பீர்க்கம்பூ |
வாடல் உழுஞ்சில் விளை நெற்று அம் துணர் |
|
ஆடுகளப் பறையின், அரிப்பன ஒலிப்ப, |
|
கோடை நீடிய அகன் பெருங் குன்றத்து, |
|
நீர் இல் ஆர் ஆற்று நிவப்பன களிறு அட்டு, |
|
5 |
ஆள் இல் அத்தத்து உழுவை உகளும் |
காடு இறந்தனரே, காதலர். மாமை, |
|
அரி நுண் பசலை பாஅய், பீரத்து |
|
எழில் மலர் புரைதல்வேண்டும். அலரே, |
|
அன்னி குறுக்கைப் பறந்தலை, திதியன் |
|
10 |
தொல் நிலை முழுமுதல் துமியப் பண்ணி, |
புன்னை குறைத்த ஞான்றை, வயிரியர் |
|
இன் இசை ஆர்ப்பினும் பெரிதே. யானே, |
|
காதலற் கெடுத்த சிறுமையொடு, நோய் கூர்ந்து, |
|
ஆதிமந்தி போல, பேதுற்று |
|
15 |
அலந்தனென் உழல்வென்கொல்லோ பொலந்தார், |
கடல் கால் கிளர்ந்த வென்றி நல் வேல், |
|
வானவரம்பன் அடல் முனைக் கலங்கிய |
|
உடை மதில் ஓர் அரண் போல, |
|
அஞ்சுவரு நோயொடு, துஞ்சாதேனே! |
|
வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - வெள்ளிவீதியார் | |
உரை |
சிறு பைந் தூவிச் செங் காற் பேடை |
|
நெடு நீர் வானத்து, வாவுப் பறை நீந்தி, |
|
வெயில் அவிர் உருப்பொடு வந்து, கனி பெறாஅது, |
|
பெறு நாள் யாணர் உள்ளி, பையாந்து, |
|
5 |
புகல் ஏக்கற்ற புல்லென் உலவைக் |
குறுங் கால் இற்றிப் புன் தலை நெடு வீழ் |
|
இரும் பிணர்த் துறுகல் தீண்டி, வளி பொர, |
|
பெருங் கை யானை நிவப்பின் தூங்கும் |
|
குன்ற வைப்பின் என்றூழ் நீள் இடை, |
|
10 |
யாமே எமியம்ஆக, தாமே |
பசு நிலா விரிந்த பல் கதிர் மதியின் |
|
பெரு நல் ஆய் கவின் ஒரீஇ, சிறு பீர் |
|
வீ ஏர் வண்ணம் கொண்டன்றுகொல்லோ |
|
கொய் சுவற் புரவிக் கொடித் தேர்ச் செழியன் |
|
15 |
முதுநீர் முன்துறை முசிறி முற்றி, |
களிறு பட எருக்கிய கல்லென் ஞாட்பின் |
|
அரும் புண் உறுநரின் வருந்தினள், பெரிது அழிந்து, |
|
பானாட் கங்குலும் பகலும் |
|
ஆனாது அழுவோள் ஆய் சிறு நுதலே? |
|
பொருள்வயிற் பிரிந்த தலைமகன் கிழத்தியை நினைந்து சொல்லியது.- நக்கீரர் | |
உரை |
திதலை மாமை தளிர் வனப்பு அழுங்க, |
|
புதல் இவர் பீரின் எதிர் மலர் கடுப்பப் |
|
பசலை பாய்ந்த நுதலேன் ஆகி, |
|
எழுது எழில் மழைக் கண் கலுழ, நோய் கூர்ந்து, |
|
5 |
ஆதிமந்தியின் அறிவு பிறிதுஆகி, |
பேதுற்றிசினே காதல்அம் தோழி! |
|
காய்கதிர் திருகலின் கனைந்து கால் கடுகி, |
|
ஆடுதளிர் இருப்பைக் கூடு குவி வான் பூ, |
|
கோடு கடை கழங்கின், அறைமிசைத் தாஅம் |
|
10 |
காடு இறந்தனரே, காதலர்; அடுபோர், |
வீயா விழுப் புகழ், விண் தோய் வியன் குடை, |
|
ஈர் எழு வேளிர் இயைந்து ஒருங்கு எறிந்த |
|
கழுவுள் காமூர் போலக் |
|
கலங்கின்றுமாது, அவர்த் தெளிந்த என் நெஞ்சே. |
|
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொற்றது. - பரணர் | |
உரை |
மேல் |