மரா(கடம்ப மரம்) |
இருங் கழி முதலை மேஎந்தோல் அன்ன |
|
கருங் கால் ஓமைக் காண்பு இன் பெருஞ் சினைக் |
|
கடியுடை நனந்தலை, ஈன்று இளைப்பட்ட, |
|
கொடு வாய்ப் பேடைக்கு அல்குஇரை தரீஇய, |
|
5 |
மான்று வேட்டு எழுந்த செஞ் செவி எருவை |
வான் தோய் சிமைய விறல் வரைக் கவாஅன், |
|
துளங்கு நடை மரையா வலம் படத் தொலைச்சி, |
|
ஒண் செங் குருதி உவற்றி உண்டு அருந்துபு, |
|
புலவுப் புலி துறந்த கலவுக் கழி கடு முடை, |
|
10 |
கொள்ளை மாந்தரின் ஆனாது கவரும் |
புல் இலை மராஅத்த அகன் சேண் அத்தம், |
|
கலம் தரல் உள்ளமொடு கழியக் காட்டி, |
|
பின் நின்று துரக்கும் நெஞ்சம்! நின் வாய் |
|
வாய்போல் பொய்ம்மொழி எவ்வம் என் களைமா |
|
15 |
கவிர் இதழ் அன்ன காண்பு இன் செவ் வாய், |
அம் தீம் கிளவி, ஆய் இழை, மடந்தை |
|
கொடுங் குழைக்கு அமர்த்த நோக்கம் |
|
நெடுஞ் சேண் ஆர் இடை விலங்கும் ஞான்றே? |
|
முன் ஒரு காலத்து, நெஞ்சினால் பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்தான், தலைமகன்; பிரிந்து இடைச் சுரத்தினின்று அவள் நலம் நயந்து மீளலுற்ற நெஞ்சினைக் கழறிப்போய், பொருள் முடித்து வந்த தலைமகன், பின்னும் பொருள் வலிக்கப்பட்ட நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது. - எயினந்தை மகனார் இளங்கீரனார். | |
உரை |
'மனை இள நொச்சி மௌவல் வால் முகைத் |
|
துணை நிரைத்தன்ன, மா வீழ், வெண் பல், |
|
அவ் வயிற்று, அகன்ற அல்குல், தைஇத் |
|
தாழ் மென் கூந்தல், தட மென் பணைத் தோள், |
|
5 |
மடந்தை மாண் நலம் புலம்ப, சேய் நாட்டுச் |
செல்லல்' என்று, யான் சொல்லவும், ஒல்லாய், |
|
வினை நயந்து அமைந்தனைஆயின், மனை நகப் |
|
பல் வேறு வெறுக்கை தருகம் வல்லே, |
|
எழு இனி, வாழி, என் நெஞ்சே! புரி இணர் |
|
10 |
மெல் அவிழ் அம் சினை புலம்ப, வல்லோன் |
கோடு அறை கொம்பின் வீ உகத் தீண்டி, |
|
மராஅம் அலைத்த மண வாய்த் தென்றல், |
|
சுரம் செல் மள்ளர் சுரியல் தூற்றும், |
|
என்றூழ் நின்ற புன் தலை வைப்பில், |
|
15 |
பருந்து இளைப்படூஉம் பாறு தலை ஓமை |
இருங் கல் விடரகத்து, ஈன்று இளைப்பட்ட, |
|
மென் புனிற்று அம் பிணவு பசித்தென, பைங் கட் |
|
செந்நாய் ஏற்றை கேழல் தாக்க, |
|
இரியற் பிணவல் தீண்டலின், பரீஇச் |
|
20 |
செங் காய் உதிர்ந்த பைங் குலை ஈந்தின் |
பரல் மண் சுவல முரண் நிலம் உடைத்த |
|
வல் வாய்க் கணிச்சி, கூழ் ஆர், கோவலர் |
|
ஊறாது இட்ட உவலைக் கூவல், |
|
வெண் கோடு நயந்த அன்பு இல் கானவர் |
|
