காஞ்சி |
"நெடுங் கரைக் கான்யாற்றுக் கடும் புனல் சாஅய், |
|
அவிர் அறல் கொண்ட விரவு மணல் அகன் துறைத் |
|
தண் கயம் நண்ணிய பொழில்தொறும், காஞ்சிப் |
|
பைந் தாது அணிந்த போது மலி எக்கர், |
|
5 |
வதுவை நாற்றம் புதுவது கஞல, |
மா நனை கொழுதிய மணி நிற இருங் குயில் |
|
படு நா விளி யானடுநின்று, அல்கலும் |
|
உரைப்ப போல, ஊழ் கொள்பு கூவ, |
|
இனச் சிதர் உகுத்த இலவத்துஆங்கண், |
|
10 |
சினைப் பூங் கோங்கின் நுண் தாது பகர்நர் |
பவளச் செப்பில் பொன் சொரிந்தன்ன, |
|
இகழுநர் இகழா இள நாள் அமையம் |
|
செய்தோர் மன்ற குறி" என, நீ நின் |
|
பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப, |
|
15 |
வாராமையின் புலந்த நெஞ்சமொடு, |
நோவல், குறுமகள்! நோயியர், என் உயிர்!' என, |
|
மெல்லிய இனிய கூறி, வல்லே |
|
வருவர் வாழி தோழி! பொருநர் |
|
செல் சமம் கடந்த வில் கெழு தடக் கைப் |
|
20 |
பொதியிற் செல்வன், பொலந்தேர்த் திதியன், |
இன் இசை இயத்தின் கறங்கும் |
|
கல்மிசை அருவிய காடு இறந்தோரே. |
|
பருவங் கண்டு அழிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் | |
உரை |
நகை ஆகின்றே தோழி! நெருநல் |
|
மணி கண்டன்ன துணி கயம் துளங்க, |
|
இரும்பு இயன்றன்ன கருங் கோட்டு எருமை, |
|
ஆம்பல் மெல் அடை கிழிய, குவளைக் |
|
5 |
கூம்பு விடு பல் மலர் மாந்தி, கரைய |
காஞ்சி நுண் தாது ஈர்ம் புறத்து உறைப்ப, |
|
மெல்கிடு கவுள அல்குநிலை புகுதரும் |
|
தண் துறை ஊரன் திண் தார் அகலம் |
|
வதுவை நாள் அணிப் புதுவோர்ப் புணரிய, |
|
10 |
பரிவொடு வரூஉம் பாணன் தெருவில் |
புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி, யாழ் இட்டு, |
|
எம் மனைப் புகுதந்தோனே. அது கண்டு |
|
மெய்ம்மலி உவகை மறையினென் எதிர்சென்று, |
|
'இம் மனை அன்று; அஃது உம் மனை' என்ற |
|
15 |
என்னும் தன்னும் நோக்கி, |
மம்மர் நெஞ்சினோன் தொழுது நின்றதுவே. |
|
பரத்தை மனைக்குச் செல்கின்ற பாணன் தன் மனைக்கு வந்தானாக,தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் | |
உரை |
நறவு உண் மண்டை நுடக்கலின், இறவுக் கலித்து, |
|
பூட்டு அறு வில்லின் கூட்டுமுதல் தெறிக்கும் |
|
பழனப் பொய்கை அடைகரைப் பிரம்பின் |
|
அர வாய் அன்ன அம் முள் நெடுங் கொடி |
|
5 |
அருவி ஆம்பல் அகல் அடை துடக்கி, |
அசைவரல் வாடை தூக்கலின், ஊதுஉலை |
|
