முசுண்டை |
தேம் படு சிமயப் பாங்கர்ப் பம்பிய |
|
குவை இலை முசுண்டை வெண் பூக் குழைய, |
|
வான் எனப் பூத்த பானாட் கங்குல், |
|
மறித் துரூஉத் தொகுத்த பறிப் புற இடையன் |
|
5 |
தண் கமழ் முல்லை தோன்றியொடு விரைஇ, |
வண்டு படத் தொடுத்த நீர் வார் கண்ணியன், |
|
ஐது படு கொள்ளி அங்கை காய, |
|
குறு நரி உளம்பும் கூர் இருள் நெடு விளி |
|
சிறு கட் பன்றிப் பெரு நிரை கடிய, |
|
10 |
முதைப் புனம் காவலர் நினைத்திருந்து ஊதும் |
கருங் கோட்டு ஓசையொடு ஒருங்கு வந்து இசைக்கும் |
|
வன் புலக் காட்டு நாட்டதுவே அன்பு கலந்து |
|
ஆர்வம் சிறந்த சாயல், |
|
இரும் பல் கூந்தல், திருந்திழை ஊரே! |
வினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது; தலைமகன் பாங்கற்குச் சொற்றதூஉம் ஆம். - நன்பலூர்ச் சிறு மேதாவியார் | |
உரை |
அம்ம வாழி, தோழி! பொருள் புரிந்து |
|
உள்ளார்கொல்லோ, காதலர்? உள்ளியும், |
|
சிறந்த செய்தியின் மறந்தனர்கொல்லோ? |
|
பயன் நிலம் குழைய வீசி, பெயல் முனிந்து, |
|
5 |
விண்டு முன்னிய கொண்டல் மா மழை |
மங்குல் அற்கமொடு பொங்குபு துளிப்ப, |
|
வாடையொடு நிவந்த ஆய் இதழ்த் தோன்றி |
|
சுடர் கொள் அகலின் சுருங்கு பிணி அவிழ, |
|
சுரி முகிழ் முசுண்டைப் பொதி அவிழ் வான் பூ |
|
10 |
விசும்பு அணி மீனின் பசும் புதல் அணிய, |
களவன் மண் அளைச் செறிய, அகல் வயல் |
|
கிளை விரி கரும்பின் கணைக்கால் வான் பூ |
|
மாரி அம் குருகின் ஈரிய குரங்க, |
|
நனி கடுஞ் சிவப்பொடு நாமம் தோற்றி, |
|
15 |
பனி கடி கொண்ட பண்பு இல் வாடை |
மருளின் மாலையொடு அருள் இன்றி நலிய, |
|
'நுதல் இறைகொண்ட அயல் அறி பசலையொடு |
|
தொல் நலம் சிதையச் சாஅய், |
|
என்னள்கொல் அளியள்?' என்னாதோரே. |
|
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள், ஆற்றாமை மீதூர, தோழிக்குச் சொல்லியது. - கழார்க்கீரன் எயிற்றியார் | |
உரை |
மழை இல் வானம் மீன் அணிந்தன்ன, |
|
குழை அமல் முசுண்டை வாலிய மலர, |
|
வரி வெண் கோடல் வாங்கு குலை வான் பூப் |
|
பெரிய சூடிய கவர் கோல் கோவலர், |
|
5 |
எல்லுப் பெயல் உழந்த பல் ஆன் நிரையொடு, |
நீர் திகழ் கண்ணியர், ஊர்வயின் பெயர்தர, |
|
நனி சேண்பட்ட மாரி தளி சிறந்து, |
|
ஏர்தரு கடு நீர் தெருவுதொறு ஒழுக, |
|
பேர் இசை முழக்கமொடு சிறந்து நனி மயங்கி, |
|
10 |
கூதிர் நின்றன்றால், பொழுதே! காதலர் |
நம் நிலை அறியார் ஆயினும், தம் நிலை |
|
அறிந்தனர்கொல்லோ தாமே ஓங்கு நடைக் |
|
காய் சின யானை கங்குல் சூழ, |
|
அஞ்சுவர இறுத்த தானை |
|
15 |
வெஞ் சின வேந்தன் பாசறையோரே? |
பருவம் கண்டு, வன்புறை எதிர் அழிந்து, தலைமகள் தோழிக்குச் சொல்லியது;தோழி தலைமகட்குச் சொல்லியதூஉம் ஆம். - உம்பற் காட்டு இளங்கண்ணனார் | |
உரை |
மேல் |