கூதளம் |
அழிவு இல் உள்ளம் வழிவழிச் சிறப்ப |
|
வினை இவண் முடித்தனம்ஆயின், வல் விரைந்து |
|
எழு இனி வாழிய நெஞ்சே! ஒலி தலை |
|
அலங்கு கழை நரலத் தாக்கி, விலங்கு எழுந்து, |
|
5 |
கடு வளி உருத்திய கொடி விடு கூர் எரி |
விடர் முகை அடுக்கம் பாய்தலின், உடன் இயைந்து, |
|
அமைக் கண் விடு நொடி கணக் கலை அகற்றும் |
|
வெம் முனை அருஞ் சுரம் நீந்தி, கைம்மிக்கு, |
|
அகன் சுடர் கல் சேர்பு மறைய, மனைவயின் |
|
10 |
ஒண் தொடி மகளிர் வெண் திரிக் கொளாஅலின், |
குறு நடைப் புறவின் செங் காற் சேவல் |
|
நெடு நிலை வியல் நகர் வீழ்துணைப் பயிரும் |
|
புலம்பொடு வந்த புன்கண் மாலை, |
|
'யாண்டு உளர்கொல்?' எனக் கலிழ்வோள் எய்தி, |
|
15 |
இழை அணி நெடுந் தேர்க் கை வண் செழியன் |
மழை விளையாடும் வளம் கெழு சிறுமலைச் |
|
சிலம்பின் கூதளங் கமழும் வெற்பின் |
|
வேய் புரை பணைத் தோள், பாயும் |
|
நோய் அசா வீட, முயங்குகம் பலவே. |
|
தலைமகன் இடைச் சுரத்து அழிந்த நெஞ்சிற்குச் சொல்லியது. - ஆலம்பேரி சாத்தனார் | |
உரை |
'அன்னாய்! வாழி, வேண்டு அன்னை! நம் படப்பைத் |
|
தண் அயத்து அமன்ற கூதளம் குழைய, |
|
இன் இசை அருவிப் பாடும் என்னதூஉம் |
|
கேட்டியோ! வாழி, வேண்டு அன்னை! நம் படப்பை |
|
5 |
ஊட்டியன்ன ஒண் தளிர்ச் செயலை |
ஓங்கு சினைத் தொடுத்த ஊசல், பாம்பு என, |
|
முழு முதல் துமிய உரும் எறிந்தன்றே; |
|
பின்னும் கேட்டியோ?' எனவும் அஃது அறியாள், |
|
அன்னையும் கனை துயில் மடிந்தனள். அதன்தலை |
|
10 |
மன் உயிர் மடிந்தன்றால் பொழுதே காதலர் |
வருவர்ஆயின், 'பருவம் இது' எனச் |
|
சுடர்ந்து இலங்கு எல் வளை நெகிழ்ந்த நம்வயின் |
|
படர்ந்த உள்ளம் பழுது அன்றாக, |
|
வந்தனர் வாழி, தோழி! அந்தரத்து |
|
15 |
இமிழ் பெயல் தலைஇய இனப் பல கொண்மூத் |
தவிர்வு இல் வெள்ளம் தலைத்தலை சிறப்ப, |
|
கன்று கால் ஒய்யும் கடுஞ் சுழி நீத்தம் |
|
புன் தலை மடப் பிடிப் பூசல் பல உடன் |
|
வெண் கோட்டு யானை விளி படத் துழவும் |
|
20 |
அகல் வாய்ப் பாந்தட் படாஅர்ப் |
பகலும் அஞ்சும் பனிக் கடுஞ் சுரனே. |
|
தலைமகன் இரவுக்குறி வந்தமை அறிந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. - ஊட்டியார் | |
உரை |
உலகு கிளர்ந்தன்ன உரு கெழு வங்கம் |
|
புலவுத் திரைப் பெருங் கடல் நீர் இடைப் போழ, |
|
இரவும் எல்லையும் அசைவு இன்று ஆகி, |
|
விரை செலல் இயற்கை வங்கூழ் ஆட்ட, |
|
5 |
கோடு உயர் திணி மணல் அகன் துறை, நீகான் |
மாட ஒள் எரி மருங்கு அறிந்து ஒய்ய, |
|
ஆள் வினைப் பிரிந்த காதலர் நாள் பல |
|
கழியாமையே, அழி படர் அகல, |
|