விசை வாங்கு தோலின், வீங்குபு ஞெகிழும் |
|
கழனிஅம் படப்பைக் காஞ்சி ஊர! |
|
'ஒண் தொடி ஆயத்துள்ளும் நீ நயந்து |
|
10 |
கொண்டனை' என்ப 'ஓர் குறுமகள்' அதுவே |
செம்பொற் சிலம்பின், செறிந்த குறங்கின், |
|
அம் கலுழ் மாமை, அஃதை தந்தை, |
|
அண்ணல் யானை அடு போர்ச் சோழர், |
|
வெண்ணெல் வைப்பின் பருவூர்ப் பறந்தலை, |
|
15 |
இரு பெரு வேந்தரும் பொருது களத்து ஒழிய, |
ஒளிறு வாள் நல் அமர்க் கடந்த ஞான்றை, |
|
களிறு கவர் கம்பலை போல, |
|
அலர் ஆகின்றது, பலர் வாய்ப் பட்டே. |
|
தோழி வாயில் மறுத்தது. மருதம் பாடிய இளங்கடுங்கோ | |
உரை |
முரசுடைச் செல்வர் புரவிச் சூட்டும் |
|
மூட்டுறு கவரி தூக்கியன்ன, |
|
செழுஞ் செய் நெல்லின் சேயரிப் புனிற்றுக் கதிர் |
|
மூதா தின்றல் அஞ்சி, காவலர் |
|
5 |
பாகல் ஆய்கொடிப் பகன்றையொடு பரீஇ, |
காஞ்சியின் அகத்து, கரும்பு அருத்தி, யாக்கும் |
|
தீம் புனல் ஊர! திறவதாகக் |
|
குவளை உண்கண் இவளும் யானும் |
|
கழனி ஆம்பல் முழுநெறிப் பைந் தழை, |
|
10 |
காயா ஞாயிற்றாக, தலைப்பெய, |
'பொய்தல் ஆடிப் பொலிக!' என வந்து, |
|
நின் நகாப் பிழைத்த தவறோ பெரும! |
|
கள்ளும் கண்ணியும் கையுறையாக |
|
நிலைக் கோட்டு வெள்ளை நால்செவிக் கிடாஅய் |
|
15 |
நிலைத்துறைக் கடவுட்கு உளப்பட ஓச்சி, |
தணி மருங்கு அறியாள், யாய் அழ, |
|
மணி மருள் மேனி பொன் நிறம் கொளலே? |
|
தலைமகளை இடத்து உய்த்துவந்த தோழி தலைமகனை வரைவு கடாயது.-ஆவூர் மூலங்கிழார் | |
உரை |
பிணர் மோட்டு நந்தின் பேழ் வாய் ஏற்றை |
|
கதிர் மூக்கு ஆரல் களவன் ஆக, |
|
நெடு நீர்ப் பொய்கைத் துணையொடு புணரும் |
|
மலி நீர் அகல் வயல் யாணர் ஊர! |
|
5 |
போது ஆர் கூந்தல் நீ வெய்யோளொடு |
தாது ஆர் காஞ்சித் தண் பொழில் அகல் யாறு |
|
ஆடினை என்ப, நெருநை; அலரே |
|
காய் சின மொய்ம்பின் பெரும் பெயர்க் கரிகால் |
|
ஆர்கலி நறவின் வெண்ணிவாயில், |
|
10 |
சீர் கெழு மன்னர் மறலிய ஞாட்பின் |
இமிழ் இசை முரசம் பொரு களத்து ஒழிய, |
|
பதினொரு வேளிரொடு வேந்தர் சாய, |
|
மொய் வலி அறுத்த ஞான்றை, |
|
தொய்யா அழுந்தூர் ஆர்ப்பினும் பெரிதே. |
|
தோழி தலைமகற்கு வாயில் மறுத்தது. - பரணர் | |
உரை |
வெள்ளி விழுத் தொடி மென் கருப்பு உலக்கை, |
|
வள்ளி நுண் இடை வயின் வயின் நுடங்க; |
|
மீன் சினை அன்ன வெண் மணல் குவைஇ, |
|
காஞ்சி நீழல், தமர் வளம் பாடி, |
|
5 |
ஊர்க் குறுமகளிர் குறுவழி, விறந்த |
