நெல்(வெண்ணெல், செந்நெல்) |
'வண்டு படத் ததைந்த கண்ணி, ஒண் கழல், |
|
உருவக் குதிரை மழவர் ஓட்டிய |
|
முருகன் நற் போர் நெடு வேள் ஆவி, |
|
அறுகோட்டு யானைப் பொதினி ஆங்கண், |
|
5 |
சிறு காரோடன் பயினொடு சேர்த்திய |
கல் போல் பிரியலம்' என்ற சொல்தாம் |
|
மறந்தனர்கொல்லோ தோழி! சிறந்த |
|
வேய் மருள் பணைத் தோள் நெகிழ, சேய் நாட்டுப் |
|
பொலங்கல வெறுக்கை தருமார் நிலம் பக, |
|
10 |
அழல் போல் வெங்கதிர் பைது அறத் தெறுதலின், |
நிழல் தேய்ந்து உலறிய மரத்த; அறை காய்பு, |
|
அறுநீர்ப் பைஞ் சுனை ஆம் அறப் புலர்தலின், |
|
உகு நெல் பொரியும் வெம்மைய; யாவரும் |
|
வழங்குநர் இன்மையின், வௌவுநர் மடிய, |
|
15 |
சுரம் புல்லென்ற ஆற்ற; அலங்கு சினை |
நார் இல் முருங்கை நவிரல் வான் பூச் |
|
சூரல்அம் கடு வளி எடுப்ப, ஆருற்று, |
|
உடை திரைப் பிதிர்வின் பொங்கி, முன் |
|
கடல் போல் தோன்றல காடு இறந்தோரே? |
|
பிரிவிடை ஆற்றாளாய தலைமகள் தோழிக்குச் சொல்லியது-மாமூலனார் | |
உரை |
அரி பெய் சிலம்பின் ஆம்பல் அம் தொடலை, |
|
அரம் போழ் அவ் வளைப் பொலிந்த முன்கை, |
|
இழை அணி பணைத் தோள், ஐயை தந்தை, |
|
மழை வளம் தரூஉம் மா வண் தித்தன், |
|
5 |
பிண்ட நெல்லின் உறந்தை ஆங்கண் |
கழை நிலை பெறாஅக் காவிரி நீத்தம், |
|
குழை மாண் ஒள் இழை நீ வெய்யோளொடு, |
|
வேழ வெண் புணை தழீஇ, பூழியர் |
|
கயம் நாடு யானையின் முகன் அமர்ந்தாஅங்கு, |
|
10 |
ஏந்து எழில் ஆகத்துப் பூந் தார் குழைய, |
நெருநல் ஆடினை, புனலே; இன்று வந்து, |
|
'ஆக வன முலை அரும்பிய சுணங்கின், |
|
மாசு இல் கற்பின், புதல்வன் தாய்!' என, |
|
மாயப் பொய்ம்மொழி சாயினை பயிற்றி, எம் |
|
15 |
முதுமை எள்ளல்; அஃது அமைகும் தில்ல! |
சுடர்ப் பூந் தாமரை நீர் முதிர் பழனத்து, |
|
அம் தூம்பு வள்ளை ஆய் கொடி மயக்கி, |
|
வாளை மேய்ந்த வள் எயிற்று நீர்நாய், |
|
முள் அரைப் பிரம்பின் மூதரில் செறியும், |
|
20 |
பல் வேல் மத்தி, கழாஅர் அன்ன எம் |
இளமை சென்று தவத் தொல்லஃதே; |
|
இனிமை எவன் செய்வது, பொய்ம்மொழி, எமக்கே? |
|
பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகற்குக் கிழத்தி கூறியது. - பரணர் | |
உரை |
தன் கடற் பிறந்த முத்தின் ஆரமும், |
|
முனை திறை கொடுக்கும் துப்பின், தன் மலைத் |
|
தெறல் அரு மரபின் கடவுட் பேணி, |
|
குறவர் தந்த சந்தின் ஆரமும், |
|
5 |
இரு பேர் ஆரமும் எழில் பெற அணியும் |
திரு வீழ் மார்பின் தென்னவன் மறவன் |
|
குழியில் கொண்ட மராஅ யானை |
|
மொழியின் உணர்த்தும் சிறு வரை அல்லது, |
|
வரை நிலை இன்றி இரவலர்க்கு ஈயும், |
|
10 |
வள் வாய் அம்பின், கோடைப் பொருநன் |
பண்ணி தைஇய பயம் கெழு வேள்வியின், |
|
விழுமிது நிகழ்வது ஆயினும் தெற்கு ஏர்பு, |
|
கழி மழை பொழிந்த பொழுது கொள் அமையத்து, |
|
சாயல் இன் துணை இவட் பிரிந்து உறையின், |
|
15 |
நோய் இன்றாக செய்பொருள்! வயிற்பட |
மாசு இல் தூ மடி விரிந்த சேக்கை, |
|
கவவு இன்புறாமைக் கழிக வள வயல், |
|
அழல் நுதி அன்ன தோகை ஈன்ற |
|
கழனி நெல் ஈன் கவைமுதல் அலங்கல் |
|
20 |
நிரம்பு அகன் செறுவில் வரம்பு அணையாத் துயல்வர, |
புலம்பொடு வந்த பொழுது கொள் வாடை, |
|
இலங்கு பூங் கரும்பின் ஏர் கழை இருந்த |
|
வெண் குருகு நரல, வீசும் |
|
நுண் பல் துவலைய தண் பனி நாளே! |
|
பொருள்வயிற் பிரியலுற்ற தலைமகனைத் தோழி செலவழுங்குவித்தது; உடம்பட்ட தூஉம் ஆம். - பெருந்தலைச் சாத்தனார் | |
உரை |
கானல், மாலைக் கழிப் பூக் கூம்ப, |
|
நீல் நிறப் பெருங் கடல் பாடு எழுந்து ஒலிப்ப, |
|
மீன் ஆர் குருகின் மென் பறைத் தொழுதி |
|
குவை இரும் புன்னைக் குடம்பை சேர, |
|
5 |
அசை வண்டு ஆர்க்கும் அல்குறுகாலை, |
தாழை தளரத் தூக்கி, மாலை |
|
அழிதக வந்த கொண்டலொடு கழி படர்க் |
|
காமர் நெஞ்சம் கையறுபு இனைய, |
|
துயரம் செய்து நம் அருளார் ஆயினும் |
|
10 |
அறாஅலியரோ அவருடைக் கேண்மை! |
அளி இன்மையின் அவண் உறை முனைஇ, |
|
வாரற்கதில்ல தோழி! கழனி |
|
வெண்ணெல் அரிநர் பின்றைத் ததும்பும் |
|
தண்ணுமை வெரீஇய தடந் தாள் நாரை |
|
15 |
செறி மடை வயிரின் பிளிற்றி, பெண்ணை |
அகமடல் சேக்கும் துறைவன் |
|
இன் துயில் மார்பில் சென்ற என் நெஞ்சே! |
|
தலைமகன் பொருள்வயிற் பிரிந்தவழி, கிழத்தி தோழிக்குச் சொல்லியது.- குன்றியனார் | |
உரை |
வந்து வினை முடித்தனன் வேந்தனும்; பகைவரும் |
|
தம் திறை கொடுத்துத் தமர் ஆயினரே; |
|
