மரம் தலை கரிந்து நிலம்
|
|
மரம் தலை கரிந்து நிலம் பயம் வாட,
|
|
அலங்குகதிர் வேய்ந்த அழல் திகழ் நனந்தலை,
|
|
புலி தொலைத்து உண்ட பெருங் களிற்று ஒழி ஊன்
|
|
கலி கெழு மறவர் காழ்க் கோத்து ஒழிந்ததை,
|
5
|
ஞெலி கோற் சிறு தீ மாட்டி, ஒலி திரைக்
|
|
கடல் விளை அமிழ்தின் கணம் சால் உமணர்
|
|
சுனை கொள் தீம் நீர்ச் சோற்று உலைக்
கூட்டும்
|
|
சுரம் பல கடந்த நம் வயின் படர்ந்து; நனி
|
|
பசலை பாய்ந்த மேனியள், நெடிது நினைந்து,
|
10
|
செல் கதிர் மழுகிய புலம்பு கொள் மாலை
|
|
மெல் விரல் சேர்த்திய நுதலள், மல்கிக்
|
|
கயல் உமிழ் நீரின் கண் பனி வார,
|
|
பெருந் தோள் நெகிழ்ந்த செல்லலொடு
|
|
வருந்துமால், அளியள், திருந்திழைதானே!
|
தலைமகன் இடைச் சுரத்துத் தன்
நெஞ்சிற்குச் சொல்லியது. - தொண்டியாமூர்ச்
சாத்தனார்
|
|
மேல் |