25 |
இகழ்ந்து இயங்கு இயவின் அகழ்ந்த குழி செத்து, |
இருங் களிற்று இன நிரை, தூர்க்கும் |
|
பெருங் கல் அத்தம் விலங்கிய காடே. |
|
பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்த தலைமகன் இடைச் சுரத்துநின்று மீளலுற்ற நெஞ்சினைக் கழறியது. - காவன்முல்லைப் பூதனார் | |
உரை |
நாள் உலா எழுந்த கோள் வல் உளியம் |
|
ஓங்குசினை இருப்பைத் தீம் பழம் முனையின், |
|
புல் அளைப் புற்றின் பல் கிளைச் சிதலை |
|
ஒருங்கு முயன்று எடுத்த நனை வாய் நெடுங் கோடு, |
|
5 |
இரும்பு ஊது குருகின், இடந்து, இரை தேரும் |
மண் பக வறந்த ஆங்கண், கண் பொரக் |
|
கதிர் தெற, கவிழ்ந்த உலறுதலை நோன் சினை |
|
நெறி அயல் மராஅம் ஏறி, புலம்பு கொள |
|
எறி பருந்து உயவும் என்றூழ் நீள் இடை |
|
10 |
வெம் முனை அருஞ் சுரம் நீந்தி சிறந்த |
செம்மல் உள்ளம் துரத்தலின், கறுத்தோர் |
|
ஒளிறு வேல் அழுவம் களிறு படக் கடக்கும் |
|
மா வண் கடலன் விளங்கில் அன்ன, எம் |
|
மை எழில் உண்கண் கலுழ |
|
15 |
ஐய! சேறிரோ, அகன்று செய் பொருட்கே? |
பிரிவுணர்த்திய தலைமகற்கு, தோழி தலைமகள் குறிப்பறிந்து வந்து சொல்லியது. - ஆலம்பேரி சாத்தனார் | |
உரை |
வலம் சுரி மராஅத்துச் சுரம் கமழ் புது வீச் |
|
சுரி ஆர் உளைத் தலை பொலியச் சூடி, |
|
கறை அடி மடப் பிடி கானத்து அலற, |
|
களிற்றுக் கன்று ஒழித்த உவகையர், கலி சிறந்து, |
|
5 |
கருங் கால் மராஅத்துக் கொழுங் கொம்பு பிளந்து, |
பெரும் பொளி வெண் நார் அழுந்துபடப் பூட்டி, |
|
நெடுங் கொடி நுடங்கும் நியம மூதூர், |
|
நறவு நொடை நல் இல் புதவுமுதற் பிணிக்கும் |
|
கல்லா இளையர் பெருமகன் புல்லி |
|
10 |
வியன் தலை நல் நாட்டு வேங்கடம் கழியினும், |
சேயர் என்னாது, அன்பு மிகக் கடைஇ, |
|
எய்த வந்தனவால்தாமே நெய்தல் |
|
கூம்பு விடு நிகர் மலர் அன்ன |
|
ஏந்து எழில் மழைக் கண் எம் காதலி குணனே. |
|
தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - கல்லாடனார் | |
உரை |
நாம் நகை உடையம் நெஞ்சே! கடுந் தெறல் |
|
வேனில் நீடிய வான் உயர் வழிநாள், |
|
வறுமை கூரிய மண் நீர்ச் சிறு குளத் |
|
தொடுகுழி மருங்கில் துவ்வாக் கலங்கல் |
|
5 |
கன்றுடை மடப் பிடிக் கயந்தலை மண்ணி, |
சேறு கொண்டு ஆடிய வேறுபடு வயக் களிறு |
|
செங் கோல் வால் இணர் தயங்கத் தீண்டி, |
|
சொரி புறம் உரிஞிய நெறி அயல் மரா அத்து |
|
அல்குறு வரி நிழல் அசைஇ, நம்மொடு |
|
10 |
தான் வரும் என்ப, தட மென் தோளி |
உறுகண் மழவர் உருள் கீண்டிட்ட |