முரண் செறிந்திருந்த தானை இரண்டும் |
|
ஒன்று என அறைந்தன பணையே; நின் தேர் |
|
5 |
முன் இயங்கு ஊர்தி பின்னிலை ஈயாது, |
ஊர்க, பாக! ஒரு வினை, கழிய |
|
நன்னன், ஏற்றை, நறும் பூண் அத்தி, |
|
துன் அருங் கடுந் திறற் கங்கன், கட்டி, |
|
பொன் அணி வல்வில் புன்றுறை, என்று ஆங்கு |
|
10 |
அன்று அவர் குழீஇய அளப்பு அருங் கட்டூர், |
பருந்து படப் பண்ணி, பழையன் பட்டென, |
|
கண்டது நோனானாகி, திண் தேர்க் |
|
கணையன் அகப்பட, கழுமலம் தந்த |
|
பிணைஅல்அம் கண்ணிப் பெரும் பூட் சென்னி |
|
15 |
அழும்பில் அன்ன அறாஅ யாணர், |
பழம் பல் நெல்லின் பல் குடிப் பரவை, |
|
பொங்கடி படிகயம் மண்டிய பசு மிளை, |
|
தண் குடவாயில் அன்னோள் |
|
பண்புடை ஆகத்து இன் துயில் பெறவே! |
|
வினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.- குடவாயிற் கீரத்தனார் | |
உரை |
சேற்று நிலை முனைஇய செங் கட் காரான் |
|
ஊர் மடி கங்குலில், நோன் தளை பரிந்து, |
|
கூர் முள் வேலி கோட்டின் நீக்கி, |
|
நீர் முதிர் பழனத்து மீன் உடன் இரிய |
|
5 |
அம் தூம்பு வள்ளை மயக்கி, தாமரை |
வண்டு ஊது பனி மலர் ஆரும் ஊர! |
|
யாரையோ? நிற் புலக்கேம். வாருற்று, |
|
உறை இறந்து, ஒளிரும் தாழ் இருங் கூந்தல், |
|
பிறரும், ஒருத்தியை நம் மனைத் தந்து, |
|
10 |
வதுவை அயர்ந்தனை என்ப. அஃது யாம் |
கூறேம். வாழியர், எந்தை! செறுநர் |
|
களிறுடை அருஞ் சமம் ததைய நூறும் |
|
ஒளிறு வாட் தானைக் கொற்றச் செழியன் |
|
பிண்ட நெல்லின் அள்ளூர் அன்ன என் |
|
15 |
ஒண் தொடி நெகிழினும் நெகிழ்க; |
சென்றி, பெரும! நிற் தகைக்குநர் யாரோ? |
|
வாயில் வேண்டிச் சென்ற தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது.- அள்ளூர் நன் முல்லையார் | |
உரை |
பெருங் கடற் பரப்பில் சேயிறா நடுங்க, |
|
கொடுந் தொழில் முகந்த செங் கோல் அவ் வலை |
|
நெடுந் திமில் தொழிலொடு வைகிய தந்தைக்கு, |
|
உப்பு நொடை நெல்லின் மூரல் வெண் சோறு |
|
5 |
அயிலை துழந்த அம் புளிச் சொரிந்து, |
கொழுமீன் தடியொடு குறுமகள் கொடுக்கும் |
|
திண் தேர்ப் பொறையன் தொண்டி அன்ன எம் |
|
ஒண் தொடி ஞெமுக்காதீமோ தெய்ய; |
|
'ஊதை ஈட்டிய உயர் மணல் அடைகரை, |
|
10 |
கோதை ஆயமொடு வண்டல் தைஇ, |
ஓரை ஆடினும் உயங்கும் நின் ஒளி' எனக் |
|
கொன்னும் சிவப்போள் காணின், வென் வேற் |
|
கொற்றச் சோழர் குடந்தை வைத்த |
|
நாடு தரு நிதியினும் செறிய |
|
15 |
அருங் கடிப் படுக்குவள், அறன் இல் யாயே. |
தலைமகற்குத் தோழி செறிப்பு அறிவுறீஇ, வரைவு கடாயது.- குடவாயிற் கீரத்தனார் | |
உரை |
'நோற்றோர்மன்ற தாமே கூற்றம் |
|
கோளுற விளியார், பிறர் கொள விளிந்தோர்' எனத் |
|
தாள் வலம்படுப்பச் சேட் புலம் படர்ந்தோர் |
|
நாள் இழை நெடுஞ் சுவர் நோக்கி, நோய் உழந்து |
|
5 |
ஆழல் வாழி, தோழி! தாழாது, |
உரும் எனச் சிலைக்கும் ஊக்கமொடு பைங் கால் |
|
அரு நிறத்து அழுத்திய அம்பினர் பலருடன் |
|
அண்ணல் யானை வெண் கோடு கொண்டு, |
|
10 |
நறவு நொடை நெல்லின் நாள் மகிழ் அயரும் |
கழல் புனை திருந்துஅடிக் கள்வர் கோமான் |
|
மழ புலம் வணக்கிய மா வண் புல்லி |
|
விழவுடை விழுச் சீர் வேங்கடம் பெறினும், |
|
பழகுவர்ஆதலோ அரிதே முனாஅது |
|
15 |
முழவு உறழ் திணி தோள் நெடு வேள் ஆவி |
பொன்னுடை நெடு நகர்ப் பொதினி அன்ன நின் |
|
ஒண் கேழ் வன முலைப் பொலிந்த |
|
நுண் பூண் ஆகம் பொருந்துதல் மறந்தே. |
|
தலைமகன் பொருள்வயிற் பிரிய, வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. - மாமூலனார் | |
உரை |
'நனந்தலைக் கானத்து ஆளி அஞ்சி, |
|
இனம் தலைத்தரூஉம் எறுழ் கிளர் முன்பின், |
|
வரி ஞிமிறு ஆர்க்கும், வாய் புகு, கடாத்து, |
|
பொறி நுதற் பொலிந்த வயக் களிற்று ஒருத்தல் |
|
5 |
இரும் பிணர்த் தடக் கையின், ஏமுறத் தழுவ, |
கடுஞ்சூல் மடப் பிடி நடுங்கும் சாரல், |
|
தேம் பிழி நறவின் குறவர் முன்றில், |
|
முந்தூழ் ஆய் மலர் உதிர, காந்தள் |
|
நீடு இதழ் நெடுந் துடுப்பு ஒசிய, தண்ணென |
|
10 |
வாடை தூக்கும் வருபனி அற்சிரம், |
நம் இல் புலம்பின், தம் ஊர்த் தமியர் |
|
என் ஆகுவர்கொல் அளியர்தாம்?' என, |
|
எம் விட்டு அகன்ற சில் நாள், சிறிதும், |
|
உள்ளியும் அறிதிரோ ஓங்குமலைநாட! |
|
15 |
உலகுடன் திரிதரும் பலர் புகழ் நல் இசை |
வாய்மொழிக் கபிலன் சூழ, சேய் நின்று |
|
செழுஞ் செய்ந் நெல்லின் விளைகதிர் கொண்டு, |
|
தடந் தாள் ஆம்பல் மலரொடு கூட்டி, |
|
