அணில்(வெளில்) |
யாயே, கண்ணினும் கடுங் காதலளே; |
|
எந்தையும், நிலன் உறப் பொறாஅன்; 'சீறடி சிவப்ப, |
|
எவன், இல! குறுமகள்! இயங்குதி?' என்னும்; |
|
யாமே, பிரிவு இன்று இயைந்த துவரா நட்பின், |
|
5 |
இரு தலைப் புள்ளின் ஓர் உயிரம்மே; |
ஏனல்அம் காவலர் ஆனாது ஆர்த்தொறும், |
|
கிளி விளி பயிற்றும் வெளில் ஆடு பெருஞ் சினை, |
|
விழுக் கோட் பலவின் பழுப் பயம் கொண்மார், |
|
குறவர் ஊன்றிய குரம்பை புதைய, |
|
10 |
வேங்கை தாஅய தேம் பாய் தோற்றம் |
புலி செத்து, வெரீஇய புகர்முக வேழம், |
|
மழை படு சிலம்பில் கழைபட, பெயரும் |
|
நல் வரை நாட! நீ வரின், |
|
மெல்லியல் ஓரும் தான் வாழலளே. |
|
பகற்குறி வாராநின்ற தலைமகன் தோழியால் செறிப்பு அறிவுறுக்கப்பட்டு, 'இரவுக் குறி வாரா வரைவல்' என்றாற்கு, அதுவும் மறுத்து, வரைவு கடாயது. - கபிலர் | |
உரை |
பல் இதழ் மென் மலர் உண்கண், நல் யாழ் |
|
நரம்பு இசைத்தன்ன இன் தீம் கிளவி, |
|
நலம் நல்கு ஒருத்தி இருந்த ஊரே |
|
கோடு உழு களிற்றின் தொழுதி ஈண்டிக் |
|
5 |
காடு கால்யாத்த நீடு மரச் சோலை |
விழை வெளில் ஆடும் கழை வளர் நனந்தலை, |
|
வெண் நுனை அம்பின் விசை இட வீழ்ந்தோர் |
|
எண்ணு வரம்பு அறியா உவல் இடு பதுக்கைச் |
|
சுரம் கெழு கவலை கோட்பால் பட்டென, |
|
10 |
வழங்குநர் மடிந்த அத்தம் இறந்தோர், |
கைப்பொருள் இல்லைஆயினும், மெய்க் கொண்டு |
|
இன் உயிர் செகாஅர் விட்டு அகல் தப்பற்குப் |
|
பெருங் களிற்று மருப்பொடு வரி அதள் இறுக்கும் |
|
அறன் இல் வேந்தன் ஆளும் |
|
15 |
வறன் உறு குன்றம் பல விலங்கினவே. |
இடைச் சுரத்துத் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.- கடுந்தொடைக் காவினார் | |
உரை |
மேல் |