அதிரல் |
வாள் வரி வயமான் கோள் உகிர் அன்ன |
|
செம் முகை அவிழ்ந்த முள் முதிர் முருக்கின் |
|
சிதரல் செம்மல் தாஅய், மதர் எழில் |
|
மாண் இழை மகளிர் பூணுடை முலையின் |
|
5 |
முகை பிணி அவிழ்ந்த கோங்கமொடு அசைஇ, நனை |
அதிரல் பரந்த அம் தண் பாதிரி |
|
உதிர்வீ அம் சினை தாஅய், எதிர் வீ |
|
மராஅ மலரொடு விராஅய், பராஅம் |
|
அணங்குடை நகரின் மணந்த பூவின் |
|
10 |
நன்றே, கானம்; நயவரும் அம்ம; |
கண்டிசின் வாழியோ குறுமகள்! நுந்தை |
|
அடு களம் பாய்ந்த தொடி சிதை மருப்பின், |
|
பிடி மிடை, களிற்றின் தோன்றும் |
|
குறு நெடுந் துணைய குன்றமும் உடைத்தே! |
|
உடன்போகிய தலைமகளைத் தலைமகன் மருட்டிச் சொல்லியது.- பாலை பாடிய பெருங்கடுங்கோ | |
உரை |
வினை நவில் யானை விறற் போர்த் தொண்டையர் |
|
இன மழை தவழும் ஏற்று அரு நெடுங் கோட்டு |
|
ஓங்கு வெள் அருவி வேங்கடத்து உம்பர், |
|
கொய்குழை அதிரல் வைகு புலர் அலரி |
|
5 |
சுரி இரும் பித்தை சுரும்பு படச் சூடி, |
இகல் முனைத் தரீஇய ஏறுடைப் பெரு நிரை |
|
நனை முதிர் நறவின் நாட் பலி கொடுக்கும் |
|
வால் நிணப் புகவின் வடுகர் தேஎத்து, |
|
நிழற் கவின் இழந்த நீர் இல் நீள் இடை |
|
10 |
அழல் அவிர் அருஞ் சுரம் நெடிய என்னாது, |
அகறல் ஆய்ந்தனர்ஆயினும், பகல் செலப் |
|
பல் கதிர் வாங்கிய படு சுடர் அமையத்துப் |
|
பெரு மரம் கொன்ற கால் புகு வியன் புனத்து, |
|
எரி மருள் கதிர திரு மணி இமைக்கும் |
|
15 |
வெல்போர் வானவன் கொல்லிக் குட வரை |
வேய் ஒழுக்கு அன்ன, சாய் இறைப் பணைத் தோள் |
|
பெருங் கவின் சிதைய நீங்கி, ஆன்றோர் |
|
அரும் பெறல் உலகம் அமிழ்தொடு பெறினும், |
|
சென்று, தாம் நீடலோஇலரே என்றும் |
|
20 |
கலம் பெயக் கவிழ்ந்த கழல் தொடித் தடக் கை, |
வலம் படு வென்றி வாய் வாள், சோழர் |
|
இலங்கு நீர்க் காவிரி இழிபுனல் வரித்த |
|
அறல் என நெறிந்த கூந்தல், |
|
உறல் இன் சாயலொடு ஒன்றுதல் மறந்தே. |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது. - தாயங்கண்ணனார் | |
உரை |
'பிரிதல் வல்லியர், இது, நத் துறந்தோர் |
|
மறந்தும் அமைகுவர்கொல்?' என்று எண்ணி, |
|
ஆழல் வாழி, தோழி! கேழல் |
|
வளை மருப்பு உறழும் முளை நெடும் பெருங் காய் |
|
5 |
நனை முதிர் முருக்கின் சினை சேர் பொங்கர், |
காய் சினக் கடு வளி எடுத்தலின், வெங் காட்டு |
|
அழல் பொழி யானையின் ஐயெனத் தோன்றும் |
|
நிழல் இல் ஓமை நீர் இல் நீள் இடை, |
|
இறந்தனர்ஆயினும், காதலர் நம்வயின் |
|
10 |
மறந்து கண்படுதல் யாவது புறம் தாழ் |
அம் பணை நெடுந் தோள் தங்கி, தும்பி |
|
அரியினம் கடுக்கும் சுரி வணர் ஐம்பால் |
|
நுண் கேழ் அடங்க வாரி, பையுள் கெட, |
|
நன் முகை அதிரல் போதொடு, குவளைத் |
|
15 |
தண் நறுங் கமழ் தொடை வேய்ந்த, நின் |
மண் ஆர் கூந்தல் மரீஇய துயிலே? |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ | |
உரை |
கானப் பாதிரிக் கருந் தகட்டு ஒள் வீ |
|
வேனில் அதிரலொடு விரைஇ, காண்வர, |
|
சில் ஐங் கூந்தல் அழுத்தி, மெல் இணர்த் |
|
தேம் பாய் மராஅம் அடைச்சி, வான் கோல் |
|
5 |
இலங்கு வளை தெளிர்ப்ப வீசி, சிலம்பு நகச் |
சில் மெல் ஒதுக்கமொடு மென்மெல இயலி, 'நின் |
|
அணி மாண் சிறுபுறம் காண்கம்; சிறு நனி |
|
ஏகு' என, ஏகல் நாணி, ஒய்யென |
|
மா கொள் நோக்கமொடு மடம் கொளச் சாஅய், |
|
10 |
நின்று தலை இறைஞ்சியோளே; அது கண்டு, |
யாம் முந்துறுதல் செல்லேம், ஆயிடை |
|
அருஞ் சுரத்து அல்கியேமே இரும் புலி |
|
களிறு அட்டுக் குழுமும் ஓசையும், களி பட்டு |
|
வில்லோர் குறும்பில் ததும்பும், |
|
15 |
வல் வாய்க் கடுந் துடிப் பாணியும் கேட்டே. |
புணர்ந்து உடன் போயின காலை, இடைச் சுரத்துப் பட்டதனை மீண்டு வந்த காலத்துத் தோழிக்குத் தலைமகன் சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ | |
உரை |
மேல் |