யாண்டு பல கழிய, வேண்டுவயிற் பிழையாது, |
|
20 |
ஆள் இடூஉக் கடந்து, வாள் அமர் உழக்கி, |
ஏந்துகோட்டு யானை வேந்தர் ஓட்டிய, |
|
கடும் பரிப் புரவிக் கை வண் பாரி |
|
தீம் பெரும் பைஞ் சுனைப் பூத்த |
|
தேம் கமழ் புது மலர் நாறும் இவள் நுதலே? |
|
களவுக் காலத்துப் பிரிந்து வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது.- மதுரை நக்கீரனார் | |
உரை |
உழுந்து தலைப்பெய்த கொழுங் களி மிதவை |
|
பெருஞ் சோற்று அமலை நிற்ப, நிரை கால் |
|
தண் பெரும் பந்தர்த் தரு மணல் ஞெமிரி |
|
மனை விளக்குறுத்து, மாலை தொடரி, |
|
5 |
கனை இருள் அகன்ற கவின்பெறுகாலை; |
கோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள் |
|
கேடு இல் விழுப் புகழ் நாள் தலைவந்தென, |
|
உச்சிக் குடத்தர், புத்தகல் மண்டையர், |
|
பொது செய் கம்பலை முது செம் பெண்டிர் |
|
10 |
முன்னவும் பின்னவும் முறை முறை தரத்தர, |
புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று |
|
வால் இழை மகளிர் நால்வர் கூடி, |
|
'கற்பினின் வழாஅ, நற் பல உதவிப் |
|
பெற்றோற் பெட்கும் பிணையை ஆக!' என, |
|
15 |
நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி |
பல் இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க, |
|
வதுவை நல் மணம் கழிந்த பின்றை, |
|
கல்லென் சும்மையர், ஞெரேரெனப் புகுதந்து, |
|
'பேர் இற்கிழத்தி ஆக' எனத் தமர் தர, |
|
20 |
ஓர் இற் கூடிய உடன் புணர் கங்குல், |
கொடும் புறம் வளைஇ, கோடிக் கலிங்கத்து |
|
ஒடுங்கினள் கிடந்த ஓர் புறம் தழீஇ, |
|
முயங்கல் விருப்பொடு முகம் புதை திறப்ப, |
|
அஞ்சினள் உயிர்த்தகாலை, 'யாழ நின் |
|
25 |
நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரை' என, |
இன் நகை இருக்கை, பின் யான் வினவலின், |
|
செஞ் சூட்டு ஒண் குழை வண் காது துயல்வர, |
|
அகம் மலி உவகையள்ஆகி, முகன் இகுத்து, |
|
ஒய்யென இறைஞ்சியோளே மாவின் |
|
30 |
மடம் கொள் மதைஇய நோக்கின், |
ஒடுங்கு ஈர் ஓதி, மாஅயோளே. |
|
வாயில் மறுத்த தோழிக்குத் தலைமகன் சொல்லியது. தலைமகளைக் கூடி இன்புற்றிருந்த தலைமகன் பண்டு நிகழ்ந்தது சொற்று இன்புற்றிருந்ததூஉமாம்,- நல்லாவூர் கிழார் | |
உரை |
நறவு உண் மண்டை நுடக்கலின், இறவுக் கலித்து, |
|
பூட்டு அறு வில்லின் கூட்டுமுதல் தெறிக்கும் |
|
பழனப் பொய்கை அடைகரைப் பிரம்பின் |
|
அர வாய் அன்ன அம் முள் நெடுங் கொடி |
|
5 |
அருவி ஆம்பல் அகல் அடை துடக்கி, |
அசைவரல் வாடை தூக்கலின், ஊதுஉலை |
|
விசை வாங்கு தோலின், வீங்குபு ஞெகிழும் |
|
கழனிஅம் படப்பைக் காஞ்சி ஊர! |
|
'ஒண் தொடி ஆயத்துள்ளும் நீ நயந்து |
|
10 |
கொண்டனை' என்ப 'ஓர் குறுமகள்' அதுவே |
செம்பொற் சிலம்பின், செறிந்த குறங்கின், |
|
அம் கலுழ் மாமை, அஃதை தந்தை, |
|
அண்ணல் யானை அடு போர்ச் சோழர், |
|
வெண்ணெல் வைப்பின் பருவூர்ப் பறந்தலை, |
|
15 |
இரு பெரு வேந்தரும் பொருது களத்து ஒழிய, |
ஒளிறு வாள் நல் அமர்க் கடந்த ஞான்றை, |
|
களிறு கவர் கம்பலை போல, |
|
அலர் ஆகின்றது, பலர் வாய்ப் பட்டே. |
|
தோழி வாயில் மறுத்தது. மருதம் பாடிய இளங்கடுங்கோ | |
உரை |
எரி அகைந்தன்ன தாமரை இடை இடை |
|
அரிந்து கால் குவித்த செந் நெல் வினைஞர் |
|
கள் கொண்டு மறுகும் சாகாடு அளற்று உறின், |
|
ஆய் கரும்பு அடுக்கும் பாய்புனல் ஊர! |
|
5 |
பெரிய நாண் இலைமன்ற; 'பொரி எனப் |
புன்கு அவிழ் அகன்துறைப் பொலிய, ஒள் நுதல், |
|
நறு மலர்க்காண் வரும் குறும் பல் கூந்தல், |
|
மாழை நோக்கின், காழ் இயல் வன முலை, |
|
எஃகுடை எழில் நலத்து, ஒருத்தியொடு நெருநை |
|
10 |
வைகுபுனல் அயர்ந்தனை' என்ப; அதுவே, |
பொய் புறம் பொதிந்து, யாம் கரப்பவும், கையிகந்து |
|
அலர் ஆகின்றால் தானே; மலர்தார், |
|
மை அணி யானை, மறப் போர்ச் செழியன் |
|
பொய்யா விழவின் கூடற் பறந்தலை, |
|
15 |
உடன் இயைந்து எழுந்த இரு பெரு வேந்தர் |
கடல் மருள் பெரும் படை கலங்கத் தாக்கி, |
|
இரங்குஇசை முரசம் ஒழிய, பரந்து அவர் |
|
ஓடுபுறம் கண்ட ஞான்றை, |
|
ஆடு கொள் வியன் களத்து ஆர்ப்பினும் பெரிதே. |
|
தோழி தலைமகனை வாயில் மறுத்தது. - பரணர் | |
உரை |
நின் வாய் செத்து நீ பல உள்ளி, |
|
பெரும் புன் பைதலை வருந்தல் அன்றியும், |
|
மலைமிசைத் தொடுத்த மலிந்து செலல் நீத்தம் |
|
தலை நாள் மா மலர் தண் துறைத் தயங்கக் |
|
5 |
கடற்கரை மெலிக்கும் காவிரிப் பேரியாற்று |
அறல் வார் நெடுங் கயத்து அரு நிலை கலங்க, |
