கரும்பு(வேழம்) |
அரி பெய் சிலம்பின் ஆம்பல் அம் தொடலை, |
|
அரம் போழ் அவ் வளைப் பொலிந்த முன்கை, |
|
இழை அணி பணைத் தோள், ஐயை தந்தை, |
|
மழை வளம் தரூஉம் மா வண் தித்தன், |
|
5 |
பிண்ட நெல்லின் உறந்தை ஆங்கண் |
கழை நிலை பெறாஅக் காவிரி நீத்தம், |
|
குழை மாண் ஒள் இழை நீ வெய்யோளொடு, |
|
வேழ வெண் புணை தழீஇ, பூழியர் |
|
கயம் நாடு யானையின் முகன் அமர்ந்தாஅங்கு, |
|
10 |
ஏந்து எழில் ஆகத்துப் பூந் தார் குழைய, |
நெருநல் ஆடினை, புனலே; இன்று வந்து, |
|
'ஆக வன முலை அரும்பிய சுணங்கின், |
|
மாசு இல் கற்பின், புதல்வன் தாய்!' என, |
|
மாயப் பொய்ம்மொழி சாயினை பயிற்றி, எம் |
|
15 |
முதுமை எள்ளல்; அஃது அமைகும் தில்ல! |
சுடர்ப் பூந் தாமரை நீர் முதிர் பழனத்து, |
|
அம் தூம்பு வள்ளை ஆய் கொடி மயக்கி, |
|
வாளை மேய்ந்த வள் எயிற்று நீர்நாய், |
|
முள் அரைப் பிரம்பின் மூதரில் செறியும், |
|
20 |
பல் வேல் மத்தி, கழாஅர் அன்ன எம் |
இளமை சென்று தவத் தொல்லஃதே; |
|
இனிமை எவன் செய்வது, பொய்ம்மொழி, எமக்கே? |
|
பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகற்குக் கிழத்தி கூறியது. - பரணர் | |
உரை |
தன் கடற் பிறந்த முத்தின் ஆரமும், |
|
முனை திறை கொடுக்கும் துப்பின், தன் மலைத் |
|
தெறல் அரு மரபின் கடவுட் பேணி, |
|
குறவர் தந்த சந்தின் ஆரமும், |
|
5 |
இரு பேர் ஆரமும் எழில் பெற அணியும் |
திரு வீழ் மார்பின் தென்னவன் மறவன் |
|
குழியில் கொண்ட மராஅ யானை |
|
மொழியின் உணர்த்தும் சிறு வரை அல்லது, |
|
வரை நிலை இன்றி இரவலர்க்கு ஈயும், |
|
10 |
வள் வாய் அம்பின், கோடைப் பொருநன் |
பண்ணி தைஇய பயம் கெழு வேள்வியின், |
|
விழுமிது நிகழ்வது ஆயினும் தெற்கு ஏர்பு, |
|
கழி மழை பொழிந்த பொழுது கொள் அமையத்து, |
|
சாயல் இன் துணை இவட் பிரிந்து உறையின், |
|
15 |
நோய் இன்றாக செய்பொருள்! வயிற்பட |
மாசு இல் தூ மடி விரிந்த சேக்கை, |
|
கவவு இன்புறாமைக் கழிக வள வயல், |
|
அழல் நுதி அன்ன தோகை ஈன்ற |
|
கழனி நெல் ஈன் கவைமுதல் அலங்கல் |
|
20 |
நிரம்பு அகன் செறுவில் வரம்பு அணையாத் துயல்வர, |
புலம்பொடு வந்த பொழுது கொள் வாடை, |
|
இலங்கு பூங் கரும்பின் ஏர் கழை இருந்த |
|
வெண் குருகு நரல, வீசும் |
|
நுண் பல் துவலைய தண் பனி நாளே! |
|
பொருள்வயிற் பிரியலுற்ற தலைமகனைத் தோழி செலவழுங்குவித்தது; உடம்பட்ட தூஉம் ஆம். - பெருந்தலைச் சாத்தனார் | |
உரை |
எரி அகைந்தன்ன தாமரை இடை இடை |
|
அரிந்து கால் குவித்த செந் நெல் வினைஞர் |
|
கள் கொண்டு மறுகும் சாகாடு அளற்று உறின், |
|
ஆய் கரும்பு அடுக்கும் பாய்புனல் ஊர! |
