வாழை |
கோழிலை வாழைக் கோள் முதிர் பெருங் குலை |
|
ஊழுறு தீம் கனி, உண்ணுநர்த் தடுத்த |
|
சாரற் பலவின் சுளையொடு, ஊழ் படு |
|
பாறை நெடுஞ் சுனை, விளைந்த தேறல் |
|
5 |
அறியாது உண்ட கடுவன் அயலது |
கறி வளர் சாந்தம் ஏறல்செல்லாது, |
|
நறு வீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும் |
|
குறியா இன்பம், எளிதின், நின் மலைப் |
|
பல் வேறு விலங்கும், எய்தும் நாட! |
|
10 |
குறித்த இன்பம் நினக்கு எவன் அரிய? |
வெறுத்த ஏஎர், வேய் புரை பணைத் தோள், |
|
நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்மாட்டு, |
|
இவளும், இனையள்ஆயின், தந்தை |
|
அருங் கடிக் காவலர் சோர் பதன் ஒற்றி, |
|
15 |
கங்குல் வருதலும் உரியை; பைம் புதல் |
வேங்கையும் ஒள் இணர் விரிந்தன; |
|
நெடு வெண் திங்களும் ஊர்கொண்டன்றே. |
|
பகற்குறிக்கண் செறிப்பு அறிவுறீஇத் தோழி வரைவு கடாயது. - கபிலர் | |
உரை |
ஈயல் புற்றத்து ஈர்ம் புறத்து இறுத்த |
|
குரும்பி வல்சிப் பெருங் கை ஏற்றை |
|
தூங்கு தோல் துதிய வள் உகிர் கதுவலின், |
|
பாம்பு மதன் அழியும் பானாட் கங்குலும், |
|
5 |
அரிய அல்லமன் இகுளை! 'பெரிய |
கேழல் அட்ட பேழ்வாய் ஏற்றை |
|
பலா அமல் அடுக்கம் புலாவ ஈர்க்கும் |
|
கழை நரல் சிலம்பின்ஆங்கண், வழையொடு |
|
வாழை ஓங்கிய தாழ் கண் அசும்பில், |
|
10 |
படு கடுங் களிற்றின் வருத்தம் சொலிய, |
பிடி படி முறுக்கிய பெரு மரப் பூசல் |
|
விண் தோய் விடரகத்து இயம்பும் அவர் நாட்டு, |
|
எண் அரும் பிறங்கல் மான் அதர் மயங்காது, |
|
மின்னு விடச் சிறிய ஒதுங்கி, மென்மெல, |
|
15 |
துளி தலைத் தலைஇய மணி ஏர் ஐம்பால் |
சிறுபுறம் புதைய வாரி, குரல் பிழியூஉ, |
|
நெறி கெட விலங்கிய, நீயிர், இச் சுரம், |
|
அறிதலும் அறிதிரோ?' என்னுநர்ப் பெறினே. |
|
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைமகள்சொல்லியது. - பெருங்குன்றூர் கிழார். | |
உரை |
வானம் வாய்ப்பக் கவினி, கானம் |
|
கமஞ் சூல் மா மழை கார் பயந்து இறுத்தென, |
|
மணி மருள் பூவை அணி மலர் இடைஇடை, |
|
செம் புற மூதாய் பரத்தலின், நன் பல |
|
5 |
முல்லை வீ கழல் தாஅய், வல்லோன் |
செய்கை அன்ன செந் நிலப் புறவின்; |
|
வாஅப் பாணி வயங்கு தொழிற் கலிமாத் |
|
தாஅத் தாள் இணை மெல்ல ஒதுங்க, |
|
இடி மறந்து, ஏமதி வலவ! குவிமுகை |
|
10 |
வாழை வான் பூ ஊழுறுபு உதிர்ந்த |
ஒழிகுலை அன்ன திரிமருப்பு ஏற்றொடு |
|
கணைக் கால் அம் பிணைக் காமர் புணர் நிலை |
|
கடுமான் தேர் ஒலி கேட்பின், |
|
நடுநாட் கூட்டம் ஆகலும் உண்டே. |
|
வினை முற்றி மீண்ட தலைமகன் பாகற்கு உரைத்தது. - சீத்தலைச் சாத்தனார் | |
உரை |
அம்ம வாழி, தோழி! கைம்மிகக் |
|
கனவும் கங்குல்தோறு இனிய; நனவும் |
|
புனை வினை நல் இல் புள்ளும் பாங்கின; |
|
நெஞ்சும் நனிபுகன்று உறையும்; எஞ்சாது |
|
5 |
உலகு தொழில் உலந்து, நாஞ்சில் துஞ்சி, |
மழை கால்நீங்கிய மாக விசும்பில் |
|
குறு முயல் மறு நிறம் கிளர, மதி நிறைந்து, |
|
அறுமீன் சேரும் அகல் இருள் நடு நாள்; |
|
மறுகு விளக்குறுத்து, மாலை தூக்கி, |
|
10 |
பழ விறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய |
விழவு உடன் அயர, வருகதில் அம்ம! |
|
துவரப் புலர்ந்து தூ மலர் கஞலி, |
|
தகரம் நாறும் தண் நறுங் கதுப்பின் |
|
புது மண மகடூஉ அயினிய கடி நகர்ப் |
|
15 |
பல் கோட்டு அடுப்பில் பால் உலை இரீஇ, |
கூழைக் கூந்தற் குறுந் தொடி மகளிர் |
|
