வயங்கு மணி பொருத
|
|
வயங்கு மணி பொருத வகைஅமை வனப்பின்
|
|
பசுங் காழ் அல்குல் மாஅயோளொடு
|
|
வினை வனப்பு எய்திய புனை பூஞ் சேக்கை,
|
|
விண் பொரு நெடு நகர்த் தங்கி, இன்றே
|
5
|
இனிது உடன் கழிந்தன்றுமன்னே; நாளைப்
|
|
பொருந்தாக் கண்ணேம் புலம்பு வந்து உறுதரச்
|
|
சேக்குவம்கொல்லோ, நெஞ்சே! சாத்து எறிந்து
|
|
அதர் கூட்டுண்ணும் அணங்குடைப் பகழிக்
|
|
கொடு வில் ஆடவர் படு பகை வெரீஇ,
|
10
|
ஊர் எழுந்து உலறிய பீர் எழு முது பாழ்,
|
|
முருங்கை மேய்ந்த பெருங் கை யானை
|
|
வெரிந் ஓங்கு சிறு புறம் உரிஞ, ஒல்கி
|
|
இட்டிகை நெடுஞ் சுவர் விட்டம் வீழ்ந்தென,
|
|
மணிப் புறாத் துறந்த மரம் சோர் மாடத்து
|
15
|
எழுது அணி கடவுள் போகலின், புல்லென்று
|
|
ஒழுகுபலி மறந்த மெழுகாப் புன் திணைப்
|
|
பால் நாய் துள்ளிய பறைக்கட் சிற்றில்,
|
|
குயில் காழ் சிதைய மண்டி, அயில் வாய்க்
|
|
கூர் முகச் சிதலை வேய்ந்த
|
20
|
போர் மடி நல் இறைப் பொதியிலானே?
|
தலைமகன் பொருள்
கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லிச் செலவு
அழுங்கியது. -கடியலூர் உருத்திரங்கண்ணனார்
|
|
மேல் |