நெல்லி |
அளி நிலை பொறாஅது அமரிய முகத்தள், |
|
விளி நிலை கொள்ளாள், தமியள், மென்மெல, |
|
நலம் மிகு சேவடி நிலம் வடுக் கொளாஅ, |
|
குறுக வந்து, தன் கூர் எயிறு தோன்ற |
|
5 |
வறிது அகத்து எழுந்த வாய் அல் முறுவலள், |
கண்ணியது உணரா அளவை, ஒண்ணுதல், |
|
வினை தலைப்படுதல் செல்லா நினைவுடன் |
|
முளிந்த ஓமை முதையல்அம் காட்டு, |
|
பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி, |
|
10 |
மோட்டு இரும் பாறை, ஈட்டு வட்டு ஏய்ப்ப, |
உதிர்வன படூஉம் கதிர் தெறு கவாஅன், |
|
மாய்த்த போல மழுகு நுனை தோற்றி, |
|
பாத்தியன்ன குடுமிக் கூர்ங் கல், |
|
விரல் நுதி சிதைக்கும் நிரை நிலை அதர, |
|
15 |
பரல் முரம்பு ஆகிய பயம் இல், கானம் |
இறப்ப எண்ணுதிர் ஆயின் "அறத்தாறு |
|
அன்று" என மொழிந்த தொன்றுபடு கிளவி |
|
அன்ன ஆக' என்னுநள் போல, |
|
முன்னம் காட்டி, முகத்தின் உரையா, |
|
20 |
ஓவச் செய்தியின் ஒன்று நினைந்து ஒற்றி, |
பாவை மாய்த்த பனிநீர் நோக்கமொடு, |
|
ஆகத்து ஒடுக்கிய புதல்வன் புன் தலைத் |
|
தூ நீர் பயந்த துணை அமை பிணையல் |
|
மோயினள் உயிர்த்த காலை, மா மலர் |
|
25 |
மணி உரு இழந்த அணி அழி தோற்றம் |
கண்டே கடிந்தனம், செலவே ஒண்டொடி |
|
உழையம் ஆகவும் இனைவோள் |
|
பிழையலள்மாதோ, பிரிதும் நாம் எனினே! |
|
பொருள்வயிற் பிரியக் கருதிய தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ | |
உரை |
விருந்தின் மன்னர் அருங்கலம் தெறுப்ப, |
|
வேந்தனும் வெம்பகை தணிந்தனன். தீம் பெயற் |
|
காரும் ஆர்கலி தலையின்று. தேரும் |
|
ஓவத்தன்ன கோபச் செந் நிலம், |
|
5 |
வள் வாய் ஆழி உள் உறுபு உருள, |
கடவுக. காண்குவம் பாக! மதவு நடைத் |
|
தாம்பு அசை குழவி வீங்குசுரை மடிய, |
|
கனைஅல்அம் குரல காற் பரி பயிற்றி, |
|
படு மணி மிடற்ற பய நிரை ஆயம் |
|
10 |
கொடு மடி உடையர் கோற் கைக் கோவலர் |
கொன்றைஅம் குழலர் பின்றைத் தூங்க, |
|
மனைமனைப் படரும் நனை நகு மாலை, |
|
தனக்கென வாழாப் பிறர்க்கு உரியாளன் |
|
பண்ணன் சிறுகுடிப் படப்பை நுண் இலைப் |
|
15 |
புன் காழ் நெல்லிப்பைங் காய் தின்றவர் |
நீர் குடி சுவையின் தீவிய மிழற்றி, |
|
'முகிழ் நிலாத் திகழ்தரும் மூவாத் திங்கள்! |
|
பொன்னுடைத் தாலி என் மகன் ஒற்றி, |
|
வருகுவைஆயின், தருகுவென் பால்' என, |
|
20 |
விலங்கு அமர்க் கண்ணள் விரல் விளி பயிற்றி, |
திதலை அல்குல் எம் காதலி |
|
புதல்வற் பொய்க்கும் பூங்கொடி நிலையே. |
|
வினை முடித்து மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.- மாற்றூர் கிழார் மகனார் கொற்றங் கொற்றனார் | |
