மாவும் வண் தளிர் ஈன்றன
|
|
மாவும் வண் தளிர் ஈன்றன; குயிலும்
|
|
இன் தீம் பல் குரல் கொம்பர் நுவலும்;
|
|
மூதிலை ஒழித்த போது அவிழ் பெருஞ் சினை,
|
|
வல்லோன் தைவரும் வள் உயிர்ப் பாலை
|
5
|
நரம்பு ஆர்த்தன்ன வண்டினம் முரலும்;
|
|
துணி கயம் துன்னிய தூ மணல் எக்கர்,
|
|
தாது உகு தண் பொழில் அல்கி, காதலர்
|
|
செழு மனை மறக்கும் செவ்வி வேனில்
|
|
தானே வந்தன்றுஆயின், ஆனாது
|
10
|
இலங்கு வளை நெகிழ்ந்த எவ்வம் காட்டிப்
|
|
புலந்தனம் வருகம்; சென்மோ தோழி!
|
|
'யாமே எமியம் ஆக, நீயே
|
|
பொன் நயந்து அருள் இலையாகி,
|
|
இன்னை ஆகுதல் ஒத்தன்றால்' எனவே.
|
பிரிவு உணர்த்திய
தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - தங்கால்
பொற்கொல்லனார்
|
|
மேல் |