வள்ளை |
அரி பெய் சிலம்பின் ஆம்பல் அம் தொடலை, |
|
அரம் போழ் அவ் வளைப் பொலிந்த முன்கை, |
|
இழை அணி பணைத் தோள், ஐயை தந்தை, |
|
மழை வளம் தரூஉம் மா வண் தித்தன், |
|
5 |
பிண்ட நெல்லின் உறந்தை ஆங்கண் |
கழை நிலை பெறாஅக் காவிரி நீத்தம், |
|
குழை மாண் ஒள் இழை நீ வெய்யோளொடு, |
|
வேழ வெண் புணை தழீஇ, பூழியர் |
|
கயம் நாடு யானையின் முகன் அமர்ந்தாஅங்கு, |
|
10 |
ஏந்து எழில் ஆகத்துப் பூந் தார் குழைய, |
நெருநல் ஆடினை, புனலே; இன்று வந்து, |
|
'ஆக வன முலை அரும்பிய சுணங்கின், |
|
மாசு இல் கற்பின், புதல்வன் தாய்!' என, |
|
மாயப் பொய்ம்மொழி சாயினை பயிற்றி, எம் |
|
15 |
முதுமை எள்ளல்; அஃது அமைகும் தில்ல! |
சுடர்ப் பூந் தாமரை நீர் முதிர் பழனத்து, |
|
அம் தூம்பு வள்ளை ஆய் கொடி மயக்கி, |
|
வாளை மேய்ந்த வள் எயிற்று நீர்நாய், |
|
முள் அரைப் பிரம்பின் மூதரில் செறியும், |
|
20 |
பல் வேல் மத்தி, கழாஅர் அன்ன எம் |
இளமை சென்று தவத் தொல்லஃதே; |
|
இனிமை எவன் செய்வது, பொய்ம்மொழி, எமக்கே? |
|
பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகற்குக் கிழத்தி கூறியது. - பரணர் | |
உரை |
பகுவாய் வராஅற் பல் வரி இரும் போத்துக் |
|
கொடு வாய் இரும்பின் கோள் இரை துற்றி, |
|
ஆம்பல் மெல் அடை கிழிய, குவளைக் |
|
கூம்பு விடு பல் மலர் சிதையப் பாய்ந்து, எழுந்து, |
|
5 |
அரில் படு வள்ளை ஆய் கொடி மயக்கி, |
தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது, |
|
கயிறு இடு கதச் சேப் போல, மதம் மிக்கு, |
|
நாள், கயம் உழக்கும் பூக் கேழ் ஊர! |
|
வரு புனல் வையை வார் மணல் அகன் துறை, |
|
10 |
திரு மருது ஓங்கிய விரி மலர்க் காவில், |
நறும் பல் கூந்தற் குறுந் தொடி மடந்தையொடு |
|
வதுவை அயர்ந்தனை என்ப. அலரே, |
|
கொய் சுவல் புரவிக் கொடித் தேர்ச் செழியன் |
|
ஆலங்கானத்து அகன் தலை சிவப்ப, |
|
15 |
சேரல், செம்பியன், சினம் கெழு திதியன், |
போர் வல் யானைப் பொலம் பூண் எழினி, |
|
நார் அரி நறவின் எருமையூரன், |
|
தேம் கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின் |
|
இருங்கோ வேண்மான், இயல் தேர்ப் பொருநன், என்று |
|
20 |
எழுவர் நல் வலம் அடங்க, ஒரு பகல் |
முரைசொடு வெண்குடை அகப்படுத்து, உரை செல, |
|
கொன்று, களம்வேட்ட ஞான்றை, |
|
வென்றி கொள் வீரர் ஆர்ப்பினும் பெரிதே! |
|
தலைமகள் பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனொடு புலந்து சொல்லியது. - மதுரை நக்கீரர் | |
உரை |
சேற்று நிலை முனைஇய செங் கட் காரான் |
|
ஊர் மடி கங்குலில், நோன் தளை பரிந்து, |
|
கூர் முள் வேலி கோட்டின் நீக்கி, |
|
நீர் முதிர் பழனத்து மீன் உடன் இரிய |
|
5 |
அம் தூம்பு வள்ளை மயக்கி, தாமரை |
வண்டு ஊது பனி மலர் ஆரும் ஊர! |
|
யாரையோ? நிற் புலக்கேம். வாருற்று, |
|
உறை இறந்து, ஒளிரும் தாழ் இருங் கூந்தல், |
|
பிறரும், ஒருத்தியை நம் மனைத் தந்து, |
|
10 |
வதுவை அயர்ந்தனை என்ப. அஃது யாம் |
கூறேம். வாழியர், எந்தை! செறுநர் |
|
களிறுடை அருஞ் சமம் ததைய நூறும் |
|
ஒளிறு வாட் தானைக் கொற்றச் செழியன் |
|
பிண்ட நெல்லின் அள்ளூர் அன்ன என் |
|
15 |
ஒண் தொடி நெகிழினும் நெகிழ்க; |
சென்றி, பெரும! நிற் தகைக்குநர் யாரோ? |
|
வாயில் வேண்டிச் சென்ற தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது.- அள்ளூர் நன் முல்லையார் | |
உரை |
செல்லல், மகிழ்ந! நிற் செய் கடன் உடையென்மன் |
|
கல்லா யானை கடி புனல் கற்றென, |
|
மலி புனல் பொருத மருது ஓங்கு படப்பை, |
|
ஒலி கதிர்க் கழனி, கழாஅர் முன்துறை, |
|
5 |
கலி கொள் சுற்றமொடு கரிகால் காண, |
தண் பதம் கொண்டு, தவிர்ந்த இன் இசை |
|
ஒண் பொறிப் புனை கழல் சேவடிப் புரள, |
|
கருங் கச்சு யாத்த காண்பின் அவ் வயிற்று, |
|
இரும் பொலம் பாண்டில், மணியொடு தெளிர்ப்ப, |
|
10 |
புனல் நயந்து ஆடும் அத்தி அணி நயந்து, |
காவிரி கொண்டு ஒளித்தாங்கும் அன்னோ! |
|
நும்வயின் புலத்தல் செல்லேம்; எம்வயின் |
|
பசந்தன்று, காண்டிசின் நுதலே; அசும்பின் |
|
அம் தூம்பு வள்ளை அழற் கொடி மயக்கி, |
|
15 |
வண் தோட்டு நெல்லின் வாங்கு பீள் விரிய, |
துய்த் தலை முடங்கு இறாத் தெறிக்கும், பொற்புடைக் |
|
குரங்குஉளைப் புரவிக் குட்டுவன் |
|
மரந்தை அன்ன, என் நலம் தந்து சென்மே! |
|
காதற்பரத்தை புலந்து சொல்லியது. - பரணர் | |
உரை |
மேல் |