|
மால் இருள் நடுநாட் போகி, தன் ஐயர் |
|
காலைத் தந்த கணைக் கோட்டு வாளைக்கு, |
|
அவ் வாங்கு உந்தி, அம் சொல், பாண்மகள், |
|
10 |
நெடுங் கொடி நுடங்கும் நறவு மலி மறுகில் |
பழஞ் செந் நெல்லின் முகவை கொள்ளாள், |
|
கழங்கு உறழ் முத்தமொடு நன்கலம் பெறூஉம் |
|
பயம் கெழு வைப்பிற் பல் வேல் எவ்வி |
|
நயம் புரி நன் மொழி அடக்கவும் அடங்கான், |
|
15 |
பொன் இணர் நறு மலர்ப் புன்னை வெஃகி, |
திதியனொடு பொருத அன்னி போல |
|
விளிகுவைகொல்லோ, நீயே கிளி எனச் |
|
சிறிய மிழற்றும் செவ் வாய், பெரிய |
|
கயல் என அமர்த்த உண்கண், புயல் எனப் |
|
20 |
புறம் தாழ்பு இருளிய பிறங்கு குரல் ஐம்பால், |
மின் நேர் மருங்குல், குறுமகள் |
|
பின்னிலை விடாஅ மடம் கெழு நெஞ்சே? |
|
உணர்ப்புவயின் வாரா ஊடற்கண், தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது; அல்ல குறிப்பிட்டு அழிந்ததூஉம் ஆம்; தோழியைப் பின்னின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம். - நக்கீரர் | |
உரை |
பெருங் கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர் |
|
இருங் கழிச் செறுவின் உழாஅது செய்த |
|
வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி, |
|
என்றூழ் விடர குன்றம் போகும் |
|
5 |
கதழ் கோல் உமணர் காதல் மடமகள் |
சில் கோல் எல் வளை தெளிர்ப்ப வீசி, |
|
'நெல்லின் நேரே வெண் கல் உப்பு' எனச் |
|
சேரி விலைமாறு கூறலின், மனைய |
|
விளி அறி ஞமலி குரைப்ப, வெரீஇய |
|
10 |
மதர் கயல் மலைப்பின் அன்ன கண் எமக்கு, |
இதை முயல் புனவன் புகைநிழல் கடுக்கும் |
|
மா மூதள்ளல் அழுந்திய சாகாட்டு |
|
எவ்வம் தீர வாங்கும் தந்தை |
|
கை பூண் பகட்டின் வருந்தி, |
|
15 |
வெய்ய உயிர்க்கும் நோய் ஆகின்றே. |
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் பாங்கற்கு உரைத்தது.- அம்மூவனார் | |
உரை |
அம்ம வாழி, தோழி! கைம்மிகக் |
|
கனவும் கங்குல்தோறு இனிய; நனவும் |
|
புனை வினை நல் இல் புள்ளும் பாங்கின; |
|
நெஞ்சும் நனிபுகன்று உறையும்; எஞ்சாது |
|
5 |
உலகு தொழில் உலந்து, நாஞ்சில் துஞ்சி, |
மழை கால்நீங்கிய மாக விசும்பில் |
|
குறு முயல் மறு நிறம் கிளர, மதி நிறைந்து, |
|
அறுமீன் சேரும் அகல் இருள் நடு நாள்; |
|
மறுகு விளக்குறுத்து, மாலை தூக்கி, |
|
10 |
பழ விறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய |
விழவு உடன் அயர, வருகதில் அம்ம! |
|
துவரப் புலர்ந்து தூ மலர் கஞலி, |
|
தகரம் நாறும் தண் நறுங் கதுப்பின் |
|
புது மண மகடூஉ அயினிய கடி நகர்ப் |
|
15 |
பல் கோட்டு அடுப்பில் பால் உலை இரீஇ, |
கூழைக் கூந்தற் குறுந் தொடி மகளிர் |
|
பெருஞ் செய் நெல்லின் வாங்குகதிர் முறித்து, |
|
பாசவல் இடிக்கும் இருங் காழ் உலக்கைக் |
|
கடிது இடி வெரீஇய கமஞ்சூல் வெண் குருகு |
|
20 |
தீம் குலை வாழை ஓங்கு மடல் இராது; |
நெடுங் கால் மாஅத்துக் குறும் பறை பயிற்றும் |
|
செல் குடி நிறுத்த பெரும் பெயர்க் கரிகால் |
|
வெல் போர்ச் சோழன் இடையாற்று அன்ன |
|
நல் இசை வெறுக்கை தருமார், பல் பொறிப் |
|
25 |
புலிக் கேழ் உற்ற பூவிடைப் பெருஞ் சினை |
நரந்த நறும் பூ நாள் மலர் உதிர, |
|
கலை பாய்ந்து உகளும், கல் சேர் வேங்கை, |
|
தேம் கமழ் நெடு வரைப் பிறங்கிய |
|
வேங்கட வைப்பிற் சுரன் இறந்தோரே. |
|
'பிரிவிடை ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - நக்கீரர் | |
உரை |
முரசுடைச் செல்வர் புரவிச் சூட்டும் |
|
மூட்டுறு கவரி தூக்கியன்ன, |
|
செழுஞ் செய் நெல்லின் சேயரிப் புனிற்றுக் கதிர் |
|
மூதா தின்றல் அஞ்சி, காவலர் |
|
5 |
பாகல் ஆய்கொடிப் பகன்றையொடு பரீஇ, |
காஞ்சியின் அகத்து, கரும்பு அருத்தி, யாக்கும் |
|
தீம் புனல் ஊர! திறவதாகக் |
|
குவளை உண்கண் இவளும் யானும் |
|
கழனி ஆம்பல் முழுநெறிப் பைந் தழை, |
|
10 |
காயா ஞாயிற்றாக, தலைப்பெய, |
'பொய்தல் ஆடிப் பொலிக!' என வந்து, |
|
நின் நகாப் பிழைத்த தவறோ பெரும! |
|
கள்ளும் கண்ணியும் கையுறையாக |
|
நிலைக் கோட்டு வெள்ளை நால்செவிக் கிடாஅய் |
|
15 |
நிலைத்துறைக் கடவுட்கு உளப்பட ஓச்சி, |
தணி மருங்கு அறியாள், யாய் அழ, |
|
மணி மருள் மேனி பொன் நிறம் கொளலே? |
|
தலைமகளை இடத்து உய்த்துவந்த தோழி தலைமகனை வரைவு கடாயது.-ஆவூர் மூலங்கிழார் | |
உரை |
'நல் மரம் குழீஇய நனை முதிர் சாடி |
|
பல் நாள் அரித்த கோஒய் உடைப்பின், |
|
