வயலை |
'கள்ளி அம் காட்ட புள்ளி அம் பொறிக் கலை |
|
வறன் உறல் அம் கோடு உதிர, வலம் கடந்து, |
|
புலவுப் புலி துறந்த கலவுக் கழி கடு முடை, |
|
இரவுக் குறும்பு அலற நூறி, நிரை பகுத்து, |
|
5 |
இருங் கல் முடுக்கர்த் திற்றி கெண்டும் |
கொலை வில் ஆடவர் போல, பலவுடன் |
|
பெருந் தலை எருவையொடு பருந்து வந்து இறுக்கும் |
|
அருஞ் சுரம் இறந்த கொடியோர்க்கு அல்கலும், |
|
இருங் கழை இறும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்த |
|
10 |
நுணங்கு கண் சிறு கோல் வணங்குஇறை மகளிரொடு |
அகவுநர்ப் புரந்த அன்பின், கழல் தொடி, |
|
நறவு மகிழ் இருக்கை, நன்னன் வேண்மான் |
|
வயலை வேலி வியலூர் அன்ன, நின் |
|
அலர்முலை ஆகம் புலம்ப, பல நினைந்து, |
|
15 |
ஆழல்' என்றி தோழி! யாழ என் |
கண் பனி நிறுத்தல் எளிதோ குரவு மலர்ந்து, |
|
அற்சிரம் நீங்கிய அரும் பத வேனில் |
|
அறல் அவிர் வார் மணல் அகல்யாற்று அடைகரை, |
|
துறை அணி மருதமொடு இகல் கொள ஓங்கி, |
|
20 |
கலிழ் தளிர் அணிந்த இருஞ் சினை மாஅத்து |
இணர் ததை புதுப் பூ நிரைத்த பொங்கர், |
|
புகை புரை அம் மஞ்சு ஊர, |
|
நுகர் குயில் அகவும் குரல் கேட்போர்க்கே? |
|
வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மாமூலனார் | |
உரை |
கடல் கண்டன்ன கண் அகன் பரப்பின் |
|
நிலம் பக வீழ்ந்த வேர் முதிர் கிழங்கின் |
|
கழை கண்டன்ன தூம்புடைத் திரள் கால், |
|
களிற்றுச் செவி அன்ன பாசடை மருங்கில், |
|
5 |
கழு நிவந்தன்ன கொழு முகை இடை இடை |
முறுவல் முகத்தின் பல் மலர் தயங்க, |
|
பூத்த தாமரைப் புள் இமிழ் பழனத்து, |
|
வேப்பு நனை அன்ன நெடுங் கண் நீர்ஞெண்டு |
|
இரை தேர் வெண் குருகு அஞ்சி, அயலது |
|
10 |
ஒலித்த பகன்றை இருஞ் சேற்று அள்ளல், |
திதலையின் வரிப்ப ஓடி, விரைந்து தன் |
|
நீர் மலி மண் அளைச் செறியும் ஊர! |
|
மனை நகு வயலை மரன் இவர் கொழுங் கொடி |
|
அரி மலர் ஆம்பலொடு ஆர்தழை தைஇ, |
|
15 |
விழவு ஆடு மகளிரொடு தழூஉ அணிப் பொலிந்து, |
மலர் ஏர் உண்கண் மாண் இழை முன்கைக் |
|
குறுந் தொடி துடக்கிய நெடுந் தொடர் விடுத்தது |
|
உடன்றனள் போலும், நின் காதலி? எம் போல் |
|
புல் உளைக் குடுமிப் புதல்வற் பயந்து, |
|
20 |
நெல்லுடை நெடு நகர் நின் இன்று உறைய, |
என்ன கடத்தளோ, மற்றே? தன் முகத்து |
|
எழுது எழில் சிதைய அழுதனள் ஏங்கி, |
|
அடித்தென உருத்த தித்திப் பல் ஊழ் |
|
நொடித்தெனச் சிவந்த மெல் விரல் திருகுபு, |
|
25 |
கூர்நுனை மழுகிய எயிற்றள் |
ஊர் முழுதும் நுவலும் நிற் காணிய சென்மே. |
|
தோழி தலைமகனை வாயில் மறுத்தது. மருதம்- பாடிய இளங்கடுங்கோ | |
உரை |
பசும் பழப் பலவின் கானம் வெம்பி, |
|
விசும்பு கண் அழிய, வேனில் நீடி, |
|
கயம் கண் அற்ற கல் ஓங்கு வைப்பின் |
|
நாறு உயிர் மடப் பிடி தழைஇ, வேறு நாட்டு |
|
5 |
விழவுப் படர் மள்ளரின் முழவு எடுத்து உயரி, |
களிறு அதர்ப்படுத்த கல் உயர் கவாஅன் |
|
வெவ் வரை அத்தம் சுட்டி, பையென, |
|
வயலை அம் பிணையல் வார்ந்த கவர்வுற, |
