முல்லை |
முல்லை வைந் நுனை தோன்ற, இல்லமொடு |
|
பைங் காற் கொன்றை மென் பிணி அவிழ, |
|
இரும்பு திரித்தன்ன மா இரு மருப்பின், |
|
பரல் அவல் அடைய, இரலை, தெறிப்ப, |
|
5 |
மலர்ந்த ஞாலம் புலம்பு புறக்கொடுப்ப, |
கருவி வானம் கதழ் உறை சிதறி, |
|
கார் செய்தன்றே, கவின் பெறு கானம். |
|
குரங்கு உளைப் பொலிந்த கொய்சுவற் புரவி, |
|
நரம்பு ஆர்த்தன்ன, வாங்கு வள்பு அரிய, |
|
10 |
பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த |
தாது உண் பறவை பேதுறல் அஞ்சி, |
|
மணி நா ஆர்த்த மாண் வினைத் தேரன், |
|
உவக்காண் தோன்றும் குறும் பொறை நாடன், |
|
கறங்கு இசை விழவின் உறந்தைக் குணாது, |
|
15 |
நெடும் பெருங் குன்றத்து அமன்ற காந்தட் |
போது அவிழ் அலரின் நாறும் |
|
ஆய் தொடி அரிவை! நின் மாண் நலம் படர்ந்தே. |
|
தோழி தலைமகளைப் பருவங் காட்டி வற்புறுத்தியது. - குறுங்குடி மருதனார் | |
உரை |
'மனை இள நொச்சி மௌவல் வால் முகைத் |
|
துணை நிரைத்தன்ன, மா வீழ், வெண் பல், |
|
அவ் வயிற்று, அகன்ற அல்குல், தைஇத் |
|
தாழ் மென் கூந்தல், தட மென் பணைத் தோள், |
|
5 |
மடந்தை மாண் நலம் புலம்ப, சேய் நாட்டுச் |
செல்லல்' என்று, யான் சொல்லவும், ஒல்லாய், |
|
வினை நயந்து அமைந்தனைஆயின், மனை நகப் |
|
பல் வேறு வெறுக்கை தருகம் வல்லே, |
|
எழு இனி, வாழி, என் நெஞ்சே! புரி இணர் |
|
10 |
மெல் அவிழ் அம் சினை புலம்ப, வல்லோன் |
கோடு அறை கொம்பின் வீ உகத் தீண்டி, |
|
மராஅம் அலைத்த மண வாய்த் தென்றல், |
|
சுரம் செல் மள்ளர் சுரியல் தூற்றும், |
|
என்றூழ் நின்ற புன் தலை வைப்பில், |
|
15 |
பருந்து இளைப்படூஉம் பாறு தலை ஓமை |
இருங் கல் விடரகத்து, ஈன்று இளைப்பட்ட, |
|
மென் புனிற்று அம் பிணவு பசித்தென, பைங் கட் |
|
செந்நாய் ஏற்றை கேழல் தாக்க, |
|
இரியற் பிணவல் தீண்டலின், பரீஇச் |
|
20 |
செங் காய் உதிர்ந்த பைங் குலை ஈந்தின் |
பரல் மண் சுவல முரண் நிலம் உடைத்த |
|
வல் வாய்க் கணிச்சி, கூழ் ஆர், கோவலர் |
|
ஊறாது இட்ட உவலைக் கூவல், |
|
வெண் கோடு நயந்த அன்பு இல் கானவர் |
|
25 |
இகழ்ந்து இயங்கு இயவின் அகழ்ந்த குழி செத்து, |
இருங் களிற்று இன நிரை, தூர்க்கும் |
|
பெருங் கல் அத்தம் விலங்கிய காடே. |
|
பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்த தலைமகன் இடைச் சுரத்துநின்று மீளலுற்ற நெஞ்சினைக் கழறியது. - காவன்முல்லைப் பூதனார் | |
உரை |
வினை வலம்படுத்த வென்றியொடு மகிழ் சிறந்து, |
|
போர் வல் இளையர் தாள் வலம் வாழ்த்த, |
|
தண் பெயல் பொழிந்த பைதுறு காலை, |
|
குருதி உருவின் ஒண் செம் மூதாய் |
|
5 |
