அடும்பு |
கொடுந் தாள் முதலையொடு கோட்டுமீன் வழங்கும் |
|
இருங் கழி இட்டுச் சுரம் நீந்தி, இரவின் |
|
வந்தோய்மன்ற தண் கடற் சேர்ப்ப! |
|
நினக்கு எவன் அரியமோ, யாமே? எந்தை |
|
5 |
புணர் திரைப் பரப்பகம் துழைஇத் தந்த |
பல் மீன் உணங்கற் படுபுள் ஓப்புதும். |
|
முண்டகம் கலித்த முதுநீர் அடைகரை |
|
ஒண் பல் மலர கவட்டு இலை அடும்பின் |
|
செங் கேழ் மென் கொடி ஆழி அறுப்ப, |
|
10 |
இன மணிப் புரவி நெடுந் தேர் கடைஇ, |
மின் இலைப் பொலிந்த விளங்கு இணர் அவிழ் பொன் |
|
தண் நறும் பைந் தாது உறைக்கும் |
|
புன்னைஅம் கானல், பகல் வந்தீமே. |
|
இரவுக்குறி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது. - மருங்கூர் கிழார் பெருங் கண்ணனார் | |
உரை |
ஒடுங்கு ஈர் ஓதி நினக்கும் அற்றோ? |
|
நடுங்கின்று, அளித்து, என் நிறை இல் நெஞ்சம். |
|
அடும்பு கொடி சிதைய வாங்கி, கொடுங் கழிக் |
|
குப்பை வெண் மணற் பக்கம் சேர்த்தி, |
|
5 |
நிறைச் சூல் யாமை மறைத்து ஈன்று, புதைத்த |
கோட்டு வட்டு உருவின் புலவு நாறு முட்டை |
|
பார்ப்பு இடன் ஆகும் அளவை, பகுவாய்க் |
|
கணவன் ஓம்பும் கானல்அம் சேர்ப்பன்: |
|
முள் உறின் சிறத்தல் அஞ்சி, மெல்ல |
|
10 |
வாவு உடைமையின் வள்பின் காட்டி, |
ஏத் தொழில் நவின்ற எழில் நடைப் புரவி |
|
செழு நீர்த் தண் கழி நீந்தலின், ஆழி |
|
நுதிமுகம் குறைந்த பொதி முகிழ் நெய்தல், |
|
பாம்பு உயர் தலையின், சாம்புவன நிவப்ப, |
|
15 |
இர வந்தன்றால் திண் தேர்; கரவாது |
ஒல்லென ஒலிக்கும் இளையரொடு வல் வாய் |
|
அரவச் சீறூர் காண, |
|
பகல் வந்தன்றால், பாய்பரி சிறந்தே. |
|
தோழி வரைவு மலிந்து சொல்லியது. குமுழிஞாழலார் நப்பசலையார் | |
உரை |
ஓங்கு திரைப் பரப்பின் வாங்கு விசைக் கொளீஇ, |
|
திமிலோன் தந்த கடுங் கண் வய மீன், |
|
தழை அணி அல்குல் செல்வத் தங்கையர், |
|
விழவு அயர் மறுகின் விலை எனப் பகரும் |
|
5 |
கானல் அம் சிறுகுடி, பெரு நீர்ச் சேர்ப்ப! |
மலர் ஏர் உண்கண் எம் தோழி எவ்வம் |
|
அலர் வாய் நீங்க, நீ அருளாய் பொய்ப்பினும், |
|
நெடுங் கழி துழைஇய குறுங் கால் அன்னம் |
|
அடும்பு அமர் எக்கர் அம் சிறை உளரும், |
|
10 |
தடவு நிலைப் புன்னைத் தாது அணி, பெருந் துறை |
நடுங்கு அயிர் போழ்ந்த கொடுஞ்சி நெடுந் தேர் |
|
வண்டற் பாவை சிதைய வந்து, நீ |
|
தோள் புதிது உண்ட ஞான்றை, |
|
சூளும் பொய்யோ, கடல் அறி கரியே? |
|
பகற்குறிக்கண் வந்த தலைமகனைத் தோழி வரைவு கடாயது. - மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் | |
உரை |
கழிப் பூங் குற்றும், கானல் அல்கியும், |
|
வண்டற் பாவை வரி மணல் அயர்ந்தும், |
|
இன்புறப் புணர்ந்தும், இளி வரப் பணிந்தும், |
|
தன் துயர் வெளிப்படத் தவறி, நம் துயர் |
|
5 |
அறியாமையின், அயர்ந்த நெஞ்சமொடு |
செல்லும், அன்னோ; மெல் அம் புலம்பன்! |
|
செல்வோன் பெயர் புறத்து இரங்கி, முன் நின்று, |
|
தகைஇய சென்ற என் நிறை இல் நெஞ்சம் |
|
எய்தின்றுகொல்லோ தானே? எய்தியும், |
|
10 |
காமம் செப்ப, நாண் இன்றுகொல்லோ? |
உதுவ காண், அவர் ஊர்ந்த தேரே; |
|
குப்பை வெண் மணற் குவவுமிசையானும், |
|
எக்கர்த் தாழை மடல்வயினானும், |
|
ஆய் கொடிப் பாசடும்பு பரிய ஊர்பு இழிபு, |
|
15 |
சிறுகுடிப் பரதவர் பெருங் கடல் மடுத்த |
கடுஞ் செலல் கொடுந் திமில் போல, |
|
நிவந்து படு தோற்றமொடு இகந்து மாயும்மே! |
|
தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகட்குத் குறை நயப்பக் கூறியது. -உலோச்சனார் | |
உரை |
மேல் |