வராஅல் அருந்திய சிறு சிரல் மருதின் |
|
தாழ் சினை உறங்கும் தண் துறை ஊர! |
|
விழையா உள்ளம் விழையும் ஆயினும், |
|
என்றும், கேட்டவை தோட்டி ஆக மீட்டு, ஆங்கு, |
|
10 |
அறனும் பொருளும் வழாமை நாடி, |
தற் தகவு உடைமை நோக்கி, மற்று அதன் |
|
பின் ஆகும்மே, முன்னியது முடித்தல்; |
|
அனைய, பெரியோர் ஒழுக்கம்; அதனால், |
|
அரிய பெரியோர்த் தெரியுங்காலை, |
|
15 |
நும்மோர் அன்னோர் மாட்டும், இன்ன |
பொய்யொடு மிடைந்தவை தோன்றின், |
|
மெய் யாண்டு உளதோ, இவ் உலகத்தானே? |
|
'வரைந்து எய்துவல்' என்று நீங்கும் தலைமகன், 'தலைமகளை ஆற்றுவித்துக் கொண் டிருத்தல் வேண்டும்' என்று தோழியைக் கைப்பற்றினாற்கு, கைப்பற்றியது தன்னைத் தொட்டுச் சூளுறுவானாகக் கருதி, சொல்லியது. - ஓரம்போகியார் | |
உரை |
கோதை இணர, குறுங் கால், காஞ்சிப் |
|
போது அவிழ் நறுந் தாது அணிந்த கூந்தல், |
|
அரி மதர் மழைக் கண், மாஅயோளொடு |
|
நெருநையும் கமழ் பொழில் துஞ்சி, இன்றும் |
|
5 |
பெரு நீர் வையை அவளொடு ஆடி, |
புலரா மார்பினை வந்து நின்று, எம்வயின் |
|
கரத்தல் கூடுமோ மற்றே? பரப்பில் |
|
பல் மீன் கொள்பவர் முகந்த இப்பி |
|
நார் அரி நறவின் மகிழ் நொடைக் கூட்டும் |
|
10 |
பேர் இசைக் கொற்கைப் பொருநன், வென் வேல் |
கடும் பகட்டு யானை நெடுந் தேர் செழியன், |
|
மலை புரை நெடு நகர்க் கூடல் நீடிய |
|
மலிதரு கம்பலை போல, |
|
அலர் ஆகின்று, அது பலர் வாய்ப் பட்டே. |
|
வாயில் வேண்டிச் சென்ற தலைமகற்கு வாயில் மறுக்கும் தோழி சொல்லியது. -மதுரைப் பேராலவாயார் | |
உரை |
குழற் கால் சேம்பின் கொழு மடல் அகல் இலைப் |
|
பாசிப் பரப்பில் பறழொடு வதிந்த |
|
உண்ணாப் பிணவின் உயக்கம் சொலிய, |
|
நாள் இரை தரீஇய எழுந்த நீர் நாய் |
|
5 |
வாளையொடு உழப்ப, துறை கலுழ்ந்தமையின், |
தெண் கட் தேறல் மாந்தி, மகளிர் |
|
நுண் செயல் அம் குடம் இரீஇ, பண்பின் |
|
மகிழ்நன் பரத்தைமை பாடி, அவிழ் இணர்க் |
|
காஞ்சி நீழல் குரவை அயரும் |
|
10 |
தீம் பெரும் பொய்கைத் துறை கேழ் ஊரன் |
தேர் தர வந்த நேர் இழை மகளிர் |
|
ஏசுப என்ப, என் நலனே; அதுவே |
|
பாகன் நெடிது உயிர் வாழ்தல் காய் சினக் |
|
கொல் களிற்று யானை நல்கல்மாறே; |
|
15 |
தாமும் பிறரும் உளர்போல் சேறல் |
முழவு இமிழ் துணங்கை தூங்கும் விழவின், |
|
யான் அவண் வாராமாறே; வரினே, வானிடைச் |
|
சுடரொடு திரிதரும் நெருஞ்சி போல, |
