ஆம்பல் |
பகுவாய் வராஅற் பல் வரி இரும் போத்துக் |
|
கொடு வாய் இரும்பின் கோள் இரை துற்றி, |
|
ஆம்பல் மெல் அடை கிழிய, குவளைக் |
|
கூம்பு விடு பல் மலர் சிதையப் பாய்ந்து, எழுந்து, |
|
5 |
அரில் படு வள்ளை ஆய் கொடி மயக்கி, |
தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது, |
|
கயிறு இடு கதச் சேப் போல, மதம் மிக்கு, |
|
நாள், கயம் உழக்கும் பூக் கேழ் ஊர! |
|
வரு புனல் வையை வார் மணல் அகன் துறை, |
|
10 |
திரு மருது ஓங்கிய விரி மலர்க் காவில், |
நறும் பல் கூந்தற் குறுந் தொடி மடந்தையொடு |
|
வதுவை அயர்ந்தனை என்ப. அலரே, |
|
கொய் சுவல் புரவிக் கொடித் தேர்ச் செழியன் |
|
ஆலங்கானத்து அகன் தலை சிவப்ப, |
|
15 |
சேரல், செம்பியன், சினம் கெழு திதியன், |
போர் வல் யானைப் பொலம் பூண் எழினி, |
|
நார் அரி நறவின் எருமையூரன், |
|
தேம் கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின் |
|
இருங்கோ வேண்மான், இயல் தேர்ப் பொருநன், என்று |
|
20 |
எழுவர் நல் வலம் அடங்க, ஒரு பகல் |
முரைசொடு வெண்குடை அகப்படுத்து, உரை செல, |
|
கொன்று, களம்வேட்ட ஞான்றை, |
|
வென்றி கொள் வீரர் ஆர்ப்பினும் பெரிதே! |
|
தலைமகள் பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனொடு புலந்து சொல்லியது. - மதுரை நக்கீரர் | |
உரை |
நறவு உண் மண்டை நுடக்கலின், இறவுக் கலித்து, |
|
பூட்டு அறு வில்லின் கூட்டுமுதல் தெறிக்கும் |
|
பழனப் பொய்கை அடைகரைப் பிரம்பின் |
|
அர வாய் அன்ன அம் முள் நெடுங் கொடி |
|
5 |
அருவி ஆம்பல் அகல் அடை துடக்கி, |
அசைவரல் வாடை தூக்கலின், ஊதுஉலை |
|
விசை வாங்கு தோலின், வீங்குபு ஞெகிழும் |
|
கழனிஅம் படப்பைக் காஞ்சி ஊர! |
|
'ஒண் தொடி ஆயத்துள்ளும் நீ நயந்து |
|
10 |
கொண்டனை' என்ப 'ஓர் குறுமகள்' அதுவே |
செம்பொற் சிலம்பின், செறிந்த குறங்கின், |
|
அம் கலுழ் மாமை, அஃதை தந்தை, |
|
அண்ணல் யானை அடு போர்ச் சோழர், |
|
வெண்ணெல் வைப்பின் பருவூர்ப் பறந்தலை, |
|
15 |
இரு பெரு வேந்தரும் பொருது களத்து ஒழிய, |
ஒளிறு வாள் நல் அமர்க் கடந்த ஞான்றை, |
|
களிறு கவர் கம்பலை போல, |
|
அலர் ஆகின்றது, பலர் வாய்ப் பட்டே. |
|
தோழி வாயில் மறுத்தது. மருதம் பாடிய இளங்கடுங்கோ | |
உரை |
நெடுங் கொடி நுடங்கும் நறவு மலி பாக்கத்து, |
|
நாள் துறைப்பட்ட மோட்டு இரு வராஅல் |
|
துடிக்கண் கொழுங் குறை நொடுத்து, உண்டு ஆடி, |
|
வேட்டம் மறந்து, துஞ்சும் கொழுநர்க்குப் பாட்டி |
|
5 |
ஆம்பல் அகல் இலை, அமலை வெஞ் சோறு |
தீம் புளிப் பிரம்பின் திரள்கனி பெய்து, |
|
விடியல் வைகறை இடூஉம் ஊர! |
|
தொடுகலம்; குறுக வாரல் தந்தை |
|
கண் கவின் அழித்ததன் தப்பல், தெறுவர, |
|
10 |
ஒன்றுமொழிக் கோசர்க் கொன்று, முரண் போகிய, |
கடுந் தேர்த் திதியன் அழுந்தை, கொடுங் குழை |
|
அன்னிமிஞிலியின் இயலும் |
|
நின் நலத் தகுவியை முயங்கிய மார்பே. |
|
பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகற்குச் கிழத்தி சொல்லியது. - பரணர் | |
உரை |
பிணங்கு அரில் வள்ளை நீடு இலைப் பொதும்பில |
|
மடி துயில் முனைஇய வள் உகிர் யாமை |
|
நொடி விடு கல்லின் போகி, அகன்துறைப் |
|
பகுவாய் நிறைய, நுங்கின் கள்ளின் |
|
5 |
நுகர்வார் அருந்து மகிழ்பு இயங்கு நடையொடு |
தீம் பெரும் பழனம் உழக்கி, அயலது |
|
ஆம்பல் மெல் அடை ஒடுங்கும் ஊர! |
|
பொய்யால்; அறிவென், நின் மாயம். அதுவே |
|
கையகப்பட்டமை அறியாய்; நெருநை |
|
10 |
மை எழில் உண்கண் மடந்தையொடு வையை |
ஏர் தரு புதுப் புனல் உரிதினின் நுகர்ந்து, |
|
பரத்தை ஆயம் கரப்பவும், ஒல்லாது |
|
கவ்வை ஆகின்றால், பெரிதே; காண்தகத் |
|
தொல் புகழ் நிறைந்த பல் பூங் கழனி, |
|
15 |
கரும்பு அமல் படப்பை, பெரும் பெயர்க் கள்ளூர், |
திரு நுதற் குறுமகள் அணி நலம் வவ்விய |
|
அறனிலாளன்,'அறியேன்' என்ற |
|
திறன் இல் வெஞ் சூள் அறி கரி கடாஅய், |
|
முறி ஆர் பெருங் கிளை செறியப் பற்றி, |
|
20 |
நீறு தலைப்பெய்த ஞான்றை, |
வீறு சால் அவையத்து ஆர்ப்பினும் பெரிதே. |
|
தோழி தலைமகற்கு வாயின் மறுத்தது. - மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார் | |
உரை |
மேல் |