|
ஆறு செல் மாக்கள் சோறு பொதி வெண் குடை |
|
கனை விசைக் கடு வளி எடுத்தலின், துணை செத்து |
|
வெருள் ஏறு பயிரும் ஆங்கண், |
|
15 |
கரு முக முசுவின் கானத்தானே. |
தோழியால் தலைமகளை உடன்வரும் எனக் கேட்ட தலைமகன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகன் | |
உரை |
இலங்கு வளை நெகிழச் சாஅய், அல்கலும், |
|
கலங்குஅஞர் உழந்து, நாம் இவண் ஒழிய |
|
வலம் படு முரசிற் சேரலாதன் |
|
முந்நீர் ஓட்டிக் கடம்பு அறுத்து, இமயத்து |
|
5 |
முன்னோர் மருள வணங்குவில் பொறித்து, |
நல் நகர் மரந்தை முற்றத்து ஒன்னார் |
|
பணி திறை தந்த பாடுசால் நன்கலம் |
|
பொன்செய் பாவை வயிரமொடு ஆம்பல் |
|
ஒன்று வாய் நிறையக் குவைஇ, அன்று அவண் |
|
10 |
நிலம் தினத் துறந்த நிதியத்து அன்ன |
ஒரு நாள் ஒரு பகற் பெறினும், வழிநாள் |
|
தங்கலர் வாழி, தோழி! செங் கோற் |
|
கருங் கால் மராத்து வாஅல் மெல் இணர் |
|
சுரிந்து வணர் பித்தை பொலியச் சூடி, |
|
15 |
கல்லா மழவர் வில் இடம் தழீஇ, |
வருநர்ப் பார்க்கும் வெருவரு கவலை |
|
மொழி பெயர் தேஎத்தர் ஆயினும், |
|
பழி தீர் காதலர் சென்ற நாட்டே. |
|
பிரிவிடை ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - மாமூலனார் | |
உரை |
'உரும் உரறு கருவிய பெரு மழை தலைஇ, |
|
பெயல் ஆன்று அவிந்த தூங்குஇருள் நடுநாள், |
|
மின்னு நிமிர்ந்தன்ன கனங்குழை இமைப்ப, |
|
பின்னு விடு நெறியின் கிளைஇய கூந்தலள், |
|
5 |
வரை இழி மயிலின் ஒல்குவனள் ஒதுங்கி, |
மிடை ஊர்பு இழிய, கண்டனென், இவள்' என |
|
அலையல் வாழி! வேண்டு, அன்னை! நம் படப்பைச் |
|
சூருடைச் சிலம்பில், சுடர்ப்பூ வேய்ந்து |
|
தாம் வேண்டு உருவின் அணங்குமார் வருமே; |
|
10 |
நனவின் வாயே போலத் துஞ்சுநர்க் |
கனவு ஆண்டு மருட்டலும் உண்டே; இவள்தான் |
|
சுடர் இன்று தமியளும் பனிக்கும்; வெருவர |
|
மன்ற மராஅத்த கூகை குழறினும், |
|
நெஞ்சு அழிந்து அரணம் சேரும்; அதன்தலைப் |
|
15 |
புலிக் கணத்தன்ன நாய் தொடர்விட்டு, |
முருகன் அன்ன சீற்றத்துக் கடுந் திறல் |
|
எந்தையும் இல்லன் ஆக, |
|
அஞ்சுவள் அல்லளோ, இவள் இது செயலே? |
|
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி செவிலித்தாய்க்குச் சொல்லுவாளாய்,தலைமகன் கேட்பச் சொல்லியது. - கபிலர் | |
உரை |
வாரணம் உரறும் நீர் திகழ் சிலம்பில் |
|
பிரசமொடு விரைஇய வயங்கு வெள் அருவி |
|
இன் இசை இமிழ் இயம் கடுப்ப, இம்மெனக் |
|
கல் முகை விடர்அகம் சிலம்ப, வீழும் |
