பலா |
கோழிலை வாழைக் கோள் முதிர் பெருங் குலை |
|
ஊழுறு தீம் கனி, உண்ணுநர்த் தடுத்த |
|
சாரற் பலவின் சுளையொடு, ஊழ் படு |
|
பாறை நெடுஞ் சுனை, விளைந்த தேறல் |
|
5 |
அறியாது உண்ட கடுவன் அயலது |
கறி வளர் சாந்தம் ஏறல்செல்லாது, |
|
நறு வீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும் |
|
குறியா இன்பம், எளிதின், நின் மலைப் |
|
பல் வேறு விலங்கும், எய்தும் நாட! |
|
10 |
குறித்த இன்பம் நினக்கு எவன் அரிய? |
வெறுத்த ஏஎர், வேய் புரை பணைத் தோள், |
|
நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்மாட்டு, |
|
இவளும், இனையள்ஆயின், தந்தை |
|
அருங் கடிக் காவலர் சோர் பதன் ஒற்றி, |
|
15 |
கங்குல் வருதலும் உரியை; பைம் புதல் |
வேங்கையும் ஒள் இணர் விரிந்தன; |
|
நெடு வெண் திங்களும் ஊர்கொண்டன்றே. |
|
பகற்குறிக்கண் செறிப்பு அறிவுறீஇத் தோழி வரைவு கடாயது. - கபிலர் | |
உரை |
'முலை முகம்செய்தன; முள் எயிறு இலங்கின; |
|
தலை முடிசான்ற; தண் தழை உடையை; |
|
அலமரல் ஆயமொடு யாங்கணும் படாஅல்; |
|
மூப்புடை முது பதி தாக்குஅணங்கு உடைய; |
|
5 |
காப்பும் பூண்டிசின்; கடையும் போகலை; |
பேதை அல்லை மேதைஅம் குறுமகள்! |
|
பெதும்பைப் பருவத்து ஒதுங்கினை, புறத்து' என, |
|
ஒண் சுடர் நல் இல் அருங் கடி நீவி, |
|
தன் சிதைவு அறிதல் அஞ்சி இன் சிலை |
|
10 |
ஏறுடை இனத்த, நாறு உயிர் நவ்வி! |
வலை காண் பிணையின் போகி, ஈங்கு ஓர் |
|
தொலைவு இல் வெள் வேல் விடலையொடு, என் மகள் |
|
இச் சுரம் படர்தந்தோளே. ஆயிடை, |
|
அத்தக் கள்வர் ஆ தொழு அறுத்தென, |
|
15 |
பிற்படு பூசலின் வழிவழி ஓடி, |
மெய்த் தலைப்படுதல்செல்லேன்; இத் தலை, |
|
நின்னொடு வினவல் கேளாய்! பொன்னொடு |
|
புலிப் பல் கோத்த புலம்பு மணித் தாலி, |
|
ஒலிக் குழைச் செயலை உடை மாண் அல்குல், |
|
20 |
ஆய் சுளைப் பலவின் மேய் கலை உதிர்த்த |
துய்த் தலை வெண் காழ் பெறூஉம் |
|
கல் கெழு சிறுகுடிக் கானவன் மகளே. |
|
மகட்போக்கிய செவிலித்தாய் சுரத்திடைப் பின்சென்று, நவ்விப்பிணாக்கண்டு, சொல்லியது. - கயமனார். | |
உரை |
யாயே, கண்ணினும் கடுங் காதலளே; |
|
எந்தையும், நிலன் உறப் பொறாஅன்; 'சீறடி சிவப்ப, |
|
எவன், இல! குறுமகள்! இயங்குதி?' என்னும்; |
|
யாமே, பிரிவு இன்று இயைந்த துவரா நட்பின், |
|
5 |
இரு தலைப் புள்ளின் ஓர் உயிரம்மே; |
ஏனல்அம் காவலர் ஆனாது ஆர்த்தொறும், |
|
கிளி விளி பயிற்றும் வெளில் ஆடு பெருஞ் சினை, |
|
விழுக் கோட் பலவின் பழுப் பயம் கொண்மார், |
|
குறவர் ஊன்றிய குரம்பை புதைய, |
|
10 |
வேங்கை தாஅய தேம் பாய் தோற்றம் |
புலி செத்து, வெரீஇய புகர்முக வேழம், |
|
மழை படு சிலம்பில் கழைபட, பெயரும் |
|
நல் வரை நாட! நீ வரின், |
|
மெல்லியல் ஓரும் தான் வாழலளே. |
|
பகற்குறி வாராநின்ற தலைமகன் தோழியால் செறிப்பு அறிவுறுக்கப்பட்டு, 'இரவுக் குறி வாரா வரைவல்' என்றாற்கு, அதுவும் மறுத்து, வரைவு கடாயது. - கபிலர் | |
