முலை முகம்செய்தன
|
|
'முலை முகம்செய்தன; முள் எயிறு இலங்கின;
|
|
தலை முடிசான்ற; தண் தழை உடையை;
|
|
அலமரல் ஆயமொடு யாங்கணும் படாஅல்;
|
|
மூப்புடை முது பதி தாக்குஅணங்கு உடைய;
|
5
|
காப்பும் பூண்டிசின்; கடையும் போகலை;
|
|
பேதை அல்லை மேதைஅம் குறுமகள்!
|
|
பெதும்பைப் பருவத்து ஒதுங்கினை, புறத்து' என,
|
|
ஒண் சுடர் நல் இல் அருங் கடி நீவி,
|
|
தன் சிதைவு அறிதல் அஞ்சி இன் சிலை
|
10
|
ஏறுடை இனத்த, நாறு உயிர் நவ்வி!
|
|
வலை காண் பிணையின் போகி, ஈங்கு ஓர்
|
|
தொலைவு இல் வெள் வேல் விடலையொடு, என்
மகள்
|
|
இச் சுரம் படர்தந்தோளே. ஆயிடை,
|
|
அத்தக் கள்வர் ஆ தொழு அறுத்தென,
|
15
|
பிற்படு பூசலின் வழிவழி ஓடி,
|
|
மெய்த் தலைப்படுதல்செல்லேன்; இத் தலை,
|
|
நின்னொடு வினவல் கேளாய்! பொன்னொடு
|
|
புலிப் பல் கோத்த புலம்பு மணித் தாலி,
|
|
ஒலிக் குழைச் செயலை உடை மாண் அல்குல்,
|
20
|
ஆய் சுளைப் பலவின் மேய் கலை உதிர்த்த
|
|
துய்த் தலை வெண் காழ் பெறூஉம்
|
|
கல் கெழு சிறுகுடிக் கானவன் மகளே.
|
மகட்போக்கிய
செவிலித்தாய் சுரத்திடைப் பின்சென்று,
நவ்விப்பிணாக்கண்டு, சொல்லியது. -
கயமனார்.
|
|
மேல் |