பெருஞ் செய் நெல்லின் வாங்குகதிர் முறித்து, |
|
பாசவல் இடிக்கும் இருங் காழ் உலக்கைக் |
|
கடிது இடி வெரீஇய கமஞ்சூல் வெண் குருகு | |
20 |
தீம் குலை வாழை ஓங்கு மடல் இராது; |
நெடுங் கால் மாஅத்துக் குறும் பறை பயிற்றும் |
|
செல் குடி நிறுத்த பெரும் பெயர்க் கரிகால் |
|
வெல் போர்ச் சோழன் இடையாற்று அன்ன |
|
நல் இசை வெறுக்கை தருமார், பல் பொறிப் |
|
25 |
புலிக் கேழ் உற்ற பூவிடைப் பெருஞ் சினை |
நரந்த நறும் பூ நாள் மலர் உதிர, |
|
கலை பாய்ந்து உகளும், கல் சேர் வேங்கை, |
|
தேம் கமழ் நெடு வரைப் பிறங்கிய |
|
வேங்கட வைப்பிற் சுரன் இறந்தோரே. |
|
'பிரிவிடை ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - நக்கீரர் | |
உரை |
சிலம்பில் போகிய செம் முக வாழை |
|
அலங்கல் அம் தோடு, அசைவளி உறுதொறும், |
|
பள்ளி யானைப் பரூஉப் புறம் தைவரும் |
|
நல் வரை நாடனொடு அருவி ஆடியும், |
|
5 |
பல் இதழ் நீலம் படு சுனைக் குற்றும், |
நறு வீ வேங்கை இன வண்டு ஆர்க்கும் |
|
வெறி கமழ் சோலை நயந்து விளையாடலும் |
|
அரிய போலும் காதல் அம் தோழி! |
|
இருங் கல் அடுக்கத்து என்னையர் உழுத |
|
10 |
கரும்பு எனக் கவினிய பெருங் குரல் ஏனல், |
கிளி பட விளைந்தமை அறிந்தும்,' செல்க' என, |
|
நம் அவண் விடுநள் போலாள், கைம்மிகச் |
|
சில் சுணங்கு அணிந்த, செறிந்து வீங்கு, இள முலை, |
|
மெல் இயல் ஒலிவரும் கதுப்பொடு, |
|
15 |
பல் கால் நோக்கும் அறன் இல் யாயே. |
பகலே சிறைப்புறமாகத் தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.- மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் | |
உரை |
328. குறிஞ்சி |
வழை அமல் அடுக்கத்து, வலன் ஏர்பு, வயிரியர் |
|
முழவு அதிர்ந்தன்ன முழக்கத்து ஏறோடு, |
|
உரவுப் பெயல் பொழிந்த நள்ளென் யாமத்து, |
|
அரவின் பைந் தலை இடறி, பானாள் |
|
5 |
இரவின் வந்து, எம் இடைமுலை முயங்கி, |
துனி கண் அகல அளைஇ, கங்குலின் |
|
இனிதின் இயைந்த நண்பு, அவர் முனிதல் |
|
தெற்று ஆகுதல் நற்கு அறிந்தனம்ஆயின், |
|
இலங்கு வளை நெகிழ, பரந்து படர் அலைப்ப, யாம் |
|
10 |
முயங்குதொறும் முயங்குதொறும் உயங்க முகந்து கொண்டு |
அடக்குவம்மன்னோ தோழி! மடப் பிடி |
|
மழை தவழ் சிலம்பில் கடுஞ்சூல் ஈன்று, |
|
கழை தின் யாக்கை விழை களிறு தைவர, |
|
வாழை அம் சிலம்பில் துஞ்சும் |
|
15 |
சாரல் நாடன் சாயல் மார்பே! |
இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி சொல் எடுப்ப, தலைமகள் சொல்லியது. -மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார் | |
உரை |
முளை வளர் முதல மூங்கில் முருக்கி, |
|
கிளையொடு மேய்ந்த கேழ் கிளர் யானை, |
|
நீர் நசை மருங்கின் நிறம் பார்த்து ஒடுங்கிய, |
|
பொரு முரண் உழுவை தொலைச்சி, கூர் நுனைக் |
|
5 |
குருதிச் செங் கோட்டு அழி துளி கழாஅ, |
கல் முகை அடுக்கத்து மென்மெல இயலி, |
|
செறு பகை வாட்டிய செம்மலொடு, அறு கால் |
|
யாழ் இசைப் பறவை இமிர, பிடி புணர்ந்து, |
|
வாழை அம் சிலம்பில் துஞ்சும் நாடன் |
|
10 |
நின் புரை தக்க சாயலன் என, நீ |
அன்பு உரைத்து அடங்கக் கூறிய இன் சொல் |
|
வாய்த்தன வாழி, தோழி! வேட்டோர்க்கு |
|
அமிழ்தத்து அன்ன கமழ் தார் மார்பின் |
|
வண்டு இடைப் படாஅ முயக்கமும், |
|
15 |
தண்டாக் காதலும், தலை நாள் போன்மே! |
இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழிக்குத் தலைமகள் இயற்பட மொழிந்தது. -கபிலர் | |
உரை |
மேல் |