மயங்குமழைத் துவலையின் மறுகு உடன் பனிக்கும் |
|
பழம் பல் நெல்லின் வேளூர்வாயில், |
|
5 |
நறு விரை தெளித்த நாறுஇணர் மாலை, |
பொறி வரி இன வண்டு ஊதல கழியும் |
|
உயர் பலி பெறூஉம் உரு கெழு தெய்வம், |
|
புனை இருங் கதுப்பின் நீ கடுத்தோள்வயின் |
|
அனையேன்ஆயின், அணங்குக, என்!' என |
|
10 |
மனையோட் தேற்றும் மகிழ்நன்ஆயின், |
யார்கொல் வாழி, தோழி! நெருநல் |
|
தார் பூண் களிற்றின் தலைப் புணை தழீஇ, |
|
வதுவை ஈர் அணிப் பொலிந்து, நம்மொடு, |
|
புதுவது வந்த காவிரிக் |
|
15 |
கோடு தோய் மலிர்நிறை, ஆடியோரே? |
பரத்தையொடு புனலாடிய தலைமகன் தலைமகளிடைப் புக்கு, 'யான் ஆடிற்றிலன்' என்று சூளுற்றான் என்பது கேட்ட பரத்தை, தன் பாங்காயினார் கேட்ப, சொல்லியது. - இடையன் நெடுங்கீரனார் | |
உரை |
கடல் கண்டன்ன கண் அகன் பரப்பின் |
|
நிலம் பக வீழ்ந்த வேர் முதிர் கிழங்கின் |
|
கழை கண்டன்ன தூம்புடைத் திரள் கால், |
|
களிற்றுச் செவி அன்ன பாசடை மருங்கில், |
|
5 |
கழு நிவந்தன்ன கொழு முகை இடை இடை |
முறுவல் முகத்தின் பல் மலர் தயங்க, |
|
பூத்த தாமரைப் புள் இமிழ் பழனத்து, |
|
வேப்பு நனை அன்ன நெடுங் கண் நீர்ஞெண்டு |
|
இரை தேர் வெண் குருகு அஞ்சி, அயலது |
|
10 |
ஒலித்த பகன்றை இருஞ் சேற்று அள்ளல், |
திதலையின் வரிப்ப ஓடி, விரைந்து தன் |
|
நீர் மலி மண் அளைச் செறியும் ஊர! |
|
மனை நகு வயலை மரன் இவர் கொழுங் கொடி |
|
அரி மலர் ஆம்பலொடு ஆர்தழை தைஇ, |
|
15 |
விழவு ஆடு மகளிரொடு தழூஉ அணிப் பொலிந்து, |
மலர் ஏர் உண்கண் மாண் இழை முன்கைக் |
|
குறுந் தொடி துடக்கிய நெடுந் தொடர் விடுத்தது |
|
உடன்றனள் போலும், நின் காதலி? எம் போல் |
|
புல் உளைக் குடுமிப் புதல்வற் பயந்து, |
|
20 |
நெல்லுடை நெடு நகர் நின் இன்று உறைய, |
என்ன கடத்தளோ, மற்றே? தன் முகத்து |
|
எழுது எழில் சிதைய அழுதனள் ஏங்கி, |
|
அடித்தென உருத்த தித்திப் பல் ஊழ் |
|
நொடித்தெனச் சிவந்த மெல் விரல் திருகுபு, |
|
25 |
கூர்நுனை மழுகிய எயிற்றள் |
ஊர் முழுதும் நுவலும் நிற் காணிய சென்மே. |
|
தோழி தலைமகனை வாயில் மறுத்தது. மருதம் - பாடிய இளங்கடுங்கோ | |
உரை |
உலகு உடன் நிழற்றிய தொலையா வெண்குடை, |
|
கடல் போல் தானை, கலிமா, வழுதி |
|
வென்று அமர் உழந்த வியன் பெரும் பாசறைச் |
|
சென்று, வினை முடித்தனம்ஆயின், இன்றே |
|
5 |
கார்ப் பெயற்கு எதிரிய காண்தகு புறவில், |
கணம் கொள் வண்டின் அம் சிறைத் தொழுதி |
|
மணம் கமழ் முல்லை மாலை ஆர்ப்ப, |
|
உதுக்காண் வந்தன்று பொழுதே; வல் விரைந்து, |
|
செல்க, பாக! நின் நல் வினை நெடுந் தேர் |
|
10 |
வெண்ணெல் அரிநர் மடி வாய்த் தண்ணுமை |
பல் மலர்ப் பொய்கைப் படு புள் ஓப்பும் |
|
காய் நெல் படப்பை வாணன் சிறுகுடித் |
|
தண்டலை கமழும் கூந்தல், |
|
ஒண் தொடி மடந்தை தோள் இணை பெறவே. |
|
வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார் | |
உரை |
கேளாய், எல்ல! தோழி! வாலிய |
|
சுதை விரிந்தன்ன பல் பூ மராஅம் |
|
பறை கண்டன்ன பா அடி நோன் தாள் |
|
திண் நிலை மருப்பின் வயக் களிறு உரிஞுதொறும், |
|
5 |
தண் மழை ஆலியின் தாஅய், உழவர் |
வெண்ணெல் வித்தின் அறைமிசை உணங்கும் |
|
பனி படு சோலை வேங்கடத்து உம்பர், |
|
மொழி பெயர் தேஎத்தர் ஆயினும், நல்குவர் |
|
குழியிடைக் கொண்ட கன்றுடைப் பெரு நிரை |
|
10 |
பிடி படு பூசலின் எய்தாது ஒழிய, |
கடுஞ் சின வேந்தன் ஏவலின் எய்தி, |
|
நெடுஞ் சேண் நாட்டில் தலைத்தார்ப் பட்ட |
|
கல்லா எழினி பல் எறிந்து அழுத்திய |
|
வன்கண் கதவின் வெண்மணி வாயில், |
|
15 |
மத்தி நாட்டிய கல் கெழு பனித் துறை, |
நீர் ஒலித்தன்ன பேஎர் |
|
அலர் நமக்கு ஒழிய, அழப் பிரிந்தோரே. |
|
பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு தோழி சொல்லியது. -மாமூலனார் | |
உரை |
ஊரும் சேரியும் உடன் இயைந்து அலர் எழ, |
|
தேரொடு மறுகியும், பணி மொழி பயிற்றியும், |
|
கெடாஅத் தீயின் உரு கெழு செல்லூர், |
|
கடாஅ யானைக் குழூஉச் சமம் ததைய, |
|
5 |
மன் மருங்கு அறுத்த மழு வாள் நெடியோன் |
முன் முயன்று அரிதினின் முடித்த வேள்வி, |
|
கயிறு அரை யாத்த காண் தகு வனப்பின், |
|
அருங் கடி நெடுந் தூண் போல, யாவரும் |
|
காணலாகா மாண் எழில் ஆகம் |
|
10 |
உள்ளுதொறும் பனிக்கும் நெஞ்சினை, நீயே |
நெடும் புற நிலையினை, வருந்தினைஆயின், |
|
முழங்கு கடல் ஓதம் காலைக் கொட்கும், |
|
பழம் பல் நெல்லின் ஊணூர் ஆங்கண், |