|
5 |
காம்பு தலைமணந்த ஓங்கு மலைச் சாரல்; |
இரும்பு வடித்தன்ன கருங் கைக் கானவன் |
|
விரி மலர் மராஅம் பொருந்தி, கோல் தெரிந்து, |
|
வரி நுதல் யானை அரு நிறத்து அழுத்தி, |
|
இகல் அடு முன்பின் வெண் கோடு கொண்டு, தன் |
|
10 |
புல் வேய் குரம்பை புலர ஊன்றி, |
முன்றில் நீடிய முழவு உறழ் பலவில், |
|
பிழி மகிழ் உவகையன், கிளையொடு கலி சிறந்து, |
|
சாந்த ஞெகிழியின் ஊன் புழுக்கு அயரும் |
|
குன்ற நாட! நீ அன்பிலை ஆகுதல் |
|
15 |
அறியேன் யான்; அஃது அறிந்தனென்ஆயின் |
அணி இழை, உண்கண், ஆய் இதழ்க் குறுமகள் |
|
மணி ஏர் மாண் நலம் சிதைய, |
|
பொன் நேர் பசலை பாவின்றுமன்னே! |
|
தோழி தலைமகளை இடத்து உய்த்து வந்து, தலைமகனை வரைவு கடாயது. -மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார் | |
உரை |
கரை பாய் வெண் திரை கடுப்ப, பல உடன், |
|
நிரை கால் ஒற்றலின், கல் சேர்பு உதிரும் |
|
வரை சேர் மராஅத்து ஊழ் மலர் பெயல் செத்து, |
|
உயங்கல் யானை நீர் நசைக்கு அலமர, |
|
5 |
சிலம்பி வலந்த வறுஞ் சினை வற்றல் |
அலங்கல் உலவை அரி நிழல் அசைஇ, |
|
திரங்குமரல் கவ்விய கையறு தொகுநிலை, |
|
அரம் தின் ஊசித் திரள் நுதி அன்ன, |
|
திண் நிலை எயிற்ற செந்நாய் எடுத்தலின், |
|
10 |
வளி முனைப் பூளையின் ஒய்யென்று அலறிய |
கெடுமான் இன நிரை தரீஇய, கலையே |
|
கதிர் மாய் மாலை ஆண் குரல் விளிக்கும் |
|
கடல் போல் கானம் பிற்பட, 'பிறர் போல் |
|
செல்வேம்ஆயின், எம் செலவு நன்று' என்னும் |
|
15 |
ஆசை உள்ளம் அசைவின்று துரப்ப, |
நீ செலற்கு உரியை நெஞ்சே! வேய் போல் |
|
தடையின மன்னும், தண்ணிய, திரண்ட, |
|
பெருந் தோள் அரிவை ஒழிய, குடாஅது, |
|
இரும் பொன் வாகைப் பெருந்துறைச் செருவில், |
|
20 |
பொலம் பூண் நன்னன் பொருது களத்து ஒழிய, |
வலம் படு கொற்றம் தந்த வாய் வாள், |
|
களங்காய்க் கண்ணி நார் முடிச் சேரல் |
|
இழந்த நாடு தந்தன்ன |
|
வளம் பெரிது பெறினும், வாரலென் யானே. |
|
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. - கல்லாடனார் | |
உரை |
கேளாய், எல்ல! தோழி! வாலிய |
|
சுதை விரிந்தன்ன பல் பூ மராஅம் |
|
பறை கண்டன்ன பா அடி நோன் தாள் |
|
திண் நிலை மருப்பின் வயக் களிறு உரிஞுதொறும், |
|
5 |
தண் மழை ஆலியின் தாஅய், உழவர் |
வெண்ணெல் வித்தின் அறைமிசை உணங்கும் |
|
பனி படு சோலை வேங்கடத்து உம்பர், |
|
மொழி பெயர் தேஎத்தர் ஆயினும், நல்குவர் |
|
குழியிடைக் கொண்ட கன்றுடைப் பெரு நிரை |