உரை |
வாரணம் உரறும் நீர் திகழ் சிலம்பில் |
|
பிரசமொடு விரைஇய வயங்கு வெள் அருவி |
|
இன் இசை இமிழ் இயம் கடுப்ப, இம்மெனக் |
|
கல் முகை விடர்அகம் சிலம்ப, வீழும் |
|
5 |
காம்பு தலைமணந்த ஓங்கு மலைச் சாரல்; |
இரும்பு வடித்தன்ன கருங் கைக் கானவன் |
|
விரி மலர் மராஅம் பொருந்தி, கோல் தெரிந்து, |
|
வரி நுதல் யானை அரு நிறத்து அழுத்தி, |
|
இகல் அடு முன்பின் வெண் கோடு கொண்டு, தன் |
|
10 |
புல் வேய் குரம்பை புலர ஊன்றி, |
முன்றில் நீடிய முழவு உறழ் பலவில், |
|
பிழி மகிழ் உவகையன், கிளையொடு கலி சிறந்து, |
|
சாந்த ஞெகிழியின் ஊன் புழுக்கு அயரும் |
|
குன்ற நாட! நீ அன்பிலை ஆகுதல் |
|
அறியேன் யான்; அஃது அறிந்தனென்ஆயின் | |
அணி இழை, உண்கண், ஆய் இதழ்க் குறுமகள் |
|
மணி ஏர் மாண் நலம் சிதைய, |
|
பொன் நேர் பசலை பாவின்றுமன்னே! |
|
தோழி தலைமகளை இடத்து உய்த்து வந்து, தலைமகனை வரைவு கடாயது. -மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார் | |
உரை |
பூங் கண் வேங்கைப் பொன் இணர் மிலைந்து, |
|
வாங்கு அமை நோன் சிலை எருத்தத்து இரீஇ, |
|
தீம் பழப் பலவின் சுளை விளை தேறல் |
|
வீளை அம்பின் இளையரொடு மாந்தி, |
|
5 |
ஓட்டு இயல் பிழையா வய நாய் பிற்பட, |
வேட்டம் போகிய குறவன் காட்ட |
|
குளவித் தண் புதல் குருதியொடு துயல் வர, |
|
முளவுமாத் தொலைச்சும் குன்ற நாட! |
|
அரவு எறி உருமோடு ஒன்றிக் கால் வீழ்த்து |
|
10 |
உரவு மழை பொழிந்த பானாட் கங்குல், |
தனியை வந்த ஆறு நினைந்து, அல்கலும், |
|
பனியொடு கலுழும் இவள் கண்ணே; அதனால், |
|
கடும் பகல் வருதல் வேண்டும் தெய்ய |
|
அதிர் குரல் முது கலை கறி முறி முனைஇ, |
|
15 |
உயர்சிமை நெடுங் கோட்டு உகள, உக்க |
கமழ் இதழ் அலரி தாஅய் வேலன் |
|
வெறி அயர் வியன் களம் கடுக்கும் |
|
பெரு வரை நண்ணிய சாரலானே. |
|
தோழி இரா வருவானைப் 'பகல் வா' என்றது. - கபிலர் | |
உரை |
யாம இரவின் நெடுங் கடை நின்று, |
|
தேம் முதிர் சிமையக் குன்றம் பாடும் |
|
நுண் கோல் அகவுநர் வேண்டின், வெண் கோட்டு |
|
அண்ணல் யானை ஈயும் வண் மகிழ் |
|
5 |
வெளியன் வேண்மான் ஆஅய் எயினன், |
அளி இயல் வாழ்க்கைப் பாழிப் பறந்தலை, |
|
இழை அணி யானை இயல் தேர் மிஞிலியொடு |
|
நண்பகல் உற்ற செருவில் புண் கூர்ந்து, |
|
ஒள் வாள் மயங்கு அமர் வீழ்ந்தென, 'புள் ஒருங்கு |
|
10 |
அம் கண் விசும்பின் விளங்கு ஞாயிற்று |
ஒண் கதிர் தெறாமை, சிறகரின் கோலி, |
|
நிழல் செய்து உழறல் காணேன், யான்' எனப் |
|
படுகளம் காண்டல்செல்லான், சினம் சிறந்து, |
|
உரு வினை நன்னன், அருளான், கரப்ப, |
|
15 |
பெரு விதுப்புற்ற பல் வேள் மகளிர் |
குரூஉப் பூம் பைந் தார் அருக்கிய பூசல், |
|
வசை விடக் கடக்கும் வயங்கு பெருந் தானை |
|
அகுதை கிளைதந்தாங்கு, மிகு பெயல் |
|
உப்புச் சிறை நில்லா வெள்ளம் போல, |
|
20 |
நாணு வரை நில்லாக் காமம் நண்ணி, |
நல்கினள், வாழியர், வந்தே ஓரி |
