தேக்கு |
நீ செலவு அயரக் கேட்டொறும், பல நினைந்து, |
|
அன்பின் நெஞ்சத்து, அயாஅப் பொறை மெலிந்த |
|
என் அகத்து இடும்பை களைமார், நின்னொடு |
|
கருங் கல் வியல் அறைக் கிடப்பி, வயிறு தின்று |
|
5 |
இரும் புலி துறந்த ஏற்றுமான் உணங்கல், |
நெறி செல் வம்பலர் உவந்தனர் ஆங்கண், |
|
ஒலிகழை நெல்லின் அரிசியொடு ஓராங்கு |
|
ஆன் நிலைப் பள்ளி அளை பெய்து அட்ட |
|
வால் நிணம் உருக்கிய வாஅல் வெண் சோறு |
|
10 |
புகர் அரைத் தேக்கின் அகல் இலை மாந்தும் |
கல்லா நீள் மொழிக் கத நாய் வடுகர் |
|
வல் ஆண் அரு முனை நீந்தி, அல்லாந்து, |
|
உகு மண் ஊறு அஞ்சும் ஒரு காற் பட்டத்து |
|
இன்னா ஏற்றத்து இழுக்கி, முடம் கூர்ந்து, |
|
15 |
ஒரு தனித்து ஒழிந்த உரனுடை நோன் பகடு |
அம் குழை இருப்பை அறை வாய் வான் புழல் |
|
புல் உளைச் சிறாஅர் வில்லின் நீக்கி, |
|
மரை கடிந்து ஊட்டும் வரைஅகச் சீறூர் |
|
மாலை இன் துணைஆகி, காலைப் |
|
20 |
பசு நனை நறு வீப் பரூஉப் பரல் உறைப்ப, |
மண மனை கமழும் கானம் |
|
துணை ஈர் ஓதி என் தோழியும் வருமே. |
|
தோழி தலைமகள் குறிப்பு அறிந்து வந்து, தலைமகற்குச் சொல்லியது.- காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் | |
உரை |
செய்வினைப் பிரிதல் எண்ணி, கைம்மிகக் |
|
காடு கவின் ஒழியக் கடுங் கதிர் தெறுதலின், |
|
நீடு சினை வறிய ஆக, ஒல்லென |
|
வாடு பல் அகல்இலை கோடைக்கு ஒய்யும் |
|
5 |
தேக்கு அமல் அடுக்கத்து ஆங்கண் மேக்கு எழுபு, |
முளி அரிற் பிறந்த வளி வளர் கூர் எரிச் |
|
சுடர் நிமிர் நெடுங் கொடி விடர் முகை முழங்கும் |
|
'வெம் மலை அருஞ் சுரம் நீந்தி ஐய! |
|
சேறும்' என்ற சிறு சொற்கு இவட்கே, |
|
10 |
வசை இல் வெம் போர் வானவன் மறவன் |
நசையின் வாழ்நர்க்கு நன் கலம் சுரக்கும், |
|
பொய்யா வாய்வாள், புனைகழல், பிட்டன் |
|
மை தவழ் உயர் சிமைக் குதிரைக் கவாஅன் |
|
அகல் அறை நெடுஞ் சுனை, துவலையின் மலர்ந்த |
|
15 |
தண் கமழ் நீலம் போல, |
கண் பனி கலுழ்ந்தன; நோகோ யானே. |
|
பொருள்வயிற் பிரியக் கருதிய தலைமகனை, தோழி, தலைமகளது ஆற்றாமை கண்டு, செலவு அழுங்குவித்தது. - ஆலம்பேரி சாத்தனார் | |
உரை |
அன்பும், மடனும், சாயலும், இயல்பும், |
|
என்பு நெகிழ்க்கும் கிளவியும், பிறவும், |
|
ஒன்றுபடு கொள்கையொடு ஓராங்கு முயங்கி, |
|
இன்றே இவணம் ஆகி, நாளை, |
|
5 |
புதல் இவர் ஆடு அமை, தும்பி குயின்ற |
அகலா அம் துளை, கோடை முகத்தலின், |
|
நீர்க்கு இயங்கு இன நிரைப் பின்றை வார் கோல் |
|
ஆய்க் குழல் பாணியின் ஐது வந்து இசைக்கும், |
|
தேக்கு அமல் சோலைக் கடறு ஓங்கு அருஞ் சுரத்து, |
|
10 |
யாத்த தூணித் தலை திறந்தவைபோல், |
பூத்த இருப்பைக் குழை பொதி குவி இணர் |
|
கழல் துளை முத்தின் செந் நிலத்து உதிர, |
|
மழை துளி மறந்த அம் குடிச் சீறூர்ச் |
|
சேக்குவம் கொலோ நெஞ்சே! பூப் புனை |
|
15 |
புயல் என ஒலிவரும் தாழ் இருங் கூந்தல், |
செறி தொடி முன்கை, நம் காதலி |
|
அறிவு அஞர் நோக்கமும் புலவியும் நினைந்தே? |
|