வருவர்மன்னால் தோழி! தண் பணைப் |
|
10 |
பொரு புனல் வைப்பின் நம் ஊர் ஆங்கண், |
கருவிளை முரணிய தண் புதல் பகன்றை |
|
பெரு வளம் மலர அல்லி தீண்டி, |
|
பலவுக் காய்ப் புறத்த பசும் பழப் பாகல் |
|
கூதள மூதிலைக் கொடி நிரைத் தூங்க, |
|
15 |
அறன் இன்று அலைக்கும் ஆனா வாடை |
கடி மனை மாடத்துக் கங்குல் வீச, |
|
'திருந்துஇழை நெகிழ்ந்து பெருங் கவின் சாய, |
|
நிரை வளை ஊருந் தோள்' என, |
|
உரையொடு செல்லும் அன்பினர்ப் பெறினே. |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகள், ஆற்றாமை மீதூர, தோழிக்குச் சொல்லியது. -மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
இரும் புலி தொலைத்த பெருங் கை வேழத்துப் |
|
புலவு நாறு புகர் நுதல் கழுவ, கங்குல் |
|
அருவி தந்த அணங்குடை நெடுங் கோட்டு |
|
அஞ்சு வரு விடர் முகை ஆர் இருள் அகற்றி, |
|
5 |
மின் ஒளிர் எஃகம் செல் நெறி விளக்க, |
தனியன் வந்து, பனி அலை முனியான், |
|
நீர் இழி மருங்கின் ஆர் இடத்து அமன்ற |
|
குளவியொடு மிடைந்த கூதளங் கண்ணி |
|
அசையா நாற்றம் அசை வளி பகர, | |
10 |
துறு கல் நண்ணிய கறி இவர் படப்பைக் |
குறி இறைக் குரம்பை நம் மனைவயின் புகுதரும், |
|
மெய்ம் மலி உவகையன்; அந் நிலை கண்டு, |
|
'முருகு' என உணர்ந்து, முகமன் கூறி, |
|
உருவச் செந் தினை நீரொடு தூஉய், |
|
15 |
நெடு வேள் பரவும், அன்னை; அன்னோ! |
என் ஆவது கொல்தானே பொன் என |
|
மலர்ந்த வேங்கை அலங்கு சினை பொலிய |
|
மணி நிற மஞ்ஞை அகவும் |
|
அணி மலை நாடனொடு அமைந்த நம் தொடர்பே? |
|
இரவுக்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய், தோழி சொல்லியது. - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் | |
உரை |
விசும்பு விசைத்து எழுந்த கூதளங் கோதையின், |
|
பசுங் கால் வெண் குருகு வாப் பறை வளைஇ, |
|
ஆர்கலி வளவயின் போதொடு பரப்ப, |
|
புலம் புனிறு தீர்ந்த புது வரல் அற்சிரம், |
|
5 |
நலம் கவர் பசலை நலியவும், நம் துயர் |
அறியார்கொல்லோ, தாமே? அறியினும், |
|
நம் மனத்து அன்ன மென்மை இன்மையின், |
|
நம்முடை உலகம் உள்ளார்கொல்லோ? |
|
யாங்கு என உணர்கோ, யானே? வீங்குபு |
|
10 |
தலை வரம்பு அறியாத் தகை வரல் வாடையொடு |
முலையிடைத் தோன்றிய நோய் வளர் இள முளை |
|
அசைவுடை நெஞ்சத்து உயவுத் திரள் நீடி, |
|
ஊரோர் எடுத்த அம்பல் அம் சினை, |
|
ஆராக் காதல் அவிர் தளிர் பரப்பி, |
|
15 |
புலவர் புகழ்ந்த நார் இல் பெரு மரம் |
நில வரை எல்லாம் நிழற்றி, |
|
அலர் அரும்பு ஊழ்ப்பவும் வாராதோரே. |
|
பிரிவின்கண் தலைமகள் அறிவு மயங்கிச் சொல்லியது.-ஒளவையார் | |
உரை |
மேல் |