|
10 |
பிடி படு பூசலின் எய்தாது ஒழிய, |
கடுஞ் சின வேந்தன் ஏவலின் எய்தி, |
|
நெடுஞ் சேண் நாட்டில் தலைத்தார்ப் பட்ட |
|
கல்லா எழினி பல் எறிந்து அழுத்திய |
|
வன்கண் கதவின் வெண்மணி வாயில், |
|
15 |
மத்தி நாட்டிய கல் கெழு பனித் துறை, |
நீர் ஒலித்தன்ன பேஎர் |
|
அலர் நமக்கு ஒழிய, அழப் பிரிந்தோரே. |
|
பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு தோழி சொல்லியது. -மாமூலனார் | |
உரை |
நனை விளை நறவின் தேறல் மாந்தி, |
|
புனை வினை நல் இல் தரு மணல் குவைஇ, |
|
'பொம்மல் ஓதி எம் மகள் மணன்' என, |
|
வதுவை அயர்ந்தனர் நமரே; அதனால், |
|
5 |
புதுவது புனைந்த சேயிலை வெள் வேல், |
மதி உடம்பட்ட மை அணற் காளை |
|
வாங்கு சினை மலிந்த திரள் அரை மராஅத்து, |
|
தேம் பாய் மெல் இணர் தளிரொடு கொண்டு, நின் |
|
தண் நறு முச்சி புனைய, அவனொடு |
|
10 |
கழை கவின் போகிய மழை உயர் நனந்தலை, |
களிற்று இரை பிழைத்தலின், கய வாய் வேங்கை |
|
காய் சினம் சிறந்து, குழுமலின் வெரீஇ, |
|
இரும் பிடி இரியும் சோலை |
|
அருஞ் சுரம் சேறல் அயர்ந்தனென், யானே. |
|
தலைமகற்குப் போக்கு உடன்பட்ட தோழி தலைமகட்குப் போக்கு உடன்படச் சொல்லியது. - கயமனார் | |
உரை |
வேனிற் பாதிரிக் கூனி மா மலர் |
|
நறை வாய் வாடல் நாறும் நாள், சுரம், |
|
அரி ஆர் சிலம்பின் சீறடி சிவப்ப, |
|
எம்மொடு ஓர் ஆறு படீஇயர், யாழ நின் |
|
5 |
பொம்மல் ஓதி பொதுள வாரி, |
அரும்பு அற மலர்ந்த ஆய் பூ மராஅத்துச் |
|
சுரும்பு சூழ் அலரி தைஇ, வேய்ந்த நின் |
|
தேம் பாய் கூந்தல் குறும் பல மொசிக்கும் |
|
வண்டு கடிந்து ஓம்பல் தேற்றாய், அணி கொள |
|
10 |
நுண் கோல் எல் வளை தெளிர்க்கும் முன்கை |
மெல் இறைப் பணைத் தோள் விளங்க வீசி, |
|
வல்லுவைமன்னால் நடையே கள்வர் |
|
பகை மிகு கவலைச் செல் நெறி காண்மார், |
|
மிசை மரம் சேர்த்திய கவை முறி யாஅத்து, |
|
15 |
நார் அரை மருங்கின் நீர் வரப் பொளித்து, |
களிறு சுவைத்திட்ட கோதுடைத் ததரல் |
|
கல்லா உமணர்க்குத் தீ மூட்டு ஆகும், |
|
துன்புறு தகுவன ஆங்கண், புன் கோட்டு |
|
அரில் இவர் புற்றத்து அல்கு இரை நசைஇ, |
|
20 |
வெள் அரா மிளிர வாங்கும் |
பிள்ளை எண்கின் மலைவயினானே. |
|
உடன் போகாநின்ற தலைமகட்குத் தலைமகன் சொல்லியது. - உறையூர் மருத்துவன் தாமோதரனார் | |
உரை |
' "மாக விசும்பின் மழை தொழில் உலந்தென, |
|
பாஅய் அன்ன பகல் இருள் பரப்பி, |
|
புகை நிற உருவின் அற்சிரம் நீங்க, |
|
