293. பாலை |
இலை ஒழித்து உலறிய புன் தலை உலவை |
|
வலை வலந்தனைய ஆக, பல உடன் |
|
சிலம்பி சூழ்ந்த புலம் கெடு வைப்பின், |
|
துகில் ஆய் செய்கைப் பா விரிந்தன்ன |
|
5 |
வெயில் அவிர்பு நுடங்கும் வெவ் வெங் களரி, |
குயிற் கண் அன்ன குரூஉக் காய் முற்றி, |
|
மணிக் காசு அன்ன மால் நிற இருங் கனி, |
|
உகாஅய் மென் சினை உதிர்வன கழியும் |
|
வேனில் வெஞ் சுரம் தமியர் தாமே, |
|
10 |
செல்ப என்ப தோழி! யாமே, |
பண்பு இல் கோவலர் தாய் பிரித்து யாத்த |
|
நெஞ்சு அமர் குழவி போல, நொந்து நொந்து, |
|
இன்னா மொழிதும் என்ப; |
|
என் மயங்கினர்கொல், நம் காதலோரே? |
|
பொருள்வயிற் பிரியக் கருதிய தலைமகன் குறிப்பு அறிந்து, தலைமகள் தோழிக்குச் சொல்லியது; தலைமகனால் பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைமகட்குச் சொல்லியதூஉமாம். - காவன்முல்லைப் பூதனார் | |
உரை |
மேல் |