முருக்கம்பூ(கவிர்) |
இருங் கழி முதலை மேஎந்தோல் அன்ன |
|
கருங் கால் ஓமைக் காண்பு இன் பெருஞ் சினைக் |
|
கடியுடை நனந்தலை, ஈன்று இளைப்பட்ட, |
|
கொடு வாய்ப் பேடைக்கு அல்குஇரை தரீஇய, |
|
5 |
மான்று வேட்டு எழுந்த செஞ் செவி எருவை |
வான் தோய் சிமைய விறல் வரைக் கவாஅன், |
|
துளங்கு நடை மரையா வலம் படத் தொலைச்சி, |
|
ஒண் செங் குருதி உவற்றி உண்டு அருந்துபு, |
|
புலவுப் புலி துறந்த கலவுக் கழி கடு முடை, |
|
10 |
கொள்ளை மாந்தரின் ஆனாது கவரும் |
புல் இலை மராஅத்த அகன் சேண் அத்தம், |
|
கலம் தரல் உள்ளமொடு கழியக் காட்டி, |
|
பின் நின்று துரக்கும் நெஞ்சம்! நின் வாய் |
|
வாய்போல் பொய்ம்மொழி எவ்வம் என் களைமா |
|
15 |
கவிர் இதழ் அன்ன காண்பு இன் செவ் வாய், |
அம் தீம் கிளவி, ஆய் இழை, மடந்தை |
|
கொடுங் குழைக்கு அமர்த்த நோக்கம் |
|
நெடுஞ் சேண் ஆர் இடை விலங்கும் ஞான்றே? |
|
முன் ஒரு காலத்து, நெஞ்சினால் பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்தான், தலைமகன்; பிரிந்து இடைச் சுரத்தினின்று அவள் நலம் நயந்து மீளலுற்ற நெஞ்சினைக் கழறிப்போய், பொருள் முடித்து வந்த தலைமகன், பின்னும் பொருள் வலிக்கப்பட்ட நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது. - எயினந்தை மகனார் இளங்கீரனார். | |
உரை |
வைகு புலர் விடியல், மை புலம் பரப்ப, |
|
கரு நனை அவிழ்ந்த ஊழுறு முருக்கின் |
|
எரி மருள் பூஞ் சினை இனச் சிதர் ஆர்ப்ப, |
|
நெடு நெல் அடைச்சிய கழனி ஏர் புகுத்து, |
|
5 |
குடுமிக் கட்டிய படப்பையொடு மிளிர, |
அரிகால் போழ்ந்த தெரி பகட்டு உழவர் |
|
ஓதைத் தெள் விளி புலம்தொறும் பரப்ப, |
|
கோழிணர் எதிரிய மரத்த, கவினி, |
|
காடு அணி கொண்ட காண்தகு பொழுதில், |
|
10 |
நாம் பிரி புலம்பின் நலம் செலச் சாஅய், |
நம் பிரிபு அறியா நலனொடு சிறந்த |
|
நல் தோள் நெகிழ, வருந்தினள்கொல்லோ |
|
மென் சிறை வண்டின் தண் கமழ் பூந் துணர் |
|
தாது இன் துவலை தளிர் வார்ந்தன்ன |
|
15 |
அம் கலுழ் மாமை கிளைஇய, |
நுண் பல் தித்தி, மாஅயோளே? |
|
தலைமகன் பொருள்வயிற் பிரிந்தவிடத்து, கிழத்தியை நினைந்து சொல்லியது. - குன்றியனார் | |
உரை |
வாள் வரி வயமான் கோள் உகிர் அன்ன |
|
செம் முகை அவிழ்ந்த முள் முதிர் முருக்கின் |
|
சிதரல் செம்மல் தாஅய், மதர் எழில் |
|
மாண் இழை மகளிர் பூணுடை முலையின் |
|
5 |
முகை பிணி அவிழ்ந்த கோங்கமொடு அசைஇ, நனை |
அதிரல் பரந்த அம் தண் பாதிரி |
|
உதிர்வீ அம் சினை தாஅய், எதிர் வீ |
|
மராஅ மலரொடு விராஅய், பராஅம் |
|
அணங்குடை நகரின் மணந்த பூவின் |
|
10 |
நன்றே, கானம்; நயவரும் அம்ம; |
கண்டிசின் வாழியோ குறுமகள்! நுந்தை |
|
அடு களம் பாய்ந்த தொடி சிதை மருப்பின், |
|
பிடி மிடை, களிற்றின் தோன்றும் |
|
குறு நெடுந் துணைய குன்றமும் உடைத்தே! |
|
உடன்போகிய தலைமகளைத் தலைமகன் மருட்டிச் சொல்லியது.- பாலை பாடிய பெருங்கடுங்கோ | |
உரை |
பகல் செய் பல் கதிர்ப் பருதி அம் செல்வன் |
|
அகல் வாய் வானத்து ஆழி போழ்ந்தென, |
|
நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை, |
|
கயந் தலைக் குழவிக் கவி உகிர் மடப் பிடி |
|
5 |
குளகு மறுத்து உயங்கிய மருங்குல் பல உடன் |
பாழ் ஊர்க் குரம்பையின் தோன்றும் ஆங்கண், |
|
நெடுஞ் சேண் இடைய குன்றம் போகி, |
|
பொய்வலாளர் முயன்று செய் பெரும் பொருள் |
|
நம் இன்று ஆயினும் முடிக, வல்லென, |
|
10 |
பெருந் துனி மேவல்! நல்கூர் குறுமகள்! |
நோய் மலிந்து உகுத்த நொசி வரல் சில் நீர் |
|
பல் இதழ் மழைக் கண் பாவை மாய்ப்ப, |
|
பொன் ஏர் பசலை ஊர்தர, பொறி வரி |
|
நல் மா மேனி தொலைதல் நோக்கி, |
|
