வாகை (உழிஞ்சில்) |
வாடல் உழுஞ்சில் விளை நெற்று அம் துணர் |
|
ஆடுகளப் பறையின், அரிப்பன ஒலிப்ப, |
|
கோடை நீடிய அகன் பெருங் குன்றத்து, |
|
நீர் இல் ஆர் ஆற்று நிவப்பன களிறு அட்டு, |
|
5 |
ஆள் இல் அத்தத்து உழுவை உகளும் |
காடு இறந்தனரே, காதலர். மாமை, |
|
அரி நுண் பசலை பாஅய், பீரத்து |
|
எழில் மலர் புரைதல்வேண்டும். அலரே, |
|
அன்னி குறுக்கைப் பறந்தலை, திதியன் |
|
10 |
தொல் நிலை முழுமுதல் துமியப் பண்ணி, |
புன்னை குறைத்த ஞான்றை, வயிரியர் |
|
இன் இசை ஆர்ப்பினும் பெரிதே. யானே, |
|
காதலற் கெடுத்த சிறுமையொடு, நோய் கூர்ந்து, |
|
ஆதிமந்தி போல, பேதுற்று |
|
15 |
அலந்தனென் உழல்வென்கொல்லோ பொலந்தார், |
கடல் கால் கிளர்ந்த வென்றி நல் வேல், |
|
வானவரம்பன் அடல் முனைக் கலங்கிய |
|
உடை மதில் ஓர் அரண் போல, |
|
அஞ்சுவரு நோயொடு, துஞ்சாதேனே! |
|
வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - வெள்ளிவீதியார் | |
உரை |
மைப்பு அறப் புழுக்கின் நெய்க் கனி வெண் சோறு |
|
வரையா வண்மையொடு புரையோர்ப் பேணி, |
|
புள்ளுப் புணர்ந்து இனிய ஆக, தெள் ஒளி |
|
அம் கண் இரு விசும்பு விளங்க, திங்கட் |
|
5 |
சகடம் மண்டிய துகள் தீர் கூட்டத்து, |
கடி நகர் புனைந்து, கடவுட் பேணி, |
|
படு மண முழவொடு பரூஉப் பணை இமிழ, |
|
வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்று, |
|
பூக்கணும் இமையார் நோக்குபு மறைய, |
|
10 |
மென் பூ வாகைப் புன் புறக் கவட்டிலை, |
பழங் கன்று கறித்த பயம்பு அமல் அறுகைத் |
|
தழங்குகுரல் வானின் தலைப்பெயற்கு ஈன்ற |
|
மண்ணு மணி அன்ன மாஇதழ்ப் பாவைத் |
|
தண் நறு முகையொடு வெண் நூல் சூட்டி, |
|
15 |
தூ உடைப் பொலிந்து மேவரத் துவன்றி, |
மழை பட்டன்ன மணல் மலி பந்தர், |
|
இழை அணி சிறப்பின் பெயர் வியர்ப்பு ஆற்றி, |
|
தமர் நமக்கு ஈத்த தலைநாள் இரவின், |
|
'உவர் நீங்கு கற்பின் எம் உயிர் உடம்படுவி! |
|
20 |
முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇ, |
பெரும் புழுக்குற்ற நின் பிறைநுதற் பொறி வியர் |
|
உறு வளி ஆற்றச் சிறு வரை திற' என |
|
ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின், |
|
உறை கழி வாளின் உருவு பெயர்ந்து இமைப்ப, |
|
25 |
மறை திறன் அறியாள்ஆகி, ஒய்யென |
நாணினள் இறைஞ்சியோளே பேணி, |
|
பரூஉப் பகை ஆம்பற் குரூஉத் தொடை நீவி, |
|
சுரும்பு இமிர் ஆய்மலர் வேய்ந்த |
|
இரும் பல் கூந்தல் இருள் மறை ஒளித்தே. |
|
உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.- விற்றூற்று மூதெயினனார் | |
உரை |
'தம் நயந்து உறைவோர்த் தாங்கி, தாம் நயந்து |
|
இன் அமர் கேளிரொடு ஏமுறக் கெழீஇ, |
|
நகுதல் ஆற்றார் நல்கூர்ந்தோர்!' என, |
|
மிகு பொருள் நினையும் நெஞ்சமொடு அருள் பிறிது |
|
5 |
ஆபமன் வாழி, தோழி! கால் விரிபு |
உறுவளி எறிதொறும் கலங்கிய பொறி வரிக் |
|
கலைமான் தலையின் முதல்முதற் கவர்த்த |
|
கோடல்அம் கவட்ட குறுங் கால் உழுஞ்சில் |
|
தாறு சினை விளைந்த நெற்றம், ஆடுமகள் |
|
10 |
அரிக் கோற் பறையின், ஐயென ஒலிக்கும் |
பதுக்கைத்து ஆய செதுக்கை நீழல், |
|
கள்ளி முள் அரைப் பொருந்தி, செல்லுநர்க்கு |
|
உறுவது கூறும், சிறு செந் நாவின் |
|
மணி ஓர்த்தன்ன தெண் குரல் |
|
15 |
கணி வாய், பல்லிய காடு இறந்தோரே! |
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் சொல்லியது.-காவன்முல்லைப் பூதரத்தனார் | |
உரை |
கரை பாய் வெண் திரை கடுப்ப, பல உடன், |
|
நிரை கால் ஒற்றலின், கல் சேர்பு உதிரும் |
|
வரை சேர் மராஅத்து ஊழ் மலர் பெயல் செத்து, |
|
உயங்கல் யானை நீர் நசைக்கு அலமர, |
|
5
|
சிலம்பி வலந்த வறுஞ் சினை வற்றல் |
அலங்கல் உலவை அரி நிழல் அசைஇ, |
|
திரங்குமரல் கவ்விய கையறு தொகுநிலை, |
|
அரம் தின் ஊசித் திரள் நுதி அன்ன, |
|
திண் நிலை எயிற்ற செந்நாய் எடுத்தலின், |
|
10 |
வளி முனைப் பூளையின் ஒய்யென்று அலறிய |
கெடுமான் இன நிரை தரீஇய, கலையே |
|
கதிர் மாய் மாலை ஆண் குரல் விளிக்கும் |
|
கடல் போல் கானம் பிற்பட, 'பிறர் போல் |
|
செல்வேம்ஆயின், எம் செலவு நன்று' என்னும் |
|
15 |
ஆசை உள்ளம் அசைவின்று துரப்ப, |
நீ செலற்கு உரியை நெஞ்சே! வேய் போல் |
|
தடையின மன்னும், தண்ணிய, திரண்ட, |
|
பெருந் தோள் அரிவை ஒழிய, குடாஅது, |
|
இரும் பொன் வாகைப் பெருந்துறைச் செருவில், |
|
20 |
பொலம் பூண் நன்னன் பொருது களத்து ஒழிய, |
வலம் படு கொற்றம் தந்த வாய் வாள், |
|
களங்காய்க் கண்ணி நார் முடிச் சேரல் |
|
இழந்த நாடு தந்தன்ன |
|
வளம் பெரிது பெறினும், வாரலென் யானே. |
|
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. - கல்லாடனார் | |
உரை |
மேல் |