பூளைப்பூ |
கரை பாய் வெண் திரை கடுப்ப, பல உடன், |
|
நிரை கால் ஒற்றலின், கல் சேர்பு உதிரும் |
|
வரை சேர் மராஅத்து ஊழ் மலர் பெயல் செத்து, |
|
உயங்கல் யானை நீர் நசைக்கு அலமர, |
|
5 |
சிலம்பி வலந்த வறுஞ் சினை வற்றல் |
அலங்கல் உலவை அரி நிழல் அசைஇ, |
|
திரங்குமரல் கவ்விய கையறு தொகுநிலை, |
|
அரம் தின் ஊசித் திரள் நுதி அன்ன, |
|
திண் நிலை எயிற்ற செந்நாய் எடுத்தலின், |
|
10 |
வளி முனைப் பூளையின் ஒய்யென்று அலறிய |
கெடுமான் இன நிரை தரீஇய, கலையே |
|
கதிர் மாய் மாலை ஆண் குரல் விளிக்கும் |
|
கடல் போல் கானம் பிற்பட, 'பிறர் போல் |
|
செல்வேம்ஆயின், எம் செலவு நன்று' என்னும் |
|
15 |
ஆசை உள்ளம் அசைவின்று துரப்ப, |
நீ செலற்கு உரியை நெஞ்சே! வேய் போல் |
|
தடையின மன்னும், தண்ணிய, திரண்ட, |
|
பெருந் தோள் அரிவை ஒழிய, குடாஅது, |
|
இரும் பொன் வாகைப் பெருந்துறைச் செருவில், |
|
20 |
பொலம் பூண் நன்னன் பொருது களத்து ஒழிய, |
வலம் படு கொற்றம் தந்த வாய் வாள், |
|
களங்காய்க் கண்ணி நார் முடிச் சேரல் |
|
இழந்த நாடு தந்தன்ன |
|
வளம் பெரிது பெறினும், வாரலென் யானே. |
|
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. - கல்லாடனார் | |
உரை |
'பெய்து புறந்தந்த பொங்கல் வெண் மழை, |
|
எஃகு உறு பஞ்சித் துய்ப் பட்டன்ன, |
|
துவலை தூவல் கழிய, அகல் வயல் |
|
நீடு கழைக் கரும்பின் கணைக் கால் வான் பூக் |
|
5 |
கோடைப் பூளையின் வாடையொடு துயல்வர, |
பாசிலை பொதுளிய புதல்தொறும் பகன்றை |
|
நீல் உண் பச்சை நிறம் மறைத்து அடைச்சிய |
|
தோல் எறி பாண்டிலின் வாலிய மலர, |
|
கோழிலை அவரைக் கொழு முகை அவிழ, |
|
10 |
ஊழ் உறு தோன்றி ஒண் பூத் தளை விட, |
புலம்தொறும் குருகினம் நரல, கல்லென |
|
அகன்று உறை மகளிர் அணி துறந்து நடுங்க, |
|
அற்சிரம் வந்தன்று; அமைந்தன்று இது என, |
|
எப் பொருள் பெறினும், பிரியன்மினோ' எனச் |
|
15 |
செப்புவல் வாழியோ, துணையுடையீர்க்கே; |
நல்காக் காதலர் நலன் உண்டு துறந்த |
|
பாழ் படு மேனி நோக்கி, நோய் பொர, |
|
இணர் இறுபு உடையும் நெஞ்சமொடு, புணர்வு வேட்டு, |
|
எயிறு தீப் பிறப்பத் திருகி, |
|
20 |
நடுங்குதும் பிரியின் யாம் கடு பனி உழந்தே. |
பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் ஆற்றாமை மீதூரச் சொல்லியது. -கழார்க்கீரன் எயிற்றியார் | |
உரை |
பானாட் கங்குலும், பெரும் புன் மாலையும், |
|
ஆனா நோயொடு அழி படர்க் கலங்கி, |
|
நம்வயின் இனையும் இடும்பை கைம்மிக, |
|
என்னை ஆகுமோ, நெஞ்சே! நம் வயின் |
|
5 |
இருங் கவின் இல்லாப் பெரும் புன் தாடி, |
கடுங்கண், மறவர் பகழி மாய்த்தென, |
|
மருங்குல் நுணுகிய பேஎம் முதிர் நடுகல், |
|
பெயர் பயம் படரத் தோன்று குயில் எழுத்து |
|
இயைபுடன் நோக்கல்செல்லாது, அசைவுடன் |
|
10 |
ஆறு செல் வம்பலர் விட்டனர் கழியும் |
சூர் முதல் இருந்த ஓமை அம் புறவின், |
|
நீர் முள் வேலிப் புலவு நாறு முன்றில், |
|
எழுதியன்ன கொடி படு வெருகின் |
|
பூளை அன்ன பொங்கு மயிர்ப் பிள்ளை, |
|
15 |
மதி சூழ் மீனின், தாய் வழிப்படூஉம் |
சிறுகுடி மறவர் சேக் கோள் தண்ணுமைக்கு |
|
எருவைச் சேவல் இருஞ் சிறை பெயர்க்கும் |
|
வெரு வரு கானம், நம்மொடு, |
|
'வருவல்' என்றோள் மகிழ் மட நோக்கே? |
|
பொருள்வயிற் போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
மேல் |