|
பல் பழப் பலவின் பயம் கெழு கொல்லிக் |
|
கார் மலர் கடுப்ப நாறும், |
|
ஏர் நுண், ஓதி மாஅயோளே! |
|
புணர்ந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர் | |
உரை |
கூறாய், செய்வது தோழி! வேறு உணர்ந்து, |
|
அன்னையும் பொருள் உகுத்து அலமரும்; மென் முறிச் |
|
சிறு குளகு அருந்து, தாய் முலை பெறாஅ, |
|
மறி கொலைப் படுத்தல் வேண்டி, வெறி புரி |
|
5 |
ஏதில் வேலன் கோதை துயல்வரத் |
தூங்கும்ஆயின், அதூஉம் நாணுவல்; |
|
இலங்கு வளை நெகிழ்ந்த செல்லல்; புலம் படர்ந்து, |
|
இரவின் மேயல் மரூஉம் யானைக் |
|
கால் வல் இயக்கம் ஒற்றி, நடு நாள், |
|
10 |
வரையிடைக் கழுதின் வன் கைக் கானவன் |
கடு விசைக் கவணின் எறிந்த சிறு கல் |
|
உடு உறு கணையின் போகி, சாரல் |
|
வேங்கை விரி இணர் சிதறி, தேன் சிதையூஉ, |
|
பலவின் பழத்துள் தங்கும் |
|
15 |
மலை கெழு நாடன் மணவாக்காலே! |
வெறி அச்சுறீஇ,தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - கபிலர் | |
உரை |
என் ஆவதுகொல் தானே முன்றில், |
|
தேன் தேர் சுவைய, திரள் அரை, மாஅத்து, |
|
கோடைக்கு ஊழ்த்த, கமழ் நறுந் தீம் கனி, |
|
பயிர்ப்புறப் பலவின் எதிர்ச் சுளை அளைஇ, |
|
5 |
இறாலொடு கலந்த, வண்டு மூசு, அரியல் |
நெடுங் கண் ஆடு அமைப் பழுநி, கடுந் திறல் |
|
பாப்புக் கடுப்பு அன்ன தோப்பி வான் கோட்டுக் |
|
கடவுள் ஓங்கு வரைக்கு ஓக்கி, குறவர், |
|
முறித் தழை மகளிர் மடுப்ப, மாந்தி, |
|
10 |
அடுக்கல் ஏனல் இரும் புனம் மறந்துழி, |
'யானை வவ்வின தினை' என, நோனாது, |
|
இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇ, |
|
சிலை ஆய்ந்து திரிதரும் நாடன் |
|
நிலையா நல் மொழி தேறிய நெஞ்சே? |
|
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி சொல்லெடுப்ப, தலைமகள் சொல்லியது. -மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார் | |
உரை |
'முடவு முதிர் பலவின் குடம் மருள் பெரும் பழம் |
|
பல் கிளைத் தலைவன் கல்லாக் கடுவன், |
|
பாடு இமிழ் அருவிப் பாறை மருங்கின், |
|
ஆடு மயில் முன்னது ஆக, கோடியர் |
|
5 |
விழவு கொள் மூதூர் விறலி பின்றை |
முழவன் போல அகப்படத் தழீஇ, |
|
இன் துணைப் பயிரும் குன்ற நாடன் |
|
குடி நன்கு உடையன்; கூடுநர்ப் பிரியலன்; |
|
கெடு நா மொழியலன்; அன்பினன்' என, நீ |
|
10 |
வல்ல கூறி, வாய்வதின் புணர்த்தோய்; |
நல்லை; காண், இனி காதல் அம் தோழீஇ! |
|
கடும் பரிப் புரவி நெடுந் தேர் அஞ்சி, |
|
நல் இசை நிறுத்த நயம் வரு பனுவல், |
|
தொல் இசை நிறீஇய உரை சால் பாண்மகன் |
|
15 |
எண்ணு முறை நிறுத்த பண்ணினுள்ளும், |
புதுவது புனைந்த திறத்தினும், |
|
வதுவை நாளினும், இனியனால் எமக்கே. |
|
வரைந்து எய்திய பின்றை மண மனக்கண் சென்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது; வரைவு மலிந்து சொல்லிய தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - அஞ்சியத்தை மகள் நாகையார் | |
