பொன் அடர்ந்தன்ன
|
|
பொன் அடர்ந்தன்ன ஒள் இணர்ச் செருந்திப்
|
|
பல் மலர் வேய்ந்த நலம் பெறு கோதையள்,
|
|
திணி மணல் அடை கரை அலவன் ஆட்டி
|
|
அசையினள் இருந்த ஆய் தொடிக் குறுமகள்,
|
5
|
நலம்சால் விழுப் பொருள் கலம் நிறை
கொடுப்பினும்,
|
|
பெறல் அருங்குரையள்ஆயின், அறம் தெரிந்து,
|
|
நாம் உறை தேஎம் மரூஉப் பெயர்ந்து, அவனொடு
|
|
இரு நீர்ச் சேர்ப்பின் உப்புடன் உழுதும்,
|
|
பெரு நீர்க் குட்டம் புணையொடு புக்கும்,
|
10
|
படுத்தனம், பணிந்தனம், அடுத்தனம்,
இருப்பின்,
|
|
தருகுவன்கொல்லோ தானே விரி திரைக்
|
|
கண் திரள் முத்தம் கொண்டு, ஞாங்கர்த்
|
|
தேன் இமிர் அகன் கரைப் பகுக்கும்
|
|
கானல் அம் பெருந் துறைப் பரதவன் எமக்கே?
|
தலைமகளைக் கண்ணுற்று
நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச்
சொல்லியது; அல்ல குறிப்பட்டுப்
போகாநின்றவன் சொல்லியதூஉம் ஆம், -
அம்மூவனார்
|
|
மேல் |