உரை |
யான் எவன் செய்கோ? தோழி! பொறி வரி |
|
வானம் வாழ்த்தி பாடவும், அருளாது |
|
உறை துறந்து எழிலி நீங்கலின், பறைபு உடன், |
|
மரம் புல்லென்ற முரம்பு உயர் நனந்தலை, |
|
5 |
அரம் போழ் நுதிய வாளி அம்பின், |
நிரம்பா நோக்கின், நிரயம் கொண்மார், |
|
நெல்லி நீளிடை எல்லி மண்டி, |
|
நல் அமர்க் கடந்த நாணுடை மறவர் |
|
பெயரும் பீடும் எழுதி, அதர்தொறும் |
|
10 |
பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல் |
வேல் ஊன்று பலகை வேற்று முனை கடுக்கும் |
|
மொழி பெயர் தேஎம் தருமார், மன்னர் |
|
கழிப் பிணிக் கறைத்தோல் நிரை கண்டன்ன |
|
உவல் இடு பதுக்கை ஆள் உகு பறந்தலை, |
|
15 |
'உரு இல் பேஎய் ஊராத் தேரொடு |
நிலம் படு மின்மினி போல, பல உடன் |
|
இலங்கு பரல் இமைக்கும்' என்ப நம் |
|
நலம் துறந்து உறைநர் சென்ற ஆறே! |
|
பொருள்வயிற் பிரிந்தவழி வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - நோய்பாடியார் | |
உரை |
ஆய்நலம் தொலைந்த மேனியும், மா மலர்த் |
|
தகை வனப்பு இழந்த கண்ணும், வகை இல |
|
வண்ணம் வாடிய வரியும், நோக்கி, |
|
ஆழல் ஆன்றிசின் நீயே. உரிதினின் |
|
5 |
ஈதல் இன்பம் வெஃகி, மேவரச் |
செய் பொருள் திறவர் ஆகி, புல் இலைப் |
|
பராரை நெல்லி அம் புளித் திரள் காய் |
|
கான மட மரைக் கணநிரை கவரும் |
|
வேனில் அத்தம் என்னாது, ஏமுற்று, |
|
10 |
விண் பொரு நெடுங் குடை இயல் தேர் மோரியர் |
பொன் புனை திகிரி திரிதரக் குறைத்த |
|
அறை இறந்து அகன்றனர்ஆயினும், எனையதூஉம் |
|
நீடலர் வாழி, தோழி! ஆடு இயல் |
|
மட மயில் ஒழித்த பீலி வார்ந்து, தம் |
|
15 |
சிலை மாண் வல் வில் சுற்றி, பல மாண் |
அம்புடைக் கையர் அரண் பல நூறி, |
|
நன்கலம் தரூஉம் வயவர் பெருமகன் |
|
சுடர் மணிப் பெரும் பூண் ஆஅய் கானத்துத் |
|
தலை நாள் அலரின் நாறும் நின் |
|
20 |
அலர் முலை ஆகத்து இன் துயில் மறந்தே. |
'பொருள்வயிற் பிரிந்து நீட்டித்தான், தலைமகன்' எனக் கவன்ற தலைமகட்கு, 'வருவர்' என்பது படச் சொல்லித் தோழி ஆற்றுவித்தது.- உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார் | |
உரை |
'துனி இன்று இயைந்த துவரா நட்பின் |
|
இனியர் அம்ம, அவர்' என முனியாது |
|
நல்குவர் நல்ல கூறினும், அல்கலும், |
|
பிரியாக் காதலொடு உழையர் ஆகிய |
|
5 |
நமர்மன் வாழி, தோழி! உயர்மிசை |
மூங்கில் இள முளை திரங்க, காம்பின் |
|
கழை நரல் வியல் அகம் வெம்ப, மழை மறந்து |
|
அருவி ஆன்ற வெருவரு நனந்தலை, |
|