|
நோலா இரும் புள் போல, நெஞ்சு அமர்ந்து, |
|
15 |
காதல் மாறாக் காமர் புணர்ச்சியின், |
இருங் கழி முகந்த செங் கோல் அவ் வலை |
|
முடங்கு புற இறவொடு இன மீன் செறிக்கும் |
|
நெடுங் கதிர்க் கழனித் தண் சாய்க்கானத்து, |
|
யாணர்த் தண் பணை உறும் என, கானல் |
|
20 |
ஆயம் ஆய்ந்த சாய் இறைப் பணைத் தோள் |
நல் எழில் சிதையா ஏமம் |
|
சொல் இனித் தெய்ய, யாம் தெளியுமாறே. |
|
இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகனை எதிர்ப்பட்டுத் தோழி சொல்லியது. -மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
மணி மருள் மலர முள்ளி அமன்ற, |
|
துணி நீர், இலஞ்சிக் கொண்ட பெரு மீன் |
|
அரி நிறக் கொழுங் குறை வௌவினர் மாந்தி, |
|
வெண்ணெல் அரிநர் பெயர்நிலைப் பின்றை, |
|
5 |
இடை நிலம் நெரிதரு நெடுங் கதிர்ப் பல் சூட்டுப் |
பனி படு சாய்ப் புறம் பரிப்ப, கழனிக் |
|
கருங் கோட்டு மாஅத்து அலங்கு சினைப் புதுப் பூ |
|
மயங்கு மழைத் துவலையின் தாஅம் ஊரன் |
|
காமம் பெருமை அறியேன், நன்றும் |
|
10 |
உய்ந்தனென் வாழி, தோழி! அல்கல் |
அணி கிளர் சாந்தின் அம் பட்டு இமைப்ப, |
|
கொடுங் குழை மகளிரின் ஒடுங்கிய இருக்கை |
|
அறியாமையின் அழிந்த நெஞ்சின், |
|
'ஏற்று இயல் எழில் நடைப் பொலிந்த மொய்ம்பின், |
|
15 |
தோட்டு இருஞ் சுரியல் மணந்த பித்தை, |
ஆட்டன் அத்தியைக் காணீரோ?' என |
|
நாட்டின் நாட்டின், ஊரின் ஊரின், |
|
'கடல் கொண்டன்று' என, 'புனல் ஒளித்தன்று' என, |
|
கலுழ்ந்த கண்ணள், காதலற் கெடுத்த |
|
20 |
ஆதிமந்தி போல, |
ஏதம் சொல்லி, பேது பெரிது உறலே. |
|
ஆற்றாமை வாயிலாகப் புக்க தலைமகன் நீக்கத்துக்கண் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - பரணர் | |
உரை |
அவரை ஆய் மலர் உதிர, துவரின |
|
வாங்கு துளைத் துகிரின் ஈங்கை பூப்ப, |
|
இறங்கு போது அவிழ்ந்த ஈர்ம் புதல் பகன்றைக் |
|
கறங்கு நுண் துவலையின் ஊருழை அணிய, |
|
5 |
பெயல் நீர் புது வரல் தவிர, சினை நேர்பு |
பீள் விரிந்து இறைஞ்சிய பிறங்கு கதிர்க் கழனி |
|
நெல் ஒலி பாசவல் துழைஇ, கல்லெனக் |
|
கடிது வந்து இறுத்த கண் இல் வாடை! |
|
'நெடிது வந்தனை' என நில்லாது ஏங்கிப் |
|
10 |
பல புலந்து உறையும் துணை இல் வாழ்க்கை |
நம்வலத்து அன்மை கூறி, அவர் நிலை |
|
அறியுநம் ஆயின், நன்றுமன் தில்ல; |
|
பனி வார் கண்ணேம் ஆகி, இனி அது |
|
நமக்கே எவ்வம் ஆகின்று; |
|
15 |
அனைத்தால் தோழி! நம் தொல் வினைப் பயனே! |
தலைமகன் பிரிவின்கண் வற்புறுத்தும் தோழிக்கு, தலைமகள் 'ஆற்றேன்' என்பது படச் சொல்லியது. - கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார் | |
உரை |
'நெஞ்சு நெகிழ்தகுந கூறி, அன்பு கலந்து, |
|
அறாஅ வஞ்சினம் செய்தோர், வினை புரிந்து, |
|
திறம் வேறு ஆகல் எற்று?' என்று ஒற்றி, |
|
இனைதல் ஆன்றிசின், நீயே; சினை பாய்ந்து, |
|
5 |
உதிர்த்த கோடை, உட்கு வரு கடத்திடை, |
வெருக்கு அடி அன்ன குவி முகிழ் இருப்பை, |
|
மருப்புக் கடைந்தன்ன, கொள்ளை வான் பூ |
|
மயிர்க் கால் எண்கின் ஈர் இனம் கவர, |
|
மை பட்டன்ன மா முக முசுவினம் |
|
10 |
பைது அறு நெடுங் கழை பாய்தலின், ஒய்யென |
வெதிர் படு வெண்ணெல் வெவ் அறைத் தாஅய், |
|
உகிர் நெரி ஓசையின் பொங்குவன பொரியும் |
|
ஓங்கல் வெற்பின் சுரம் பல இறந்தோர் |
|
தாம் பழி உடையர்அல்லர்; நாளும் |
|
15 |
நயந்தோர்ப் பிணித்தல் தேற்றா, வயங்கு வினை |
வாள் ஏர் எல் வளை நெகிழ்த்த, |
|
தோளே தோழி! தவறு உடையவ்வே! |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகளது ஆற்றாமை கண்டு, ஆற்றாளாகிய தோழிக்குத் தலை மகள் சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ | |
உரை |
தொடி தோள் இவர்க! எவ்வமும் தீர்க! |
|
நெறி இருங் கதுப்பின் கோதையும் புனைக! |
|
ஏறுடை இன நிரை பெயர, பெயராது, |
|
செறி சுரை வெள் வேல் மழவர்த் தாங்கிய |
|
5 |
தறுகணாளர் நல் இசை நிறுமார், |
பிடி மடிந்தன்ன குறும்பொறை மருங்கின், |
|
நட்ட போலும் நடாஅ நெடுங் கல் |
|
அகல் இடம் குயின்ற பல் பெயர் மண்ணி, |
|
நறு விரை மஞ்சள் ஈர்ம் புறம் பொலிய |
|
10 |
அம்பு கொண்டு அறுத்த ஆர் நார் உரிவையின் |
செம் பூங் கரந்தை புனைந்த கண்ணி |
|
வரி வண்டு ஆர்ப்பச் சூட்டி, கழற் கால் |
|
இளையர் பதிப் பெயரும் அருஞ் சுரம் இறந்தோர், |
|
தைஇ நின்ற தண் பெயல் கடை நாள், |
|
15 |
பொலங்காசு நிரைத்த கோடு ஏந்து அல்குல் |
