கோங்கம்பூ |
"நெடுங் கரைக் கான்யாற்றுக் கடும் புனல் சாஅய், |
|
அவிர் அறல் கொண்ட விரவு மணல் அகன் துறைத் |
|
தண் கயம் நண்ணிய பொழில்தொறும், காஞ்சிப் |
|
பைந் தாது அணிந்த போது மலி எக்கர், |
|
5 |
வதுவை நாற்றம் புதுவது கஞல, |
மா நனை கொழுதிய மணி நிற இருங் குயில் |
|
படு நா விளி யானடுநின்று, அல்கலும் |
|
உரைப்ப போல, ஊழ் கொள்பு கூவ, |
|
இனச் சிதர் உகுத்த இலவத்துஆங்கண், |
|
10 |
சினைப் பூங் கோங்கின் நுண் தாது பகர்நர் |
பவளச் செப்பில் பொன் சொரிந்தன்ன, |
|
இகழுநர் இகழா இள நாள் அமையம் |
|
செய்தோர் மன்ற குறி" என, நீ நின் |
|
பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப, |
|
15 |
வாராமையின் புலந்த நெஞ்சமொடு, |
நோவல், குறுமகள்! நோயியர், என் உயிர்!' என, |
|
மெல்லிய இனிய கூறி, வல்லே |
|
வருவர் வாழி தோழி! பொருநர் |
|
செல் சமம் கடந்த வில் கெழு தடக் கைப் |
|
20 |
பொதியிற் செல்வன், பொலந்தேர்த் திதியன், |
இன் இசை இயத்தின் கறங்கும் |
|
கல்மிசை அருவிய காடு இறந்தோரே. |
|
பருவங் கண்டு அழிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் | |
உரை |
வாள் வரி வயமான் கோள் உகிர் அன்ன |
|
செம் முகை அவிழ்ந்த முள் முதிர் முருக்கின் |
|
சிதரல் செம்மல் தாஅய், மதர் எழில் |
|
மாண் இழை மகளிர் பூணுடை முலையின் |
|
5 |
முகை பிணி அவிழ்ந்த கோங்கமொடு அசைஇ, நனை |
அதிரல் பரந்த அம் தண் பாதிரி |
|
உதிர்வீ அம் சினை தாஅய், எதிர் வீ |
|
மராஅ மலரொடு விராஅய், பராஅம் |
|
அணங்குடை நகரின் மணந்த பூவின் |
|
10 |
நன்றே, கானம்; நயவரும் அம்ம; |
கண்டிசின் வாழியோ குறுமகள்! நுந்தை |
|
அடு களம் பாய்ந்த தொடி சிதை மருப்பின், |
|
பிடி மிடை, களிற்றின் தோன்றும் |
|
குறு நெடுந் துணைய குன்றமும் உடைத்தே! |
|
உடன்போகிய தலைமகளைத் தலைமகன் மருட்டிச் சொல்லியது.- பாலை பாடிய பெருங்கடுங்கோ | |
உரை |
நோகோ யானே; நோதகும் உள்ளம்; |
|
அம் தீம் கிளவி ஆயமொடு கெழீஇ, |
|
பந்துவழிப் படர்குவள் ஆயினும், நொந்து நனி, |
|
வெம்பும்மன், அளியள்தானே இனியே, |
|
5 |
வன்கணாளன் மார்புஉற வளைஇ, |
இன் சொற் பிணிப்ப நம்பி, நம் கண் |
|
உறுதரு விழுமம் உள்ளாள், ஒய்யெனத் |
|
தெறு கதிர் உலைஇய வேனில் வெங் காட்டு, |
|
உறு வளி ஒலி கழைக் கண் உறுபு தீண்டலின், |
|
10 |
பொறி பிதிர்பு எடுத்த பொங்கு எழு கூர் எரிப் |
பைது அறு சிமையப் பயம் நீங்கு ஆர் இடை |
|
நல் அடிக்கு அமைந்தஅல்ல; மெல் இயல் |
|