பேஎய் வெண் தேர் பெயல் செத்து ஓடி, |
|
10 |
தாஅம் பட்ட தனி முதிர் பெருங் கலை |
புலம் பெயர்ந்து உறைதல் செல்லாது, அலங்குதலை |
|
விருந்தின் வெங் காட்டு வருந்தி வைகும் |
|
அத்த நெல்லித் தீஞ் சுவைத் திரள் காய் |
|
வட்டக் கழங்கின் தாஅய், துய்த் தலைச் |
|
15 |
செம் முக மந்தி ஆடும் |
நல் மர மருங்கின் மலை இறந்தோரே! |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகள் வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது. - காவன் முல்லைப் பூதனார் | |
உரை |
பொறி வரிப் புறவின் செங் காற் சேவல் |
|
சிறு புன் பெடையொடு சேண் புலம் போகி, |
|
அரி மணல் இயவில் பரல் தேர்ந்து உண்டு, |
|
வரி மரல் வாடிய வான் நீங்கு நனந்தலைக் |
|
5 |
குறும்பொறை மருங்கின் கோட் சுரம் நீந்தி, |
நெடுஞ் சேண் வந்த நீர் நசை வம்பலர் |
|
செல் உயிர் நிறுத்த சுவைக் காய் நெல்லிப் |
|
பல் காய் அம் சினை அகவும் அத்தம் |
|
சென்று, நீர் அவணிர் ஆகி, நின்று தரு |
|
10 |
நிலை அரும் பொருட் பிணி நினைந்தனிர்எனினே, |
வல்வதாக, நும் செய் வினை! இவட்கே, |
|
களி மலி கள்ளின் நல் தேர் அவியன் |
|
ஆடு இயல் இள மழை சூடித் தோன்றும் |
|
பழம் தூங்கு விடரகத்து எழுந்த காம்பின் |
|
15 |
கண் இடை புரையும் நெடு மென் பணைத் தோள், |
திருந்து கோல் ஆய் தொடி ஞெகிழின், |
|
மருந்தும் உண்டோ, பிரிந்து உறை நாட்டே? |
|
செலவு உணர்த்திய தோழி, தலைமகளது குறிப்பு அறிந்து, தலைமகனைச் செலவு அழுங்கச் சொல்லியது. - காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார் | |
உரை |
சிறியிலை நெல்லிக் காய் கண்டன்ன |
|
குறு விழிக் கண்ண கூரல் அம் குறு முயல் |
|
முடந்தை வரகின் வீங்கு பீள் அருந்துபு, |
|
குடந்தை அம் செவிய கோட் பவர் ஒடுங்கி, |
|
5 |
இன் துயில் எழுந்து, துணையொடு போகி, |
முன்றில் சிறு நிறை நீர் கண்டு உண்ணும் |
|
புன் புலம் தழீஇய பொறைமுதல் சிறு குடி, |
|
தினைக் கள் உண்ட தெறி கோல் மறவர், |
|
விசைத்த வில்லர், வேட்டம் போகி, |
|
10 |
முல்லைப் படப்பைப் புல்வாய் கெண்டும் |
காமர் புறவினதுவே காமம் |
|
நம்மினும் தான் தலைமயங்கிய |
|
அம் மா அரிவை உறைவு இன் ஊரே. |
|
வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது; தன் நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம். - இடைக்காடனார் | |
உரை |
வானம் பெயல் வளம் கரப்ப, கானம் |
|
உலறி இலை இலவாக, பல உடன் |
|
ஏறுடை ஆயத்து இனம் பசி தெறுப்ப, |
|
கயன் அற வறந்த கோடையொடு நயன் அறப் |
|
5 |
பெரு வரை நிவந்த மருங்கில், கொடு வரிப் |