பெரு வழி மருங்கில் சிறு பல வரிப்ப, |
பைங் கொடி முல்லை மென் பதப் புது வீ |
|
வெண் களர் அரிமணல் நன் பல தாஅய், |
|
வண்டு போது அவிழ்க்கும் தண் கமழ் புறவில், |
|
கருங் கோட்டு இரலைக் காமர் மடப் பிணை |
|
10 |
மருண்ட மான் நோக்கம் காண்தொறும், 'நின் நினைந்து |
"திண் தேர் வலவ! கடவு" எனக் கடைஇ, |
|
இன்றே வருவர்; ஆன்றிகம் பனி' என, |
|
வன்புறை இன் சொல் நன் பல பயிற்றும் |
|
நின் வலித்து அமைகுவென்மன்னோ அல்கல் |
|
15 |
புன்கண் மாலையொடு பொருந்தி, கொடுங் கோற் |
கல்லாக் கோவலர் ஊதும் |
|
வல் வாய்ச் சிறு குழல் வருத்தாக்காலே! |
|
தலைமகன் பிரிவின்கண் அழிந்த கிழத்தி வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது. - மதுரைக் கவுணியன் பூதத்தனார் | |
உரை |
'நன் கலம் களிற்றொடு நண்ணார் ஏந்தி, |
|
வந்து திறை கொடுத்து, வணங்கினர், வழிமொழிந்து |
|
சென்றீக' என்பஆயின், வேந்தனும் |
|
நிலம் வகுந்துறாஅ ஈண்டிய தானையொடு |
|
5 |
இன்றே புகுதல் வாய்வது; நன்றே. |
மாட மாண் நகர்ப் பாடு அமை சேக்கைத் |
|
துனி தீர் கொள்கை நம் காதலி இனிதுற, |
|
பாசறை வருத்தம் வீட, நீயும் |
|
மின்னு நிமிர்ந்தன்ன பொன் இயற் புனை படை, |
|
10 |
கொய்சுவல், புரவி, கை கவர் வயங்கு பரி, |
வண் பெயற்கு அவிழ்ந்த பைங் கொடி முல்லை |
|
வீ கமழ் நெடு வழி ஊதுவண்டு இரிய, |
|
காலை எய்த, கடவுமதி மாலை |
|
அந்திக் கோவலர் அம் பணை இமிழ் இசை |
|
15 |
அரமிய வியலகத்து இயம்பும் |
நிரை நிலை ஞாயில் நெடு மதில் ஊரே. |
|
தலைமகன் தேர்ப்பாகற்கு உரைத்தது. - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் | |
உரை |
வானம் வாய்ப்பக் கவினி, கானம் |
|
கமஞ் சூல் மா மழை கார் பயந்து இறுத்தென, |
|
மணி மருள் பூவை அணி மலர் இடைஇடை, |
|
செம் புற மூதாய் பரத்தலின், நன் பல |
|
5 |
முல்லை வீ கழல் தாஅய், வல்லோன் |
செய்கை அன்ன செந் நிலப் புறவின்; |
|
வாஅப் பாணி வயங்கு தொழிற் கலிமாத் |
|
தாஅத் தாள் இணை மெல்ல ஒதுங்க, |
|
இடி மறந்து, ஏமதி வலவ! குவிமுகை |
|
10 |
வாழை வான் பூ ஊழுறுபு உதிர்ந்த |
ஒழிகுலை அன்ன திரிமருப்பு ஏற்றொடு |
|
கணைக் கால் அம் பிணைக் காமர் புணர் நிலை |
|
கடுமான் தேர் ஒலி கேட்பின், |
|
நடுநாட் கூட்டம் ஆகலும் உண்டே. |
|
வினை முற்றி மீண்ட தலைமகன் பாகற்கு உரைத்தது. - சீத்தலைச் சாத்தனார் | |
உரை |
''வருதும்'' என்ற நாளும் பொய்த்தன; |
|
அரி ஏர் உண்கண் நீரும் நில்லா; |
|
தண் கார்க்கு ஈன்ற பைங் கொடி முல்லை |
|
வை வாய் வால் முகை அவிழ்ந்த கோதை |
|
5 |
பெய் வனப்பு இழந்த கதுப்பும் உள்ளார், |
அருள் கண்மாறலோ மாறுக அந்தில் |
|
அறன் அஞ்சலரே! ஆயிழை! நமர்' எனச் |
