ஆலமரம் (ஆலம்) |
கொடுந் திமிற் பரதவர் வேட்டம் வாய்த்தென, |
|
இரும் புலாக் கமழும் சிறுகுடிப் பாக்கத்துக் |
|
குறுங் கண் அவ் வலைப் பயம் பாராட்டி, |
|
கொழுங் கண் அயிலை பகுக்கும் துறைவன் |
|
5 |
நம்மொடு புணர்ந்த கேண்மை முன்னே |
அலர் வாய்ப் பெண்டிர் அம்பல் தூற்ற, |
|
பலரும் ஆங்கு அறிந்தனர்மன்னே; இனியே |
|
வதுவை கூடிய பின்றை, புதுவது |
|
பொன் வீ ஞாழலொடு புன்னை வரிக்கும் |
|
10 |
கானல் அம் பெருந் துறைக் கவினி மா நீர்ப் |
பாசடைக் கலித்த கணைக்கால் நெய்தல் |
|
விழவு அணி மகளிர் தழை அணிக் கூட்டும் |
|
வென் வேற் கவுரியர் தொல் முது கோடி |
|
முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன் துறை, |
|
15 |
வெல்போர் இராமன் அரு மறைக்கு அவித்த |
பல் வீழ் ஆலம் போல, |
|
ஒலி அவிந்தன்று, இவ் அழுங்கல் ஊரே. |
|
தலைமகன் வரைவு மலிந்தமை தோழி தலைமகட்குச் சொல்லியது.- மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார் | |
உரை |
தொடி அணி முன்கைத் தொகு விரல் குவைஇ, |
|
படிவ நெஞ்சமொடு பகல் துணை ஆக, |
|
நோம்கொல்? அளியள் தானே! தூங்கு நிலை, |
|
மரை ஏறு சொறிந்த, மாத் தாட் கந்தின் |
|
5 |
சுரை இவர் பொதியில் அம் குடிச் சீறூர் |
நாட் பலி மறந்த நரைக் கண் இட்டிகை, |
|
புரிசை மூழ்கிய பொரி அரை ஆலத்து |
|
ஒரு தனி நெடு வீழ் உதைத்த கோடை |
|
துணைப் புறா இரிக்கும் தூய் மழை நனந்தலை, |
|
10 |
கணைக் கால் அம் பிணை ஏறு புறம் நக்க, |
ஒல்கு நிலை யாஅத்து ஓங்கு சினை பயந்த |
|
அல்குறு வரி நிழல் அசையினம் நோக்க, |
|
அரம்பு வந்து அலைக்கும் மாலை, |
|
நிரம்பா நீள் இடை வருந்துதும் யாமே. |
|
பிரிந்து போகாநின்ற தலைமகன், இடைச் சுரத்து நின்று, தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - குடவாயிற்கீரத்தனார் | |
உரை |
மணி வாய்க் காக்கை மா நிறப் பெருங் கிளை |
|
பிணி வீழ் ஆலத்து அலங்கு சினை ஏறி, |
|
கொடு வில் எயினர் குறும்பிற்கு ஊக்கும் |
|
கடு வினை மறவர் வில்லிடத் தொலைந்தோர் |
|
5 |
படு பிணம் கவரும் பாழ் படு நனந்தலை, |
அணங்கு என உருத்த நோக்கின், ஐயென |
|
நுணங்கிய நுசுப்பின், நுண் கேழ் மாமை, |
|
பொன் வீ வேங்கைப் புது மலர் புரைய |
|
நல் நிறத்து எழுந்த, சுணங்கு அணி வன முலை, |
|
10 |
சுரும்பு ஆர் கூந்தல், பெருந் தோள், இவள்வயின் |
பிரிந்தனிர் அகறல் சூழின், அரும் பொருள் |
|
எய்துகமாதோ நுமக்கே; கொய் தழைத் |
|
தளிர் ஏர் அன்ன, தாங்கு அரு மதுகையள், |
|
மெல்லியள், இளையள், நனி பேர் அன்பினள், |
|
15 |
'செல்வேம்' என்னும் நும் எதிர், |
'ஒழிவேம்' என்னும் ஒண்மையோ இலளே! |
|
செலவு உணர்த்திய தலைமகற்குத் தோழி செலவு அழுங்கச் சொல்லியது. -எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் | |
உரை |
தன் ஓரன்ன ஆயமும், மயில் இயல் |
|
என் ஓரன்ன தாயரும், காண, |
|
கை வல் யானைக் கடுந் தேர்ச் சோழர் |
|
காவிரிப் படப்பை உறந்தை அன்ன |
|
5 |
பொன்னுடை நெடு நகர், புரையோர் அயர, |
நல் மாண் விழவில் தகரம் மண்ணி, |
|
யாம் பல புணர்ப்பச் சொல்லாள், காம்பொடு |
|
நெல்லி நீடிய கல் அறைக் கவாஅன், |
|
அத்த ஆலத்து அலந்தலை நெடு வீழ் |
|
10 |
தித்திக் குறங்கில் திருந்த உரிஞ, |
வளையுடை முன்கை அளைஇ, கிளைய |
|
பயில் இரும் பிணையல் பசுங் காழ்க் கோவை |
|
அகல் அமை அல்குல் பற்றி, கூந்தல் |
|
ஆடு மயில் பீலியின் பொங்க, நன்றும், |
|
15 |
தான் அமர் துணைவன் ஊக்க, ஊங்கி, |
உள்ளாது கழிந்த முள் எயிற்றுத் துவர் வாய்ச் |
|
சிறு வன்கண்ணி சிலம்பு கழீஇ, |
|
அறியாத் தேஎத்தள் ஆகுதல் கொடிதே. |
|
மகட் போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - குடவாயிற் கீரத்தனார் | |
உரை |
மேல் |