15 |
இனையல் என்றி; தோழி! சினைய |
பாசரும்பு ஈன்ற செம் முகை முருக்கினப் |
|
போது அவிழ் அலரி கொழுதி தாது அருந்து, |
|
அம் தளிர் மாஅத்து அலங்கல் மீமிசை, |
|
செங் கண் இருங் குயில் நயவரக் கூஉம் |
|
20 |
இன் இளவேனிலும் வாரார், |
'இன்னே வருதும்' எனத் தெளித்தோரே. |
|
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள், வன்புறை எதிர் அழிந்து, சொல்லியது. - மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் | |
உரை |
தண் கதிர் மண்டிலம் அவிர், அறச் சாஅய்ப் |
|
பகல் அழி தோற்றம் போல, பையென |
|
நுதல் ஒளி கரப்பவும், ஆள்வினை தருமார், |
|
தவல் இல் உள்ளமொடு எஃகு துணை ஆக, |
|
5 |
கடையல்அம் குரல வாள் வரி உழுவை |
பேழ் வாய்ப் பிணவின் விழுப் பசி நோனாது, |
|
இரும் பனஞ் செறும்பின் அன்ன பரூஉ மயிர், |
|
சிறு கண், பன்றி வரு திறம் பார்க்கும் |
|
அத்தம் ஆர் அழுவத்து ஆங்கண் நனந்தலை, |
|
10 |
பொத்துடை மரத்த புகர் படு நீழல், |
ஆறு செல் வம்பலர் அசையுநர் இருக்கும், |
|
ஈரம் இல், வெஞ் சுரம் இறந்தோர் நம்வயின் |
|
வாரா அளவை ஆயிழை! கூர் வாய் |
|
அழல் அகைந்தன்ன காமர் துதை மயிர் |
|
15 |
மனை உறை கோழி மறனுடைச் சேவல் |
போர் புரி எருத்தம் போலக் கஞலிய |
|
பொங்கு அழல் முருக்கின் ஒண் குரல் மாந்தி, |
|
சிதர் சிதர்ந்து உகுத்த செவ்வி வேனில் |
|
வந்தன்று அம்ம, தானே; |
|
20 |
வாரார் தோழி! நம் காதலோரே. |
தலைமகன் பிரிவின்கண் தலைமகள், தோழிக்குப் பருவம் கண்டு அழிந்து,சொல்லி யது. - கருவூர் நன்மார்பன் | |
உரை |
' "மாக விசும்பின் மழை தொழில் உலந்தென, |
|
பாஅய் அன்ன பகல் இருள் பரப்பி, |
|
புகை நிற உருவின் அற்சிரம் நீங்க, |
|
குவிமுகை முருக்கின் கூர் நுனை வை எயிற்று |
|
5 |
நகை முக மகளிர் ஊட்டு உகிர் கடுக்கும் |
முதிராப் பல் இதழ் உதிரப் பாய்ந்து, உடன் |
|
மலர் உண் வேட்கையின் சிதர் சிதர்ந்து உகுப்ப, |
|
பொன் செய் கன்னம் பொலிய, வெள்ளி |
|
நுண் கோல் அறை குறைந்து உதிர்வன போல, |
|
10 |
அரவ வண்டினம் ஊதுதொறும் குரவத்து |
ஓங்கு சினை நறு வீ கோங்கு அலர் உறைப்ப, |
|
துவைத்து எழு தும்பி, தவிர் இசை விளரி |
|
புதைத்து விடு நரம்பின், இம்மென இமிரும் |
|
ஆன் ஏமுற்ற காமர் வேனில், |
|
15 |
வெயில் அவிர் புரையும் வீ ததை மராஅத்துக் |
குயில் இடு பூசல் எம்மொடு கேட்ப |
|
வருவேம்" என்ற பருவம் ஆண்டை |
|
இல்லைகொல்?' என மெல்ல நோக்கி, |
|
நினைந்தனம் இருந்தனமாக, நயந்து ஆங்கு |
|
20 |
உள்ளிய மருங்கின் உள்ளம் போல, |
வந்து நின்றனரே காதலர்; நந் துறந்து |
|
என்னுழியதுகொல் தானே பல் நாள் |
|
அன்னையும் அறிவுற அணங்கி, |
|
நல் நுதல் பாஅய பசலை நோயே? |
|
தலைமகன் வரவு உணர்ந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. - வடமோதங் கிழார் | |
உரை |
பாம்புடை விடர பனி நீர் இட்டுத் துறைத் |
|
தேம் கலந்து ஒழுக, யாறு நிறைந்தனவே; |
|
வெண் கோட்டு யானை பொருத புண் கூர்ந்து, |
|
பைங் கண் வல்லியம் கல் அளைச் செறிய, |
|
5 |
முருக்கு அரும்பு அன்ன வள் உகிர் வயப் பிணவு |
கடி கொள, வழங்கார் ஆறே; ஆயிடை |
|
எல்லிற்று என்னான், வென் வேல் ஏந்தி, |
|
நசை தர வந்த நன்னராளன் |
|
நெஞ்சு பழுதாக, வறுவியன் பெயரின், |
|
10 |
இன்று இப்பொழுதும் யான் வாழலெனே; |
எவன்கொல்? வாழி, தோழி! நம் இடை முலைச் |
|
சுணங்கு அணி முற்றத்து ஆரம் போலவும், |
|
சிலம்பு நீடு சோலைச் சிதர் தூங்கு நளிப்பின் |
|
இலங்கு வெள் அருவி போலவும், |
|
15 |
நிலம் கொண்டனவால், திங்கள் அம் கதிரே! |
இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது. - வெள்ளிவீதியார் | |
உரை |
மேல் |