தி,
|
15
|
வெய்ய உயிர்க்கும் நோய் ஆகின்றே.
|
இயற்கைப் புணர்ச்சி
புணர்ந்து நீங்கும் தலைமகன் பாங்கற்கு
உரைத்தது.- அம்மூவனார்
|
|
மேல் |