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. - எயினந்தை மகனார் இளங்கீரனார் | |
உரை |
எல்லையும் இரவும், வினைவயின் பிரிந்த |
|
முன்னம், முன் உறுபு அடைய உள்ளிய |
|
பதி மறந்து உறைதல் வல்லினம் ஆயினும், |
|
அது மறந்து உறைதல் அரிது ஆகின்றே |
|
5 |
கடு வளி எடுத்த கால் கழி தேக்கிலை |
நெடு விளிப் பருந்தின் வெறி எழுந்தாங்கு, |
|
விசும்பு கண் புதையப் பாஅய், பல உடன் |
|
அகல் இடம் செல்லுநர் அறிவு கெடத் தாஅய், |
|
கவலை கரக்கும் காடு அகல் அத்தம், |
|
10 |
செய் பொருள் மருங்கின் செலவு தனக்கு உரைத்தென, |
வைகு நிலை மதியம் போல, பையென, |
|
புலம்பு கொள் அவலமொடு, புதுக் கவின் இழந்த |
|
நலம் கெழு திருமுகம் இறைஞ்சி, நிலம் கிளையா, |
|
நீரொடு பொருத ஈர் இதழ் மழைக் கண் |
|
15 |
இகுதரு தெண் பனி ஆகத்து உறைப்ப, |
கால் நிலைசெல்லாது, கழி படர்க் கலங்கி, |
|
நா நடுக்குற்ற நவிலாக் கிளவியொடு, |
|
அறல் மருள் கூந்தலின் மறையினள்,' திறல் மாண்டு |
|
திருந்துகமாதோ, நும் செலவு' என வெய்து உயிரா, |
|
20 |
பருவரல் எவ்வமொடு அழிந்த |
பெரு விதுப்புறுவி பேதுறு நிலையே. |
|
இடைச் சுரத்துப் போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -எயினந்தை மகனார் இளங்கீரனார் | |
உரை |
இரும் பிடிப் பரிசிலர் போலக் கடை நின்று, |
|
அருங் கடிக் காப்பின் அகல் நகர் ஒரு சிறை, |
|
எழுதியன்ன திண் நிலைக் கதவம் |
|
கழுது வழங்கு அரை நாள், காவலர் மடிந்தென, |
|
5 |
திறந்து நப் புணர்ந்து, 'நும்மின் சிறந்தோர் |
இம்மை உலகத்து இல்' எனப் பல் நாள் |
|
பொம்மல் ஓதி நீவிய காதலொடு, |
|
பயம் தலைப்பெயர்ந்து மாதிரம் வெம்ப, |
|
வருவழி வம்பலர்ப் பேணி, கோவலர் |
|
10 |
மழ விடைப் பூட்டிய குழாஅய்த் தீம் புளி |
செவி அடை தீரத் தேக்கிலைப் பகுக்கும் |
|
புல்லி நல் நாட்டு உம்பர், செல் அருஞ் |
|
சுரம் இறந்து ஏகினும், நீடலர் |
|
அருள் மொழித் தேற்றி, நம் அகன்றிசினோரே. |
|
பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. - மாமூலனார் | |
உரை |
'கூழையும் குறு நெறிக் கொண்டன; முலையும் |
|
சூழி மென் முகம் செப்புடன் எதிரின; |
|
பெண் துணை சான்றனள், இவள்' எனப் பல் மாண் |
|
கண் துணை ஆக நோக்கி, நெருநையும், |
|
5 |
அயிர்த்தன்றுமன்னே, நெஞ்சம்; பெயர்த்தும், |
அறியாமையின் செறியேன், யானே; |
|
பெரும் பெயர் வழுதி கூடல் அன்ன தன் |
|
அருங் கடி வியல் நகர்ச் சிலம்பும் கழியாள், |
|
சேணுறச் சென்று, வறுஞ் சுனைக்கு ஒல்கி, |
|
10 |
புறவுக் குயின்று உண்ட புன் காய் நெல்லிக் |
கோடை உதிர்த்த குவி கண் பசுங் காய், |
|
அறு நூல் பளிங்கின் துளைக் காசு கடுப்ப, |
|
வறு நிலத்து உதிரும் அத்தம், கதுமென, |
|
கூர் வேல் விடலை பொய்ப்பப் போகி, |
|
15 |
சேக்குவள் கொல்லோதானே தேக்கின் |
அகல் இலை கவித்த புதல் போல் குரம்பை, |
|
ஊன் புழுக்கு அயரும் முன்றில், |
|
கான் கெழு வாழ்நர் சிறுகுடியானே. |
|
மகட் போக்கிய தாய் சொல்லியது. - குடவாயில் கீரத்தனார் | |
உரை |
மேல் |