141. பாலை |
அம்ம வாழி, தோழி! கைம்மிகக் |
|
கனவும் கங்குல்தோறு இனிய; நனவும் |
|
புனை வினை நல் இல் புள்ளும் பாங்கின; |
|
நெஞ்சும் நனிபுகன்று உறையும்; எஞ்சாது |
|
5 |
உலகு தொழில் உலந்து, நாஞ்சில் துஞ்சி, |
மழை கால்நீங்கிய மாக விசும்பில் |
|
குறு முயல் மறு நிறம் கிளர, மதி நிறைந்து, |
|
அறுமீன் சேரும் அகல் இருள் நடு நாள்; |
|
மறுகு விளக்குறுத்து, மாலை தூக்கி, |
|
10 |
பழ விறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய |
விழவு உடன் அயர, வருகதில் அம்ம! |
|
துவரப் புலர்ந்து தூ மலர் கஞலி, |
|
தகரம் நாறும் தண் நறுங் கதுப்பின் |
|
புது மண மகடூஉ அயினிய கடி நகர்ப் |
|
15 |
பல் கோட்டு அடுப்பில் பால் உலை இரீஇ, |
கூழைக் கூந்தற் குறுந் தொடி மகளிர் |
|
பெருஞ் செய் நெல்லின் வாங்குகதிர் முறித்து, |
|
பாசவல் இடிக்கும் இருங் காழ் உலக்கைக் |
|
கடிது இடி வெரீஇய கமஞ்சூல் வெண் குருகு |
|
20 |
தீம் குலை வாழை ஓங்கு மடல் இராது; |
நெடுங் கால் மாஅத்துக் குறும் பறை பயிற்றும் |
|
செல் குடி நிறுத்த பெரும் பெயர்க் கரிகால் |
|
வெல் போர்ச் சோழன் இடையாற்று அன்ன |
|
நல் இசை வெறுக்கை தருமார், பல் பொறிப் |
|
25 |
புலிக் கேழ் உற்ற பூவிடைப் பெருஞ் சினை |
நரந்த நறும் பூ நாள் மலர் உதிர, |
|
கலை பாய்ந்து உகளும், கல் சேர் வேங்கை, |
|
தேம் கமழ் நெடு வரைப் பிறங்கிய |
|
வேங்கட வைப்பிற் சுரன் இறந்தோரே. |
|
'பிரிவிடை ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - நக்கீரர் | |
உரை |
மேல் |