புலியொடு பொருது சினம் சிறந்து, வலியோடு |
|
உரவுக் களிறு ஒதுங்கிய மருங்கில், பரூஉப் பரல், |
|
சிறு பல் மின்மினி கடுப்ப, எவ்வாயும் |
|
நிறைவன இமைக்கும் நிரம்பா நீள் இடை |
|
10 |
எருவை இருஞ் சிறை இரீஇய, விரி இணர்த் |
தாது உண் தும்பி முரல் இசை கடுப்ப, |
|
பரியினது உயிர்க்கும் அம்பினர், வெருவர |
|
உவலை சூடிய தலையர், கவலை |
|
ஆர்த்து, உடன் அரும் பொருள் வவ்வலின், யாவதும் |
|
15 |
சாத்து இடை வழங்காச் சேண் சிமை அதர |
சிறியிலை நெல்லித் தீம் சுவைத் திரள் காய் |
|
உதிர்வன தாஅம் அத்தம் தவிர்வு இன்று, |
|
புள்ளி அம் பிணை உணீஇய உள்ளி, |
|
அறு மருப்பு ஒழித்த தலைய, தோல் பொதி, |
|
20 |
மறு மருப்பு இளங் கோடு அதிரக் கூஉம் |
சுடர் தெற வருந்திய அருஞ் சுரம் இறந்து, ஆங்கு |
|
உள்ளினை வாழிய, நெஞ்சே! போது எனப் |
|
புலம் கமழ் நாற்றத்து இரும் பல் கூந்தல், |
|
நல் எழில், மழைக் கண், நம் காதலி |
|
25 |
மெல் இறைப் பணைத்தோள் விளங்கும் மாண் கவினே. |
பொருள்வயிற் போகாநின்ற தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லி யது. - பாலை பாடிய பெருங் கடுங்கோ | |
உரை |
'கூழையும் குறு நெறிக் கொண்டன; முலையும் |
|
சூழி மென் முகம் செப்புடன் எதிரின; |
|
பெண் துணை சான்றனள், இவள்' எனப் பல் மாண் |
|
கண் துணை ஆக நோக்கி, நெருநையும், |
|
5 |
அயிர்த்தன்றுமன்னே, நெஞ்சம்; பெயர்த்தும், |
அறியாமையின் செறியேன், யானே; |
|
பெரும் பெயர் வழுதி கூடல் அன்ன தன் |
|
அருங் கடி வியல் நகர்ச் சிலம்பும் கழியாள், |
|
சேணுறச் சென்று, வறுஞ் சுனைக்கு ஒல்கி, |
|
10 |
புறவுக் குயின்று உண்ட புன் காய் நெல்லிக் |
கோடை உதிர்த்த குவி கண் பசுங் காய், |
|
அறு நூல் பளிங்கின் துளைக் காசு கடுப்ப, |
|
வறு நிலத்து உதிரும் அத்தம், கதுமென, |
|
கூர் வேல் விடலை பொய்ப்பப் போகி, |
|
15 |
சேக்குவள் கொல்லோதானே தேக்கின் |
அகல் இலை கவித்த புதல் போல் குரம்பை, |
|
ஊன் புழுக்கு அயரும் முன்றில், |
|
கான் கெழு வாழ்நர் சிறுகுடியானே. |
|
மகட் போக்கிய தாய் சொல்லியது. - குடவாயில் கீரத்தனார் | |
உரை |
நிரை செலல் இவுளி விரைவுடன் கடைஇ, |
|
அகல் இரு விசும்பில் பகல் செலச் சென்று, |
|
மழுகு சுடர் மண்டிலம் மா மலை மறைய, |
|
பொழுது கழி மலரின், புனையிழை! சாஅய், |
|
5 |
அணை அணைந்து இனையை ஆகல் கணை அரைப் |
புல் இலை நெல்லிப் புகர் இல் பசுங் காய் |
|
கல் அதர் மருங்கில் கடு வளி உதிர்ப்ப, |
|
பொலம் செய் காசின் பொற்பத் தாஅம் |
|
அத்தம் நண்ணி, அதர் பார்த்து இருந்த |