நலம் கேழ் மாக் குரல் குழையொடு துயல்வர, |
|
பாடு ஊர்பு எழுதரும் பகு வாய் மண்டிலத்து |
|
வயிர் இடைப்பட்ட தெள் விளி இயம்ப, |
|
வண்டற் பாவை உண்துறைத் தரீஇ, |
|
20 |
திரு நுதல் மகளிர் குரவை அயரும் |
பெரு நீர்க் கானல் தழீஇய இருக்கை, |
|
வாணன் சிறுகுடி, வணங்கு கதிர் நெல்லின் |
|
யாணர்த் தண் பணைப் போது வாய் அவிழ்ந்த |
|
ஒண் செங் கழுநீர் அன்ன, நின் |
|
25 |
கண் பனி துடைமார் வந்தனர், விரைந்தே. |
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
மங்குல் மா மழை விண் அதிர்பு முழங்கி, |
|
துள்ளுப் பெயல் கழிந்த பின்றை, புகைஉறப் |
|
புள்ளி நுண் துவலை பூவகம் நிறைய, |
|
காதலர்ப் பிரிந்த கையறு மகளிர் |
|
5 |
நீர் வார் கண்ணின் கருவிளை மலர, |
துய்த் தலைப் பூவின் புதல் இவர் ஈங்கை |
|
நெய்த் தோய்த்தன்ன நீர் நனை அம் தளிர் |
|
இரு வகிர் ஈருளின் ஈரிய துயல்வர, |
|
அவரைப் பைம் பூப் பயில, அகல் வயல் |
|
10 |
கதிர் வார் காய் நெல் கட்கு இனிது இறைஞ்ச, |
சிதர் சினை தூங்கும் அற்சிர அரை நாள், |
|
'காய் சின வேந்தன் பாசறை நீடி, |
|
நம் நோய் அறியா அறனிலாளர் |
|
இந் நிலை களைய வருகுவர்கொல்?' என |
|
15 |
ஆனாது எறிதரும் வாடையொடு |
நோனேன் தோழி! என் தனிமையானே. |
|
பருவ வரவின்கண் வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - கழார்க்கீரன் எயிற்றியார் | |
உரை |
இடை பிறர் அறிதல் அஞ்சி, மறை கரந்து, |
|
பேஎய் கண்ட கனவின், பல் மாண் |
|
நுண்ணிதின் இயைந்த காமம் வென் வேல், |
|
மறம் மிகு தானை, பசும்பூண், பொறையன் |
|
5 |
கார் புகன்று எடுத்த சூர் புகல் நனந்தலை |
மா இருங் கொல்லி உச்சித் தாஅய், |
|
ததைந்து செல் அருவியின் அலர் எழப் பிரிந்தோர் |
|
புலம் கந்தாக இரவலர் செலினே, |
|
வரை புரை களிற்றொடு நன் கலன் ஈயும் |
|
10 |
உரை சால் வண் புகழ்ப் பாரி பறம்பின் |
நிரை பறைக் குரீஇயினம் காலைப் போகி, |
|
முடங்கு புறச் செந்நெல் தரீஇயர், ஓராங்கு |
|
இரை தேர் கொட்பின் ஆகி, பொழுது படப் |
|
படர் கொள் மாலைப் படர்தந்தாங்கு, |
|
15 |
வருவர் என்று உணர்ந்த, மடம் கெழு, நெஞ்சம்! |
ஐயம் தெளியரோ, நீயே; பல உடன் |
|
வறல் மரம் பொருந்திய சிள்வீடு, உமணர் |
|
கண நிரை மணியின், ஆர்க்கும் சுரன் இறந்து, |
|
அழி நீர் மீன் பெயர்ந்தாங்கு, அவர் |
|
20 |
வழி நடைச் சேறல் வலித்திசின், யானே. |
தலைமகன் பிரிவின்கண் வேட்கை மீதூர்ந்த தலைமகள் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - ஒளவையார் | |
உரை |
பெரும் பெயர் மகிழ்ந! பேணாது அகன்மோ! |
|
பரந்த பொய்கைப் பிரம்பொடு நீடிய |
|
முட் கொம்பு ஈங்கைத் துய்த் தலைப் புது வீ |
|
ஈன்ற மாத்தின் இளந் தளிர் வருட, |
|
5 |
வார் குருகு உறங்கும் நீர் சூழ் வள வயல் |
கழனிக் கரும்பின் சாய்ப் புறம் ஊர்ந்து, |
|
பழன யாமை பசு வெயில் கொள்ளும் |
|
நெல்லுடை மறுகின் நன்னர் ஊர! |
|
இதுவோ மற்று நின் செம்மல்? மாண்ட |
|
10 |
மதி ஏர் ஒள் நுதல் வயங்கு இழை ஒருத்தி |
இகழ்ந்த சொல்லும் சொல்லி, சிவந்த |
|
ஆய் இதழ் மழைக் கண் நோய் உற நோக்கி, |
|
தண் நறுங் கமழ் தார் பரீஇயினள், நும்மொடு |
|
ஊடினள் சிறு துனி செய்து எம் |
|
15 |
மணல் மலி மறுகின் இறந்திசினோளே. |
தோழி தலைமகற்கு வாயில் மறுத்தது - மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் | |
உரை |
பல் நாள் எவ்வம் தீர, பகல் வந்து, |
|
புன்னை அம் பொதும்பின் இன் நிழல் கழிப்பி, |
|
மாலை மால் கொள நோக்கி, பண் ஆய்ந்து, |
|
வலவன் வண் தேர் இயக்க, நீயும் |
|
5 |
செலவு விருப்புறுதல் ஒழிகதில் அம்ம |
'செல்லா நல் இசை, பொலம் பூண், திரையன் |
|
பல் பூங் கானற் பவத்திரி அன்ன இவள் |
|
நல் எழில் இள நலம் தொலைய, ஒல்லென, |
|
கழியே ஓதம் மல்கின்று; வழியே |
|
10 |
வள் எயிற்று அரவொடு வய மீன் கொட்கும்; |
சென்றோர் மன்ற; மான்றன்று பொழுது' என, |
|
நின் திறத்து அவலம் வீட, இன்று இவண் |
|
சேப்பின் எவனோ பூக் கேழ் புலம்ப! |
|
பசு மீன் நொடுத்த வெண் நெல் மாஅத் |
|
15 |
தயிர் மிதி மிதவை ஆர்த்துவம் நினக்கே; |
வடவர் தந்த வான் கேழ் வட்டம் |
|
குட புல உறுப்பின் கூட்டுபு நிகழ்த்திய |
|
வண்டு இமிர் நறுஞ் சாந்து அணிகுவம் திண் திமில் |
|
எல்லுத் தொழில் மடுத்த வல் வினைப் பரதவர் |
|
20 |
கூர் உளிக் கடு விசை மாட்டலின், பாய்பு உடன், |
கோட் சுறாக் கிழித்த கொடு முடி நெடு வலை |
|
தண் கடல் அசைவளி எறிதொறும், வினை விட்டு, |
