நீர்முள்ளி (முண்டகம்) |
கூன் முள் முள்ளிக் குவிகுலைக் கழன்ற, |
|
மீன் முள் அன்ன, வெண் கால் மா மலர் |
|
பொய்தல் மகளிர் விழவு அணிக் கூட்டும் |
|
அவ் வயல் நண்ணிய வளம் கேழ் ஊரனைப் |
|
5 |
புலத்தல் கூடுமோ தோழி! அல்கல் |
பெருங் கதவு பொருத யானை மருப்பின் |
|
இரும்பு செய் தொடியின் ஏர ஆகி, |
|
மாக் கண் அடைய மார்பகம் பொருந்தி |
|
முயங்கல் விடாஅல் இவை' என மயங்கி, |
|
10 |
'யான் ஓம்' என்னவும் ஒல்லார், தாம் மற்று |
இவை பாராட்டிய பருவமும் உளவே; இனியே |
|
புதல்வற் தடுத்த பாலொடு தடைஇ, |
|
திதலை அணிந்த தேம் கொள் மென் முலை |
|
நறுஞ் சாந்து அணிந்த கேழ் கிளர் அகலம் |
|
15 |
வீங்க முயங்கல் யாம் வேண்டினமே; |
தீம் பால் படுதல் தாம் அஞ்சினரே; ஆயிடைக் |
|
கவவுக் கை நெகிழ்ந்தமை போற்றி, மதவு நடைச் |
|
செவிலி கை என் புதல்வனை நோக்கி, |
|
'நல்லோர்க்கு ஒத்தனிர் நீயிர்; இஃதோ |
|
20 |
செல்வற்கு ஒத்தனம், யாம்' என, மெல்ல என் |
மகன்வயின் பெயர்தந்தேனே; அது கண்டு, |
|
'யாமும் காதலம், அவற்கு' எனச் சாஅய், |
|
சிறு புறம் கவையினனாக, உறு பெயல் |
|
தண் துளிக்கு ஏற்ற பல உழு செஞ் செய் |
|
25 |
மண் போல் நெகிழ்ந்து, அவற் கலுழ்ந்தே |
நெஞ்சு அறைபோகிய அறிவினேற்கே? |
|
தலைமகன் தோழியை வாயில் வேண்டி, அவளால் தான் வாயில் பெறாது,ஆற்றாமையே வாயிலாகப் புக்கு, கூடிய தலைமகன் நீக்கத்துக்கண் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப்பெருவழுதி | |
உரை |
அம்ம வாழி, கேளிர்! முன் நின்று |
|
கண்டனிர்ஆயின், கழறலிர்மன்னோ |
|
நுண் தாது பொதிந்த செங் காற் கொழு முகை |
|
முண்டகம் கெழீஇய மோட்டு மணல் அடைகரை, |
|
5 |
பேஎய்த் தலைய பிணர் அரைத் தாழை |
எயிறுடை நெடுந் தோடு காப்ப, பல உடன் |
|
வயிறுடைப் போது வாலிதின் விரீஇ, |
|
புலவுப் பொருது அழித்த பூ நாறு பரப்பின் |
|
இவர் திரை தந்த ஈர்ங் கதிர் முத்தம் |
|
10 |
கவர் நடைப் புரவி கால் வடுத் தபுக்கும் |
நல் தேர் வழுதி கொற்கை முன் துறை |
|
வண்டு வாய் திறந்த வாங்குகழி நெய்தற் |
|
போது புறங்கொடுத்த உண்கண் |
|
மாதர் வாள் முகம் மதைஇய நோக்கே. |
|
கழறிய பாங்கற்குத் தலைமகன் கழற்றெதிர் மறுத்தது. - வெண்கண்ணனார் | |
உரை |
மணி மருள் மலர முள்ளி அமன்ற, |
|
துணி நீர், இலஞ்சிக் கொண்ட பெரு மீன் |
|
அரி நிறக் கொழுங் குறை வௌவினர் மாந்தி, |
|
வெண்ணெல் அரிநர் பெயர்நிலைப் பின்றை, |
|
5 |
இடை நிலம் நெரிதரு நெடுங் கதிர்ப் பல் சூட்டுப் |
பனி படு சாய்ப் புறம் பரிப்ப, கழனிக் |
|
கருங் கோட்டு மாஅத்து அலங்கு சினைப் புதுப் பூ |
|
மயங்கு மழைத் துவலையின் தாஅம் ஊரன் |
|
காமம் பெருமை அறியேன், நன்றும் |
|
10 |
உய்ந்தனென் வாழி, தோழி! அல்கல் |
அணி கிளர் சாந்தின் அம் பட்டு இமைப்ப, |
|
கொடுங் குழை மகளிரின் ஒடுங்கிய இருக்கை |
|
அறியாமையின் அழிந்த நெஞ்சின், |
|
'ஏற்று இயல் எழில் நடைப் பொலிந்த மொய்ம்பின், |
|
15 |
தோட்டு இருஞ் சுரியல் மணந்த பித்தை, |
ஆட்டன் அத்தியைக் காணீரோ?' என |
|
நாட்டின் நாட்டின், ஊரின் ஊரின், |
|
'கடல் கொண்டன்று' என, 'புனல் ஒளித்தன்று' என, |
|
கலுழ்ந்த கண்ணள், காதலற் கெடுத்த |
|
20 |
ஆதிமந்தி போல, |
ஏதம் சொல்லி, பேது பெரிது உறலே. |
|
ஆற்றாமை வாயிலாகப் புக்க தலைமகன் நீக்கத்துக்கண் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - பரணர் | |
உரை |
மேல் |