|
என்னொடு திரியானாயின், வென் வேல் |
|
20 |
மாரி அம்பின் மழைத் தோற் சோழர் |
வில் ஈண்டு குறும்பின் வல்லத்துப் புற மிளை, |
|
ஆரியர் படையின் உடைக, என் |
|
நேர் இறை முன்கை வீங்கிய வளையே! |
|
நயப் புப்பரத்தை இற் பரத்தைக்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது. - பாவைக் கொட்டிலார் | |
உரை |
உய் தகை இன்றால் தோழி! பைபய, |
|
கோங்கும் கொய் குழை உற்றன; குயிலும் |
|
தேம் பாய் மாஅத்து ஓங்கு சினை விளிக்கும்; |
|
நாடு ஆர் காவிரிக் கோடு தோய் மலிர் நிறைக் |
|
5 |
கழை அழி நீத்தம் சாஅய வழி நாள், |
மழை கழிந்தன்ன மாக் கால் மயங்கு அறல், |
|
பதவு மேயல் அருந்து துளங்கு இமில் நல் ஏறு, |
|
மதவுடை நாக் கொடு அசை வீடப் பருகி, |
|
குறுங் காற் காஞ்சிக் கோதை மெல் இணர்ப் |
|
10 |
பொன் தகை நுண் தாது உறைப்ப, தொக்கு உடன், |
குப்பை வார் மணல் எக்கர்த் துஞ்சும், |
|
யாணர் வேனில்மன், இது |
|
மாண் நலம் நுகரும் துணை உடையோர்க்கே? |
|
பிரிவின்கண் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - ஆவூர் மூலங்கிழார் | |
உரை |
நகை நன்று அம்ம தானே இறை மிசை |
|
மாரிச் சுதையின் ஈர்ம் புறத்து அன்ன |
|
கூரல் கொக்கின் குறும் பறைச் சேவல், |
|
வெள்ளி வெண் தோடு அன்ன, கயல் குறித்து, |
|
5 |
கள் ஆர் உவகைக் கலி மகிழ் உழவர் |
காஞ்சி அம் குறுந் தறி குத்தி, தீம் சுவை |
|
மென் கழைக் கரும்பின் நன் பல மிடைந்து, |
|
பெருஞ் செய் நெல்லின் பாசு அவல் பொத்தி, |
|
வருத்திக் கொண்ட வல் வாய்க் கொடுஞ் சிறை |
|
10 |
மீது அழி கடு நீர் நோக்கி, பைப்பயப் |
பார்வல் இருக்கும் பயம் கேழ் ஊர! |
|
யாம் அது பேணின்றோ இலமே நீ நின் |
|
பண் அமை நல் யாழ்ப் பாணனொடு, விசி பிணி, |
|
மண் ஆர், முழவின் கண் அதிர்ந்து இயம்ப, |
|
15 |
மகிழ் துணைச் சுற்றமொடு மட்டு மாந்தி, |
எம் மனை வாராயாகி, முன் நாள், |
|
நும் மனைச் சேர்ந்த ஞான்றை, அம் மனைக் |
|
குறுந் தொடி மடந்தை உவந்தனள் நெடுந் தேர், |
|
இழை அணி யானைப் பழையன் மாறன், |
|
20 |
மாட மலி மறுகின் கூடல் ஆங்கண், |
வெள்ளத் தானையொடு வேறு புலத்து இறுத்த |
|
கிள்ளி வளவன் நல் அமர் சாஅய், |
|
கடும் பரிப் புரவியொடு களிறு பல வவ்வி, |
|
ஏதில் மன்னர் ஊர் கொள, |
|
25 |
கோதை மார்பன் உவகையின் பெரிதே. |
தோழி தலைமகற்கு வாயில் மறுத்தது. - நக்கீரர் | |
உரை |
மேல் |