|
5 |
பெரிய நாண் இலைமன்ற; 'பொரி எனப் |
புன்கு அவிழ் அகன்துறைப் பொலிய, ஒள் நுதல், |
|
நறு மலர்க்காண் வரும் குறும் பல் கூந்தல், |
|
மாழை நோக்கின், காழ் இயல் வன முலை, |
|
எஃகுடை எழில் நலத்து, ஒருத்தியொடு நெருநை |
|
10 |
வைகுபுனல் அயர்ந்தனை' என்ப; அதுவே, |
பொய் புறம் பொதிந்து, யாம் கரப்பவும், கையிகந்து |
|
அலர் ஆகின்றால் தானே; மலர்தார், |
|
மை அணி யானை, மறப் போர்ச் செழியன் |
|
பொய்யா விழவின் கூடற் பறந்தலை, |
|
15 |
உடன் இயைந்து எழுந்த இரு பெரு வேந்தர் |
கடல் மருள் பெரும் படை கலங்கத் தாக்கி, |
|
இரங்குஇசை முரசம் ஒழிய, பரந்து அவர் |
|
ஓடுபுறம் கண்ட ஞான்றை, |
|
ஆடு கொள் வியன் களத்து ஆர்ப்பினும் பெரிதே. |
|
தோழி தலைமகனை வாயில் மறுத்தது. - பரணர் | |
உரை |
முரசுடைச் செல்வர் புரவிச் சூட்டும் |
|
மூட்டுறு கவரி தூக்கியன்ன, |
|
செழுஞ் செய் நெல்லின் சேயரிப் புனிற்றுக் கதிர் | |
மூதா தின்றல் அஞ்சி, காவலர் |
|
5 |
பாகல் ஆய்கொடிப் பகன்றையொடு பரீஇ, |
காஞ்சியின் அகத்து, கரும்பு அருத்தி, யாக்கும் |
|
தீம் புனல் ஊர! திறவதாகக் |
|
குவளை உண்கண் இவளும் யானும் |
|
கழனி ஆம்பல் முழுநெறிப் பைந் தழை, |
|
10 |
காயா ஞாயிற்றாக, தலைப்பெய, |
'பொய்தல் ஆடிப் பொலிக!' என வந்து, |
|
நின் நகாப் பிழைத்த தவறோ பெரும! |
|
கள்ளும் கண்ணியும் கையுறையாக |
|
நிலைக் கோட்டு வெள்ளை நால்செவிக் கிடாஅய் |
|
15 |
நிலைத்துறைக் கடவுட்கு உளப்பட ஓச்சி, |
தணி மருங்கு அறியாள், யாய் அழ, |
|
மணி மருள் மேனி பொன் நிறம் கொளலே? |
|
தலைமகளை இடத்து உய்த்துவந்த தோழி தலைமகனை வரைவு கடாயது.-ஆவூர் மூலங்கிழார் | |
உரை |
'பெய்து புறந்தந்த பொங்கல் வெண் மழை, |
|
எஃகு உறு பஞ்சித் துய்ப் பட்டன்ன, |
|
துவலை தூவல் கழிய, அகல் வயல் |
|
நீடு கழைக் கரும்பின் கணைக் கால் வான் பூக் |
|
5 |
கோடைப் பூளையின் வாடையொடு துயல்வர, |
பாசிலை பொதுளிய புதல்தொறும் பகன்றை |
|
நீல் உண் பச்சை நிறம் மறைத்து அடைச்சிய |
|
தோல் எறி பாண்டிலின் வாலிய மலர, |
|
கோழிலை அவரைக் கொழு முகை அவிழ, |
|
10 |
ஊழ் உறு தோன்றி ஒண் பூத் தளை விட, |
புலம்தொறும் குருகினம் நரல, கல்லென |
|
அகன்று உறை மகளிர் அணி துறந்து நடுங்க, |
|
அற்சிரம் வந்தன்று; அமைந்தன்று இது என, |
|
எப் பொருள் பெறினும், பிரியன்மினோ' எனச் |
|
15 |
செப்புவல் வாழியோ, துணையுடையீர்க்கே; |
நல்காக் காதலர் நலன் உண்டு துறந்த |
|
பாழ் படு மேனி நோக்கி, நோய் பொர, |
|
இணர் இறுபு உடையும் நெஞ்சமொடு, புணர்வு வேட்டு, |
|
எயிறு தீப் பிறப்பத் திருகி, |
|
20 |
