கூதளம் |
வயிரத்தன்ன வை ஏந்து மருப்பின், | |
வெதிர் வேர் அன்ன பரூஉ மயிர்ப் பன்றி | |
பறைக் கண் அன்ன நிறைச் சுனை பருகி, | |
நீலத்தன்ன அகல் இலைச் சேம்பின் | |
5 |
பிண்டம் அன்ன கொழுங் கிழங்கு மாந்தி, |
பிடி மடிந்தன்ன கல் மிசை ஊழ் இழிபு, | |
யாறு சேர்ந்தன்ன ஊறு நீர்ப் படாஅர்ப் | |
பைம் புதல் நளி சினைக் குருகு இருந்தன்ன, | |
வண் பிணி அவிழ்ந்த வெண் கூதாளத்து | |
10 |
அலங்கு குலை அலரி தீண்டி, தாது உக, |
பொன் உரை கட்டளை கடுப்பக் காண்வர, | |
கிளை அமல் சிறு தினை விளை குரல் மேய்ந்து, | |
கண் இனிது படுக்கும் நல் மலை நாடனொடு | |
உணர்ந்தனை புணர்ந்த நீயும், நின் தோட் | |
15 |
பணைக் கவின் அழியாது துணைப் புணர்ந்து, என்றும், |
தவல் இல் உலகத்து உறைஇயரோ தோழி | |
'எல்லையும் இரவும் என்னாது, கல்லெனக் | |
கொண்டல் வான் மழை பொழிந்த வைகறைத் | |
தண் பனி அற்சிரம் தமியோர்க்கு அரிது' என, | |
20 |
கனவினும் பிரிவு அறியலனே; அதன்தலை |
முன் தான் கண்ட ஞான்றினு ம் | |
பின் பெரிது அளிக்கும், தன் பண்பினானே. | |
தோழி வரைவு மலிந்து சொல்லியது. - பரணர் | |
உரை |
மேல் |