யாமம் நும்மொடு கழிப்பி
|
|
யாமம் நும்மொடு கழிப்பி, நோய் மிக,
|
|
பனி வார் கண்ணேம் வைகுதும்; இனியே;
|
|
ஆன்றல் வேண்டும் வான் தோய் வெற்ப!
|
|
பல் ஆன் குன்றில் படு நிழல் சேர்ந்த
|
5
|
நல் ஆன் பரப்பின் குழுமூர் ஆங்கண்
|
|
கொடைக் கடன் ஏன்ற கோடா நெஞ்சின்
|
|
உதியன் அட்டில் போல ஒலி எழுந்து,
|
|
அருவி ஆர்க்கும் பெரு வரைச் சிலம்பின்;
|
|
ஈன்றணி இரும் பிடி தழீஇ, களிறு தன்
|
10
|
தூங்குநடைக் குழவி துயில் புறங்காப்ப,
|
|
ஒடுங்கு அளை புலம்பப் போகி, கடுங் கண்
|
|
வாள் வரி வயப் புலி கல் முழை உரற,
|
|
கானவர் மடிந்த கங்குல்;
|
|
மான் அதர்ச் சிறு நெறி வருதல், நீயே?
|
இரவுக்குறி வந்த தலைமகனை
இரவுக்குறி விலக்கி, வரைவு கடாயது.
-கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்
|
|
மேல் |