|
10 |
கொலை வெங் கொள்கைக் கொடுந் தொழில் மறவர் |
ஆறு செல் மாக்கள் அரு நிறத்து எறிந்த |
|
எஃகு உறு விழுப்புண் கூர்ந்தோர் எய்திய, |
|
வளை வாய்ப் பருந்தின், வள் உகிர்ச் சேவல் |
|
கிளை தரு தெள் விளி கெழு முடைப் பயிரும் |
|
15 |
இன்னா வெஞ் சுரம் இறந்தோர், முன்னிய |
செய் வினை வலத்தர் ஆகி, இவண் நயந்து, |
|
எய்த வந்தனரே தோழி! மை எழில் |
|
துணை ஏர் எதிர் மலர் உண்கண் |
|
பிணை ஏர் நோக்கம் பெருங் கவின் கொளவே. |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. - மதுரைப் பொன்செய் கொல்லன் வெண்ணாகனார் | |
உரை |
தன் ஓரன்ன ஆயமும், மயில் இயல் |
|
என் ஓரன்ன தாயரும், காண, |
|
கை வல் யானைக் கடுந் தேர்ச் சோழர் |
|
காவிரிப் படப்பை உறந்தை அன்ன |
|
5 |
பொன்னுடை நெடு நகர், புரையோர் அயர, |
நல் மாண் விழவில் தகரம் மண்ணி, |
|
யாம் பல புணர்ப்பச் சொல்லாள், காம்பொடு |
|
நெல்லி நீடிய கல் அறைக் கவாஅன், |
|
அத்த ஆலத்து அலந்தலை நெடு வீழ் |
|
10 |
தித்திக் குறங்கில் திருந்த உரிஞ, |
வளையுடை முன்கை அளைஇ, கிளைய |
|
பயில் இரும் பிணையல் பசுங் காழ்க் கோவை |
|
அகல் அமை அல்குல் பற்றி, கூந்தல் |
|
ஆடு மயில் பீலியின் பொங்க, நன்றும், |
|
15 |
தான் அமர் துணைவன் ஊக்க, ஊங்கி, |
உள்ளாது கழிந்த முள் எயிற்றுத் துவர் வாய்ச் |
|
சிறு வன்கண்ணி சிலம்பு கழீஇ, |
|
அறியாத் தேஎத்தள் ஆகுதல் கொடிதே. |
|
மகட் போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - குடவாயிற் கீரத்தனார் | |
உரை |
சிமையக் குரல சாந்து அருந்தி, இருளி, |
|
இமையக் கானம் நாறும் கூந்தல், |
|
நல் நுதல், அரிவை! இன் உறல் ஆகம் |
|
பருகுவன்ன காதல் உள்ளமொடு, |
|
5 |
திருகுபு முயங்கல் இன்றி, அவண் நீடார் |
கடற்று அடை மருங்கின் கணிச்சியின் குழித்த |
|
உடைக்கண் நீடு அமை ஊறல் உண்ட, |
|
பாடு இன் தெண் மணி, பயம் கெழு பெரு நிரை |
|
வாடு புலம் புக்கென, கோடு துவைத்து அகற்றி, |
|
10 |
ஒல்கு நிலைக் கடுக்கை அல்கு நிழல் அசைஇ, |
பல் ஆன் கோவலர் கல்லாது ஊதும் |
|
சிறு வெதிர்ந் தீம் குழற் புலம்பு கொள் தெள் விளி, |
|
மை இல் பளிங்கின் அன்ன தோற்றப் |
|
பல் கோள் நெல்லிப் பைங் காய் அருந்தி, |
|
15 |
மெல்கிடு மட மரை ஓர்க்கும் அத்தம், |
காய் கதிர் கடுகிய கவின் அழி பிறங்கல், |
|
வேய் கண் உடைந்த சிமைய, |
|
வாய் படு மருங்கின் மலை இறந்தோரே. |
|
தலைமகன் பிரிவின்கண் தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - எயினந்தை மகனார் இளங்கீரனார் | |
உரை |
மேல் |