|
முன்றில் தாழைத் தூங்கும் |
|
தெண் கடற் பரப்பின், எம் உறைவு இன், ஊர்க்கே? |
|
பகற் குறிக்கண் தோழி தலைமகற்குச் சொல்லியது. - நக்கீரர் | |
உரை |
நகை நன்று அம்ம தானே இறை மிசை |
|
மாரிச் சுதையின் ஈர்ம் புறத்து அன்ன |
|
கூரல் கொக்கின் குறும் பறைச் சேவல், |
|
வெள்ளி வெண் தோடு அன்ன, கயல் குறித்து, |
|
5 |
கள் ஆர் உவகைக் கலி மகிழ் உழவர் |
காஞ்சி அம் குறுந் தறி குத்தி, தீம் சுவை |
|
மென் கழைக் கரும்பின் நன் பல மிடைந்து, |
|
பெருஞ் செய் நெல்லின் பாசு அவல் பொத்தி, |
|
வருத்திக் கொண்ட வல் வாய்க் கொடுஞ் சிறை |
|
10 |
மீது அழி கடு நீர் நோக்கி, பைப்பயப் |
பார்வல் இருக்கும் பயம் கேழ் ஊர! |
|
யாம் அது பேணின்றோ இலமே நீ நின் |
|
பண் அமை நல் யாழ்ப் பாணனொடு, விசி பிணி, |
|
மண் ஆர், முழவின் கண் அதிர்ந்து இயம்ப, |
|
15 |
மகிழ் துணைச் சுற்றமொடு மட்டு மாந்தி, |
எம் மனை வாராயாகி, முன் நாள், |
|
நும் மனைச் சேர்ந்த ஞான்றை, அம் மனைக் |
|
குறுந் தொடி மடந்தை உவந்தனள் நெடுந் தேர், |
|
இழை அணி யானைப் பழையன் மாறன், |
|
20 |
மாட மலி மறுகின் கூடல் ஆங்கண், |
வெள்ளத் தானையொடு வேறு புலத்து இறுத்த |
|
கிள்ளி வளவன் நல் அமர் சாஅய், |
|
கடும் பரிப் புரவியொடு களிறு பல வவ்வி, |
|
ஏதில் மன்னர் ஊர் கொள, |
|
25 |
கோதை மார்பன் உவகையின் பெரிதே. |
தோழி தலைமகற்கு வாயில் மறுத்தது. - நக்கீரர் | |
உரை |
மேல் துறைக் கொளீஇய கழாலின் கீழ்த் துறை |
|
உகு வார் அருந்த, பகு வாய் யாமை |
|
கம்புள் இயவன் ஆக, விசி பிணித் |
|
தெண் கண் கிணையின் பிறழும் ஊரன் |
|
5 |
இடை நெடுந் தெருவில் கதுமெனக் கண்டு, என் |
பொற் தொடி முன்கை பற்றினனாக, |
|
'அன்னாய்!' என்றனென்; அவன் கை விட்டனனே, |
|
தொல் நசை சாலாமை, நன்னன் பறம்பில் |
|
சிறுகாரோடன் பயினொடு சேர்த்திய |
|
10 |
கற் போல் நாவினேனாகி, மற்று அது |
செப்பலென் மன்னால், யாய்க்கே; நல் தேர்க் |
|
கடும் பகட்டு யானைச் சோழர் மருகன் |
|
நெடுங் கதிர் நெல்லின் வல்லம் கிழவோன் |
|
நல்லடி உள்ளானாகவும், ஒல்லார் |
|
15 |
கதவம் முயறலும் முயல்ப; அதாஅன்று, |
ஒலி பல் கூந்தல் நம்வயின் அருளாது, |
|
கொன்றனன்ஆயினும் கொலை பழுது அன்றே |
|
அருவி ஆம்பல் கலித்த முன்துறை |
|
நன்னன் ஆஅய் பிரம்பு அன்ன |
|
20 |
மின் ஈர் ஓதி! என்னை, நின் குறிப்பே? |
பின்னின்ற தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகளைக் குறை நயப்பக் கூறியது.-பரணர் | |
உரை |
செல்லல், மகிழ்ந! நிற் செய் கடன் உடையென்மன் |
|
கல்லா யானை கடி புனல் கற்றென, |
|
மலி புனல் பொருத மருது ஓங்கு படப்பை, |
|
ஒலி கதிர்க் கழனி, கழாஅர் முன்துறை, |
|
5 |
கலி கொள் சுற்றமொடு கரிகால் காண, |
தண் பதம் கொண்டு, தவிர்ந்த இன் இசை |
|
ஒண் பொறிப் புனை கழல் சேவடிப் புரள, |
|
கருங் கச்சு யாத்த காண்பின் அவ் வயிற்று, |
|
இரும் பொலம் பாண்டில், மணியொடு தெளிர்ப்ப, |
|
10 |
புனல் நயந்து ஆடும் அத்தி அணி நயந்து, |
காவிரி கொண்டு ஒளித்தாங்கும் அன்னோ! |
|
நும்வயின் புலத்தல் செல்லேம்; எம்வயின் |
|
பசந்தன்று, காண்டிசின் நுதலே; அசும்பின் |
|
அம் தூம்பு வள்ளை அழற் கொடி மயக்கி, |
|
15 |
வண் தோட்டு நெல்லின் வாங்கு பீள் விரிய, |
துய்த் தலை முடங்கு இறாத் தெறிக்கும், பொற்புடைக் |
|
குரங்குஉளைப் புரவிக் குட்டுவன் |
|
மரந்தை அன்ன, என் நலம் தந்து சென்மே! |
|
காதற்பரத்தை புலந்து சொல்லியது. - பரணர் | |
உரை |
உவர் விளை உப்பின் கொள்ளை சாற்றி, |
|
அதர் படு பூழிய சேண் புலம் படரும் |
|
ததர் கோல் உமணர் பதி போகு நெடு நெறிக் |
|
கண நிரை வாழ்க்கைதான் நன்றுகொல்லோ? |
|
5 |
வணர் சுரி முச்சி முழுதும் மன் புரள, |
ஐது அகல் அல்குல் கவின் பெறப் புனைந்த |
|
பல் குழைத் தொடலை ஒல்குவயின் ஒல்கி, |
|
' ''நெல்லும் உப்பும் நேரே; ஊரீர்! |
|
கொள்ளீரோ'' எனச் சேரிதொறும் நுவலும், |
|
10 |
அவ் வாங்கு உந்தி, அமைத் தோளாய்! நின் |
மெய் வாழ் உப்பின் விலை எய்யாம்' என, |
|
சிறிய விலங்கினமாக, பெரிய தன் |
|
அரி வேய் உண்கண் அமர்த்தனள் நோக்கி, |
|
'யாரீரோ, எம் விலங்கியீஇர்?' என, |
|
15 |
மூரல் முறுவலள் பேர்வனள் நின்ற |
சில் நிரை வால் வளைப் பொலிந்த |
|
பல் மாண் பேதைக்கு ஒழிந்தது, என் நெஞ்சே! |
|
தலைமகன் பாங்கற்குச் சொல்லியது; நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம். - அம்மூவனார் | |
உரை |
மேல் |