நடுங்குதும் பிரியின் யாம் கடு பனி உழந்தே. |
பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் ஆற்றாமை மீதூரச் சொல்லியது. -கழார்க்கீரன் எயிற்றியார் | |
உரை |
'புன் காற் பாதிரி அரி நிறத் திரள் வீ |
|
நுண் கொடி அதிரலொடு நுணங்கு அறல் வரிப்ப, |
|
அரவு எயிற்று அன்ன அரும்பு முதிர் குரவின் |
|
தேன் இமிர் நறுஞ் சினைத் தென்றல் போழ, |
|
5 |
குயில் குரல் கற்ற வேனிலும் துயில் துறந்து |
இன்னா கழியும் கங்குல்' என்று நின் |
|
நல் மா மேனி அணி நலம் புலம்ப, |
|
இனைதல் ஆன்றிசின் ஆயிழை! கனைதிறல் |
|
செந் தீ அணங்கிய செழு நிணக் கொழுங் குறை |
|
10 |
மென் தினைப் புன்கம் உதிர்த்த மண்டையொடு, |
இருங் கதிர் அலமரும் கழனிக் கரும்பின் |
|
விளை கழை பிழிந்த அம் தீம் சேற்றொடு, |
|
பால் பெய் செந்நெற் பாசவல் பகுக்கும் |
|
புனல் பொரு புதவின், உறந்தை எய்தினும், |
|
15 |
வினை பொருளாகத் தவிரலர் கடை சிவந்து |
ஐய அமர்த்த உண்கண் நின் |
|
வை ஏர் வால் எயிறு ஊறிய நீரே. |
|
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது. -தாயங்கண்ணனார் | |
உரை |
பிணங்கு அரில் வள்ளை நீடு இலைப் பொதும்பில |
|
மடி துயில் முனைஇய வள் உகிர் யாமை |
|
நொடி விடு கல்லின் போகி, அகன்துறைப் |
|
பகுவாய் நிறைய, நுங்கின் கள்ளின் |
|
5 |
நுகர்வார் அருந்து மகிழ்பு இயங்கு நடையொடு |
தீம் பெரும் பழனம் உழக்கி, அயலது |
|
ஆம்பல் மெல் அடை ஒடுங்கும் ஊர! |
|
பொய்யால்; அறிவென், நின் மாயம். அதுவே |
|
கையகப்பட்டமை அறியாய்; நெருநை |
|
10 |
மை எழில் உண்கண் மடந்தையொடு வையை |
ஏர் தரு புதுப் புனல் உரிதினின் நுகர்ந்து, |
|
பரத்தை ஆயம் கரப்பவும், ஒல்லாது |
|
கவ்வை ஆகின்றால், பெரிதே; காண்தகத் |
|
தொல் புகழ் நிறைந்த பல் பூங் கழனி, |
|
15 |
கரும்பு அமல் படப்பை, பெரும் பெயர்க் கள்ளூர், |
திரு நுதற் குறுமகள் அணி நலம் வவ்விய |
|
அறனிலாளன்,'அறியேன்' என்ற |
|
திறன் இல் வெஞ் சூள் அறி கரி கடாஅய், |
|
முறி ஆர் பெருங் கிளை செறியப் பற்றி, |
|
20 |
நீறு தலைப்பெய்த ஞான்றை, |
வீறு சால் அவையத்து ஆர்ப்பினும் பெரிதே. |
|
தோழி தலைமகற்கு வாயின் மறுத்தது. - மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார் | |
உரை |
சிலம்பில் போகிய செம் முக வாழை |
|
அலங்கல் அம் தோடு, அசைவளி உறுதொறும், |
|
பள்ளி யானைப் பரூஉப் புறம் தைவரும் |
|
நல் வரை நாடனொடு அருவி ஆடியும், |
|
5 |
பல் இதழ் நீலம் படு சுனைக் குற்றும், |
நறு வீ வேங்கை இன வண்டு ஆர்க்கும் |
|
வெறி கமழ் சோலை நயந்து விளையாடலும் |
|
அரிய போலும் காதல் அம் தோழி! |
|