குவிமுகை முருக்கின் கூர் நுனை வை எயிற்று |
|
5 |
நகை முக மகளிர் ஊட்டு உகிர் கடுக்கும் |
முதிராப் பல் இதழ் உதிரப் பாய்ந்து, உடன் |
|
மலர் உண் வேட்கையின் சிதர் சிதர்ந்து உகுப்ப, |
|
பொன் செய் கன்னம் பொலிய, வெள்ளி |
|
நுண் கோல் அறை குறைந்து உதிர்வன போல, |
|
10 |
அரவ வண்டினம் ஊதுதொறும் குரவத்து |
ஓங்கு சினை நறு வீ கோங்கு அலர் உறைப்ப, |
|
துவைத்து எழு தும்பி, தவிர் இசை விளரி |
|
புதைத்து விடு நரம்பின், இம்மென இமிரும் |
|
ஆன் ஏமுற்ற காமர் வேனில், |
|
15 |
வெயில் அவிர் புரையும் வீ ததை மராஅத்துக் |
குயில் இடு பூசல் எம்மொடு கேட்ப |
|
வருவேம்" என்ற பருவம் ஆண்டை |
|
இல்லைகொல்?' என மெல்ல நோக்கி, |
|
நினைந்தனம் இருந்தனமாக, நயந்து ஆங்கு |
|
20 |
உள்ளிய மருங்கின் உள்ளம் போல, |
வந்து நின்றனரே காதலர்; நந் துறந்து |
|
என்னுழியதுகொல் தானே பல் நாள் |
|
அன்னையும் அறிவுற அணங்கி, |
|
நல் நுதல் பாஅய பசலை நோயே? |
|
தலைமகன் வரவு உணர்ந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. - வடமோதங் கிழார் | |
உரை |
இருள் படு நெஞ்சத்து இடும்பை தீர்க்கும் |
|
அருள் நன்கு உடையர்ஆயினும் ஈதல் |
|
பொருள் இல்லோர்க்கு அஃது இயையாதுஆகுதல் |
|
யானும் அறிவென்மன்னே; யானை தன் |
|
5 |
கொல் மருப்பு ஒடியக் குத்தி, சினம் சிறந்து, |
இன்னா வேனில் இன் துணை ஆர, |
|
முளி சினை மராஅத்துப் பொளி பிளந்து ஊட்ட, |
|
புலம்பு வீற்றிருந்த நிலம் பகு வெஞ் சுரம் |
|
அரிய அல்லமன், நமக்கே விரி தார் |
|
10 |
ஆடு கொள் முரசின் அடு போர்ச் செழியன் |
மாட மூதூர் மதிற்புறம் தழீஇ, |
|
நீடு வெயில் உழந்த குறியிறைக் கணைக் கால், |
|
தொடை அமை பன் மலர்த் தோடு பொதிந்து யாத்த |
|
குடை ஓரன்ன கோள் அமை எருத்தின் |
|
15 |
பாளை பற்று அழிந்து ஒழிய, புறம் சேர்பு, |
வாள் வடித்தன்ன வயிறுடைப் பொதிய, |
|
நாள் உறத் தோன்றிய நயவரு வனப்பின், |
|
ஆரத்து அன்ன அணி கிளர் புதுப் பூ |
|
வார் உறு கவரியின் வண்டு உண விரிய, |
|
20 |
முத்தின் அன்ன வெள் வீ தாஅய், |
அலகின் அன்ன அரி நிறத்து ஆலி |
|
நகை நனி வளர்க்கும் சிறப்பின், தகை மிகப் |
|
பூவொடு வளர்ந்த மூவாப் பசுங் காய் |
|
நீரினும் இனிய ஆகி, கூர் எயிற்று |
|
25 |
அமிழ்தம் ஊறும் செவ் வாய், |
ஒண் தொடி, குறுமகட் கொண்டனம் செலினே! |
|
தலைமகன் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சினைக் கழறிச் செலவு அழுங்கியது. - மதுரைத் தத்தங் கண்ணனார் | |
உரை |
மேல் |