|
சிறிய சொல்லிப் பெரிய புலப்பினும், |
|
பனி படு நறுந் தார் குழைய, நம்மொடு, |
|
10 |
துனி தீர் முயக்கம் பெற்றோள் போல |
உவக்குநள் வாழிய, நெஞ்சே! விசும்பின் |
|
ஏறு எழுந்து முழங்கினும் மாறு எழுந்து சிலைக்கும் |
|
கடாஅ யானை கொட்கும் பாசறை, |
|
போர் வேட்டு எழுந்த மள்ளர் கையதை |
|
15 |
கூர் வாட் குவிமுகம் சிதைய நூறி, |
மான் அடி மருங்கில் பெயர்த்த குருதி |
|
வான மீனின் வயின் வயின் இமைப்ப, |
|
அமர் ஓர்த்து, அட்ட செல்வம் |
|
தமர் விரைந்து உரைப்பக் கேட்கும் ஞான்றே. |
|
வினை முற்றிய தலைமகன் தன் நெஞ்சிற்குச் உரைப்பானாய், பாகற்குச் சொல்லியது. - மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார் | |
உரை |
'இரு பெரு வேந்தர் மாறு கொள் வியன் களத்து, |
|
ஒரு படை கொண்டு, வருபடை பெயர்க்கும் |
|
செல்வம் உடையோர்க்கு நின்றன்று விறல்' என, |
|
பூக் கோள் ஏய தண்ணுமை விலக்கிச் |
|
5 |
செல்வேம்ஆதல் அறியாள், முல்லை |
நேர் கால் முது கொடி குழைப்ப, நீர் சொரிந்து, |
|
காலை வானத்துக் கடுங் குரற் கொண்மூ |
|
முழங்குதொறும் கையற்று, ஒடுங்கி, நப் புலந்து, |
|
பழங்கண் கொண்ட பசலை மேனியள், |
|
10 |
யாங்கு ஆகுவள்கொல் தானே வேங்கை |
ஊழுறு நறு வீ கடுப்பக் கேழ் கொள, |
|
ஆகத்து அரும்பிய மாசு அறு சுணங்கினள், |
|
நல் மணல் வியலிடை நடந்த |
|
சில் மெல் ஒதுக்கின், மாஅயோளே? |
|
பாசறைக்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை அளக்கர்ஞாழார் மகனார் மள்ளனார் | |
உரை |
கடவுட் கற்பொடு குடிக்கு விளக்கு ஆகிய |
|
புதல்வற் பயந்த புகழ் மிகு சிறப்பின் |
|
நன்னராட்டிக்கு அன்றியும், எனக்கும் |
|
இனிது ஆகின்றால்; சிறக்க, நின் ஆயுள்! |
|
5 |
அருந் தொழில் முடித்த செம்மல் உள்ளமொடு |
சுரும்பு இமிர் மலர கானம் பிற்பட, |
|
வெண் பிடவு அவிழ்ந்த வீ கமழ் புறவில் |
|
குண்டைக் கோட்ட குறு முள் கள்ளிப் |
|
புன் தலை புதைத்த கொழுங் கொடி முல்லை |
|
10 |
ஆர் கழல் புதுப் பூ உயிர்ப்பின் நீக்கி, |
தெள் அறல் பருகிய திரிமருப்பு எழிற் கலை |
|
புள்ளி அம் பிணையொடு வதியும் ஆங்கண், |
|
கோடுடைக் கையர், துளர் எறி வினைஞர், |
|
அரியல் ஆர்கையர், விளைமகிழ் தூங்க, |
|
15 |
செல்கதிர் மழுகிய உருவ ஞாயிற்றுச் |
செக்கர் வானம் சென்ற பொழுதில், |
|
கற் பால் அருவியின் ஒலிக்கும் நல் தேர்த் |
|
தார் மணி பல உடன் இயம்ப |
|
சீர் மிகு குருசில்! நீ வந்து நின்றதுவே. |
|
தலைமகன் வினைவயிற் பிரிந்து வந்து எய்திய இடத்து, தோழி புல்லு மகிழ்வு உரைத்தது. - மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
மேல் |