பெருநீர் அழுவத்து
|
|
பெருநீர் அழுவத்து எந்தை தந்த
|
|
கொழு மீன் உணங்கற் படு புள் ஓப்பி,
|
|
எக்கர்ப் புன்னை இன் நிழல் அசைஇ,
|
|
செக்கர் ஞெண்டின் குண்டு அளை கெண்டி,
|
5
|
ஞாழல் ஓங்கு சினைத் தொடுத்த கொடுங் கழித்
|
|
தாழை வீழ் கயிற்று ஊசல் தூங்கி,
|
|
கொண்டல் இடு மணல் குரவை முனையின்
|
|
வெண் தலைப் புணரி ஆயமொடு ஆடி,
|
|
மணிப் பூம் பைந் தழை தைஇ, அணித்தகப்
|
10
|
பல் பூங் கானல் அல்கினம் வருதல்
|
|
கவ்வை நல் அணங்கு உற்ற, இவ் ஊர்,
|
|
கொடிது அறி பெண்டிர் சொற்கொண்டு, அன்னை
|
|
கடி கொண்டனளே தோழி! 'பெருந்துறை,
|
|
எல்லையும் இரவும் என்னாது, கல்லென
|
15
|
வலவன் ஆய்ந்த வண் பரி
|
|
நிலவு மணல் கொட்கும் ஓர் தேர் உண்டு' எனவே.
|
பகற்குறி வந்த தலைமகன்
சிறைப்புறத்தானாக, தோழி தலைமகட்குச்
சொல்லுவாளாய், தலைமகன் கேட்பச்
சொல்லியது. - உலோச்சனார்
|
|
மேல் |