வலம் சுரி மராஅத்துச்
|
|
வலம் சுரி மராஅத்துச் சுரம் கமழ் புது வீச்
|
|
சுரி ஆர் உளைத் தலை பொலியச் சூடி,
|
|
கறை அடி மடப் பிடி கானத்து அலற,
|
|
களிற்றுக் கன்று ஒழித்த உவகையர், கலி
சிறந்து,
|
5
|
கருங் கால் மராஅத்துக் கொழுங் கொம்பு
பிளந்து,
|
|
பெரும் பொளி வெண் நார் அழுந்துபடப் பூட்டி,
|
|
நெடுங் கொடி நுடங்கும் நியம மூதூர்,
|
|
நறவு நொடை நல் இல் புதவுமுதற் பிணிக்கும்
|
|
கல்லா இளையர் பெருமகன் புல்லி
|
10
|
வியன் தலை நல் நாட்டு வேங்கடம் கழியினும்,
|
|
சேயர் என்னாது, அன்பு மிகக் கடைஇ,
|
|
எய்த வந்தனவால்தாமே நெய்தல்
|
|
கூம்பு விடு நிகர் மலர் அன்ன
|
|
ஏந்து எழில் மழைக் கண் எம் காதலி குணனே.
|
தலைமகன் இடைச் சுரத்துத் தன்
நெஞ்சிற்குச் சொல்லியது. - கல்லாடனார்
|
|
மேல் |