வல்லுநள்கொல்லோ தானே எல்லி |
|
ஓங்கு வரை அடுக்கத்து உயர்ந்த சென்னி |
|
15 |
மீனொடு பொலிந்த வானின் தோன்றி, |
தேம் பாய்ந்து ஆர்க்கும் தெரி இணர்க் கோங்கின் |
|
கால் உறக் கழன்ற கள் கமழ் புது மலர் |
|
கை விடு சுடரின் தோன்றும் |
|
மை படு மா மலை விலங்கிய சுரனே? |
|
மகட் போக்கிய செவிலித்தாய் சொற்றது. - சேரமான் இளங்குட்டுவன் | |
உரை |
செவ் வீ ஞாழற் கருங் கோட்டு இருஞ் சினைத் |
|
தனிப் பார்ப்பு உள்ளிய தண் பறை நாரை |
|
மணிப் பூ நெய்தல் மாக் கழி நிவப்ப, |
|
இனிப் புலம்பின்றே கானலும்; நளி கடல் |
|
5 |
திரைச் சுரம் உழந்த திண் திமில் விளக்கில் |
பல் மீன் கூட்டம் என்னையர்க் காட்டிய, |
|
எந்தையும் செல்லுமார் இரவே; அந்தில் |
|
அணங்குடைப் பனித் துறை கைதொழுது ஏத்தி, |
|
யாயும் ஆயமோடு அயரும்; நீயும், |
|
10 |
தேம் பாய் ஓதி திரு நுதல் நீவி, |
கோங்கு முகைத்தன்ன குவிமுலை ஆகத்து, |
|
இன் துயில் அமர்ந்தனைஆயின், வண்டு பட |
|
விரிந்த செருந்தி வெண் மணல் முடுக்கர், |
|
பூ வேய் புன்னை அம் தண் பொழில், |
|
15 |
வாவே தெய்ய, மணந்தனை செலற்கே. |
தோழி இரவுக்குறி வந்த தலைமகற்குப் பகற்குறி நேர்ந்தது. - எழுஉப்பன்றி நாகன் குமரனார் | |
உரை |
' "மாக விசும்பின் மழை தொழில் உலந்தென, |
|
பாஅய் அன்ன பகல் இருள் பரப்பி, |
|
புகை நிற உருவின் அற்சிரம் நீங்க, |
|
குவிமுகை முருக்கின் கூர் நுனை வை எயிற்று |
|
5 |
நகை முக மகளிர் ஊட்டு உகிர் கடுக்கும் |
முதிராப் பல் இதழ் உதிரப் பாய்ந்து, உடன் |
|
மலர் உண் வேட்கையின் சிதர் சிதர்ந்து உகுப்ப, |
|
பொன் செய் கன்னம் பொலிய, வெள்ளி |
|
நுண் கோல் அறை குறைந்து உதிர்வன போல, |
|
10 |
அரவ வண்டினம் ஊதுதொறும் குரவத்து |
ஓங்கு சினை நறு வீ கோங்கு அலர் உறைப்ப, |
|
துவைத்து எழு தும்பி, தவிர் இசை விளரி |
|
புதைத்து விடு நரம்பின், இம்மென இமிரும் |
|
ஆன் ஏமுற்ற காமர் வேனில், |
|
15 |
வெயில் அவிர் புரையும் வீ ததை மராஅத்துக் |
குயில் இடு பூசல் எம்மொடு கேட்ப |
|
வருவேம்" என்ற பருவம் ஆண்டை |
|
இல்லைகொல்?' என மெல்ல நோக்கி, |
|
நினைந்தனம் இருந்தனமாக, நயந்து ஆங்கு |
|
20 |
உள்ளிய மருங்கின் உள்ளம் போல, |
வந்து நின்றனரே காதலர்; நந் துறந்து |
|
என்னுழியதுகொல் தானே பல் நாள் |
|
அன்னையும் அறிவுற அணங்கி, |
|
நல் நுதல் பாஅய பசலை நோயே? |
|
தலைமகன் வரவு உணர்ந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. - வடமோதங் கிழார் | |
உரை |
மேல் |