|
திதலை அல்குல் குறுமகள் அவனொடு |
|
10 |
சென்று பிறள் ஆகிய அளவை, என்றும் |
படர் மலி எவ்வமொடு மாதிரம் துழைஇ, |
|
மனை மருண்டு இருந்த என்னினும், நனை மகிழ் |
|
நன்னராளர் கூடு கொள் இன் இயம் |
|
தேர் ஊர் தெருவில் ததும்பும் |
|
15 |
ஊர் இழந்தன்று, தன் வீழ்வு உறு பொருளே. |
மகட் போக்கிய செவிலி சொல்லியது. - கயமனார் | |
உரை |
வேலும் விளங்கின; இளையரும் இயன்றனர்; |
|
தாரும் தையின; தழையும் தொடுத்தன; |
|
நிலம் நீர் அற்ற வெம்மை நீங்கப் |
|
பெயல் நீர் தலைஇ, உலவை இலை நீத்துக் |
|
5 |
குறு முறி ஈன்றன, மரனே; நறு மலர் |
வேய்ந்தன போலத் தோன்றி, பல உடன் |
|
தேம் படப் பொதுளின பொழிலே; கானமும், |
|
நனி நன்று ஆகிய பனி நீங்கு வழி நாள், |
|
பால் எனப் பரத்தரும் நிலவின் மாலைப் |
|
10 |
போது வந்தன்று, தூதே; நீயும் |
கலங்கா மனத்தை ஆகி, என் சொல் |
|
நயந்தனை கொண்மோ நெஞ்சு அமர் தகுவி! |
|
தெற்றி உலறினும், வயலை வாடினும், |
|
நொச்சி மென் சினை வணர் குரல் சாயினும், |
|
15 |
நின்னினும் மடவள் நனி நின் நயந்த |
அன்னை அல்லல் தாங்கி, நின் ஐயர் |
|
புலி மருள் செம்மல் நோக்கி, |
|
வலியாய் இன்னும்; தோய்கம், நின் முலையே! |
|
உடன்போக்கு நேர்ந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. - கயமனார் | |
உரை |
ஓங்கு நிலைத் தாழி மல்கச் சார்த்தி, |
|
குடை அடை நீரின் மடையினள் எடுத்த |
|
பந்தர் வயலை, பந்து எறிந்து ஆடி, |
|
இளமைத் தகைமையை வள மனைக் கிழத்தி! |
|
5 |
'பிதிர்வை நீரை வெண் நீறு ஆக' என, |
யாம் தற் கழறுங் காலை, தான் தன் |
|
மழலை இன் சொல், கழறல் இன்றி, |
|
இன் உயிர் கலப்பக் கூறி, நன்னுதல் |
|
பெருஞ் சோற்று இல்லத்து ஒருங்கு இவண் இராஅள், |
|
10 |
ஏதிலாளன் காதல் நம்பி, |
திரள் அரை இருப்பைத் தொள்ளை வான் பூக் |
|
குருளை எண்கின் இருங் கிளை கவரும் |
|
வெம் மலை அருஞ் சுரம், நம் இவண் ஒழிய, |
|
இரு நிலன் உயிர்க்கும் இன்னாக் கானம், |
|
15 |
நெருநைப் போகிய பெரு மடத் தகுவி |
ஐது அகல் அல்குல் தழை அணிக் கூட்டும் |
|
கூழை நொச்சிக் கீழது, என் மகள் |
|
செம் புடைச் சிறு விரல் வரித்த |
|
வண்டலும் காண்டிரோ, கண் உடையீரே? |
|
மகட் போக்கிய தாய் சொல்லியது. - கயமனார் | |
உரை |
தற் புரந்து எடுத்த எற் துறந்து உள்ளாள், |
|
ஊரும் சேரியும் ஓராங்கு அலர் எழ, |
|
காடும் கானமும் அவனொடு துணிந்து, |
|
நாடும் தேயமும் நனி பல இறந்த |
|
5 |
சிறு வன்கண்ணிக்கு ஏர் தேறுவர் என, |
வாடினை வாழியோ, வயலை! நாள்தொறும், |
|
பல் கிளைக் கொடிக் கொம்பு அலமர மலர்ந்த |
|
அல்குல்தலைக் கூட்டு அம் குழை உதவிய, |
|
வினை அமை வரல் நீர் விழுத் தொடி தத்தக் |
|
10 |
கமஞ்சூல் பெரு நிறை தயங்க முகந்து கொண்டு, |
ஆய் மடக் கண்ணள் தாய் முகம் நோக்கி, |
|
பெய் சிலம்பு ஒலிப்பப் பெயர்வனள், வைகலும், |
|
ஆர நீர் ஊட்டிப் புரப்போர் |
|
யார் மற்றுப் பெறுகுவை? அளியை நீயே! |
|
மகட் போக்கிய தாய் சொல்லியது. - கயமனார் | |
உரை |
மேல் |