மல்லிகை(குளவி) |
வானம் வேண்டா வறன்இல் வாழ்க்கை |
|
நோன் ஞாண் வினைஞர் கோள் அறிந்து ஈர்க்கும் |
|
மீன் முதிர் இலஞ்சிக் கலித்த தாமரை |
|
நீர்மிசை நிவந்த நெடுந் தாள் அகல் இலை |
|
5 |
இருங் கயம் துளங்க, கால் உறுதொறும் |
பெருங் களிற்றுச் செவியின் அலைக்கும் ஊரனொடு |
|
எழுந்த கௌவையோ பெரிதே; நட்பே, |
|
கொழுங் கோல் வேழத்துப் புணை துணையாகப் |
|
புனல் ஆடு கேண்மை அனைத்தே; அவனே, |
|
10 |
ஒண் தொடி மகளிர் பண்டை யாழ் பாட, |
ஈர்ந் தண் முழவின் எறிகுணில் விதிர்ப்ப, |
|
தண் நறுஞ் சாந்தம் கமழும் தோள் மணந்து, |
|
இன்னும் பிறள் வயினானே; மனையோள் |
|
எம்மொடு புலக்கும் என்ப; வென் வேல், |
|
15 |
மாரி அம்பின், மழைத்தோற் பழையன் |
காவிரி வைப்பின் போஒர் அன்ன, என் |
|
செறிவளை உடைத்தலோ இலெனே; உரிதினின் |
|
யாம் தன் பகையேம்அல்லேம்; சேர்ந்தோர் |
|
திரு நுதல் பசப்ப நீங்கும் |
|
20 |
கொழுநனும் சாலும், தன் உடன் உறை பகையே. |
தலைமகட்குப் பாங்காயினார் கேட்ப, இல்லிடைப் பரத்தை சொல்லி நெருங்கியது. -பரணர் | |
உரை |
இரும் புலி தொலைத்த பெருங் கை வேழத்துப் |
|
புலவு நாறு புகர் நுதல் கழுவ, கங்குல் |
|
அருவி தந்த அணங்குடை நெடுங் கோட்டு |
|
அஞ்சு வரு விடர் முகை ஆர் இருள் அகற்றி, |
|
5 |
மின் ஒளிர் எஃகம் செல் நெறி விளக்க, |
தனியன் வந்து, பனி அலை முனியான், |
|
நீர் இழி மருங்கின் ஆர் இடத்து அமன்ற |
|
குளவியொடு மிடைந்த கூதளங் கண்ணி |
|
அசையா நாற்றம் அசை வளி பகர, |
|
10 |
துறு கல் நண்ணிய கறி இவர் படப்பைக் |
குறி இறைக் குரம்பை நம் மனைவயின் புகுதரும், |
|
மெய்ம் மலி உவகையன்; அந் நிலை கண்டு, |
|
'முருகு' என உணர்ந்து, முகமன் கூறி, |
|
உருவச் செந் தினை நீரொடு தூஉய், |
|
15 |
நெடு வேள் பரவும், அன்னை; அன்னோ! |
என் ஆவது கொல்தானே பொன் என |
|
மலர்ந்த வேங்கை அலங்கு சினை பொலிய |
|
மணி நிற மஞ்ஞை அகவும் |
|
அணி மலை நாடனொடு அமைந்த நம் தொடர்பே? |
|
இரவுக்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய், தோழி சொல்லியது. - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் | |
உரை |
மேல் |