இருங் கல் அடுக்கத்து என்னையர் உழுத |
|
10 |
கரும்பு எனக் கவினிய பெருங் குரல் ஏனல், |
கிளி பட விளைந்தமை அறிந்தும்,' செல்க' என, |
|
நம் அவண் விடுநள் போலாள், கைம்மிகச் |
|
சில் சுணங்கு அணிந்த, செறிந்து வீங்கு, இள முலை, |
|
மெல் இயல் ஒலிவரும் கதுப்பொடு, |
|
15 |
பல் கால் நோக்கும் அறன் இல் யாயே. |
பகலே சிறைப்புறமாகத் தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.- மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் | |
உரை |
பெரும் பெயர் மகிழ்ந! பேணாது அகன்மோ! |
|
பரந்த பொய்கைப் பிரம்பொடு நீடிய |
|
முட் கொம்பு ஈங்கைத் துய்த் தலைப் புது வீ |
|
ஈன்ற மாத்தின் இளந் தளிர் வருட, |
|
5 |
வார் குருகு உறங்கும் நீர் சூழ் வள வயல் |
கழனிக் கரும்பின் சாய்ப் புறம் ஊர்ந்து, |
|
பழன யாமை பசு வெயில் கொள்ளும் |
|
நெல்லுடை மறுகின் நன்னர் ஊர! |
|
இதுவோ மற்று நின் செம்மல்? மாண்ட |
|
10 |
மதி ஏர் ஒள் நுதல் வயங்கு இழை ஒருத்தி |
இகழ்ந்த சொல்லும் சொல்லி, சிவந்த |
|
ஆய் இதழ் மழைக் கண் நோய் உற நோக்கி, |
|
தண் நறுங் கமழ் தார் பரீஇயினள், நும்மொடு |
|
ஊடினள் சிறு துனி செய்து எம் |
|
15 |
மணல் மலி மறுகின் இறந்திசினோளே. |
தோழி தலைமகற்கு வாயில் மறுத்தது - மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் | |
உரை |
நகை நன்று அம்ம தானே இறை மிசை |
|
மாரிச் சுதையின் ஈர்ம் புறத்து அன்ன |
|
கூரல் கொக்கின் குறும் பறைச் சேவல், |
|
வெள்ளி வெண் தோடு அன்ன, கயல் குறித்து, |
|
5 |
கள் ஆர் உவகைக் கலி மகிழ் உழவர் |
காஞ்சி அம் குறுந் தறி குத்தி, தீம் சுவை |
|
மென் கழைக் கரும்பின் நன் பல மிடைந்து, |
|
பெருஞ் செய் நெல்லின் பாசு அவல் பொத்தி, |
|
வருத்திக் கொண்ட வல் வாய்க் கொடுஞ் சிறை |
|
10 |
மீது அழி கடு நீர் நோக்கி, பைப்பயப் |
பார்வல் இருக்கும் பயம் கேழ் ஊர! |
|
யாம் அது பேணின்றோ இலமே நீ நின் |
|
பண் அமை நல் யாழ்ப் பாணனொடு, விசி பிணி, |
|
மண் ஆர், முழவின் கண் அதிர்ந்து இயம்ப, |
|
15 |
மகிழ் துணைச் சுற்றமொடு மட்டு மாந்தி, |
எம் மனை வாராயாகி, முன் நாள், |
|
நும் மனைச் சேர்ந்த ஞான்றை, அம் மனைக் |
|
குறுந் தொடி மடந்தை உவந்தனள் நெடுந் தேர், |
|
இழை அணி யானைப் பழையன் மாறன், |
|
20 |
மாட மலி மறுகின் கூடல் ஆங்கண், |
வெள்ளத் தானையொடு வேறு புலத்து இறுத்த |
|
கிள்ளி வளவன் நல் அமர் சாஅய், |
|
கடும் பரிப் புரவியொடு களிறு பல வவ்வி, |
|
ஏதில் மன்னர் ஊர் கொள, |
|
25 |
கோதை மார்பன் உவகையின் பெரிதே. |
தோழி தலைமகற்கு வாயில் மறுத்தது. - நக்கீரர் | |
உரை |
மேல் |