உரை |
கொடு முள் ஈங்கை சூரலொடு மிடைந்த |
|
வான் முகை இறும்பின் வயவொடு வதிந்த |
|
உண்ணாப் பிணவின் உயக்கம் தீரிய, |
|
தட மருப்பு யானை வலம் படத் தொலைச்சி, |
|
5 |
வியல் அறை சிவப்ப வாங்கி, முணங்கு நிமிர்ந்து, |
புலவுப் புலி புரண்ட புல் சாய் சிறு நெறி |
|
பயில் இருங் கானத்து வழங்கல்செல்லாது, |
|
பெருங் களிற்று இன நிரை கை தொடூஉப் பெயரும், |
|
தீம் சுளைப் பலவின் தொழுதி, உம்பற் |
|
10 |
பெருங் காடு இறந்தனர்ஆயினும், யாழ நின் |
திருந்து இழைப் பணைத் தோள் வருந்த நீடி, |
|
உள்ளாது அமைதலோ இலரே; நல்குவர் |
|
மிகு பெயல் நிலைஇய தீம் நீர்ப் பொய்கை |
|
அடை இறந்து அவிழ்ந்த தண் கமழ் நீலம் |
|
15 |
காலொடு துயல்வந்தன்ன, நின் |
ஆய் இதழ் மழைக் கண் அமர்த்த நோக்கே. |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது.-எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் | |
உரை |
'நிதியம் துஞ்சும் நிவந்து ஓங்கு வரைப்பின், |
|
வதுவை மகளிர் கூந்தல் கமழ் கொள, |
|
வங்கூழ் ஆட்டிய அம் குழை வேங்கை |
|
நன் பொன் அன்ன நறுந் தாது உதிர, |
|
5 |
காமர் பீலி ஆய் மயில் தோகை |
வேறு வேறு இனத்த வரை வாழ் வருடைக் |
|
கோடு முற்று இளந் தகர்ப் பாடு விறந்து, அயல |
|
ஆடு கள வயிரின் இனிய ஆலி, |
|
பசும் புற மென் சீர் ஒசிய, விசும்பு உகந்து, |
|
10 |
இருங் கண் ஆடு அமைத் தயங்க இருக்கும் |
பெருங் கல் நாடன் பிரிந்த புலம்பும், |
|
உடன்ற அன்னை அமரா நோக்கமும், |
|
வடந்தை தூக்கும் வரு பனி அற்சிரச் |
|
சுடர் கெழு மண்டிலம் அழுங்க, ஞாயிறு |
|
15 |
குட கடல் சேரும் படர் கூர் மாலையும், |
அனைத்தும், அடூஉ நின்று நலிய, உஞற்றி, |
|
யாங்ஙனம் வாழ்தி?' என்றி தோழி! |
|
நீங்கா வஞ்சினம் செய்து; நத் துறந்தோர் |
|
உள்ளார்ஆயினும், உளெனே அவர் நாட்டு |
|
20 |
அள் இலைப் பலவின் கனி கவர் கைய |
கல்லா மந்தி கடுவனோடு உகளும் |
|
கடுந் திறல் அணங்கின் நெடும் பெருங் குன்றத்து, |
|
பாடு இன் அருவி சூடி, |
|
வான் தோய் சிமையம் தோன்றலானே. |
|
இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி சொல் எடுப்ப, தலைமகள் சொல்லியது. -காவட்டனார் | |
உரை |
'பிறர் உறு விழுமம் பிறரும் நோப; |
|
தம் உறு விழுமம் தமக்கோ தஞ்சம்; |
|
கடம்பு கொடி யாத்து, கண்ணி சூட்டி, |
|
வேறு பல் குரல ஒரு தூக்கு இன் இயம் |
|
5 |
காடு கெழு நெடு வேட் பாடு கொளைக்கு ஏற்ப, |
அணங்கு அயர் வியன் களம் பொலிய, பையத் |
|
தூங்குதல் புரிந்தனர், நமர்' என, ஆங்கு அவற்கு |
|
அறியக் கூறல் வேண்டும் தோழி! |
|
அருவி பாய்ந்த கரு விரல் மந்தி |
|
10 |
செழுங் கோட் பலவின் பழம் புணையாக, |
சாரல் பேர் ஊர் முன்துறை இழிதரும் |
|
வறன் உறல் அறியாச் சோலை, |
|
விறல் மலை நாடன் சொல் நயந்தோயே! |
|
இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி தலைமகட்குச் சொல்லியது. - கபிலர் | |
உரை |
மேல் |