முருக்கு |
'பிரிதல் வல்லியர், இது, நத் துறந்தோர் |
|
மறந்தும் அமைகுவர்கொல்?' என்று எண்ணி, |
|
ஆழல் வாழி, தோழி! கேழல் |
|
வளை மருப்பு உறழும் முளை நெடும் பெருங் காய் |
|
5 |
நனை முதிர் முருக்கின் சினை சேர் பொங்கர், |
காய் சினக் கடு வளி எடுத்தலின், வெங் காட்டு |
|
அழல் பொழி யானையின் ஐயெனத் தோன்றும் |
|
நிழல் இல் ஓமை நீர் இல் நீள் இடை, |
|
இறந்தனர்ஆயினும், காதலர் நம்வயின் |
|
10 |
மறந்து கண்படுதல் யாவது புறம் தாழ் |
அம் பணை நெடுந் தோள் தங்கி, தும்பி |
|
அரியினம் கடுக்கும் சுரி வணர் ஐம்பால் |
|
நுண் கேழ் அடங்க வாரி, பையுள் கெட, |
|
நன் முகை அதிரல் போதொடு, குவளைத் |
|
15 |
தண் நறுங் கமழ் தொடை வேய்ந்த, நின் |
மண் ஆர் கூந்தல் மரீஇய துயிலே? |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ | |
உரை |
பகல் செய் பல் கதிர்ப் பருதி அம் செல்வன் |
|
அகல் வாய் வானத்து ஆழி போழ்ந்தென, |
|
நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை, |
|
கயந் தலைக் குழவிக் கவி உகிர் மடப் பிடி |
|
5 |
குளகு மறுத்து உயங்கிய மருங்குல் பல உடன் |
பாழ் ஊர்க் குரம்பையின் தோன்றும் ஆங்கண், |
|
நெடுஞ் சேண் இடைய குன்றம் போகி, |
|
பொய்வலாளர் முயன்று செய் பெரும் பொருள் |
|
நம் இன்று ஆயினும் முடிக, வல்லென, |
|
10 |
பெருந் துனி மேவல்! நல்கூர் குறுமகள்! |
நோய் மலிந்து உகுத்த நொசி வரல் சில் நீர் |
|
பல் இதழ் மழைக் கண் பாவை மாய்ப்ப, |
|
பொன் ஏர் பசலை ஊர்தர, பொறி வரி |
|
நல் மா மேனி தொலைதல் நோக்கி, |
|
15 |
இனையல் என்றி; தோழி! சினைய |
பாசரும்பு ஈன்ற செம் முகை முருக்கினப் |
|
போது அவிழ் அலரி கொழுதி தாது அருந்து, |
|
அம் தளிர் மாஅத்து அலங்கல் மீமிசை, |
|
செங் கண் இருங் குயில் நயவரக் கூஉம் |
|
20 |
இன் இளவேனிலும் வாரார், |
'இன்னே வருதும்' எனத் தெளித்தோரே. |
|
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள், வன்புறை எதிர் அழிந்து, சொல்லியது. - மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் | |
உரை |
' "மாக விசும்பின் மழை தொழில் உலந்தென, |
|
பாஅய் அன்ன பகல் இருள் பரப்பி, |
|
புகை நிற உருவின் அற்சிரம் நீங்க, |
|
குவிமுகை முருக்கின் கூர் நுனை வை எயிற்று |
|
5 |
நகை முக மகளிர் ஊட்டு உகிர் கடுக்கும் |
முதிராப் பல் இதழ் உதிரப் பாய்ந்து, உடன் |
|
மலர் உண் வேட்கையின் சிதர் சிதர்ந்து உகுப்ப, |
|
பொன் செய் கன்னம் பொலிய, வெள்ளி |
|
நுண் கோல் அறை குறைந்து உதிர்வன போல, |
|
10 |
அரவ வண்டினம் ஊதுதொறும் குரவத்து |
ஓங்கு சினை நறு வீ கோங்கு அலர் உறைப்ப, |
|
துவைத்து எழு தும்பி, தவிர் இசை விளரி |
|
புதைத்து விடு நரம்பின், இம்மென இமிரும் |
|
ஆன் ஏமுற்ற காமர் வேனில், |
|
15 |
வெயில் அவிர் புரையும் வீ ததை மராஅத்துக் |
குயில் இடு பூசல் எம்மொடு கேட்ப |
|
வருவேம்" என்ற பருவம் ஆண்டை |
|
இல்லைகொல்?' என மெல்ல நோக்கி, |
|
நினைந்தனம் இருந்தனமாக, நயந்து ஆங்கு |
|
20 |
உள்ளிய மருங்கின் உள்ளம் போல, |
வந்து நின்றனரே காதலர்; நந் துறந்து |
|
என்னுழியதுகொல் தானே பல் நாள் |
|
அன்னையும் அறிவுற அணங்கி, |
|
நல் நுதல் பாஅய பசலை நோயே? |
|
தலைமகன் வரவு உணர்ந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. - வடமோதங் கிழார் | |
உரை |
மேல் |