ஆடு(தகர், மறி, கடா) |
தேம் படு சிமயப் பாங்கர்ப் பம்பிய |
|
குவை இலை முசுண்டை வெண் பூக் குழைய, |
|
வான் எனப் பூத்த பானாட் கங்குல், |
|
மறித் துரூஉத் தொகுத்த பறிப் புற இடையன் |
|
5 |
தண் கமழ் முல்லை தோன்றியொடு விரைஇ, |
வண்டு படத் தொடுத்த நீர் வார் கண்ணியன், |
|
ஐது படு கொள்ளி அங்கை காய, |
|
குறு நரி உளம்பும் கூர் இருள் நெடு விளி |
|
சிறு கட் பன்றிப் பெரு நிரை கடிய, |
|
10 |
முதைப் புனம் காவலர் நினைத்திருந்து ஊதும் |
கருங் கோட்டு ஓசையொடு ஒருங்கு வந்து இசைக்கும் |
|
வன் புலக் காட்டு நாட்டதுவே அன்பு கலந்து |
|
ஆர்வம் சிறந்த சாயல், |
|
இரும் பல் கூந்தல், திருந்திழை ஊரே! |
|
வினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது; தலைமகன் பாங்கற்குச் சொற்றதூஉம் ஆம். - நன்பலூர்ச் சிறு மேதாவியார் | |
உரை |
அம்ம வாழி, தோழி! 'இம்மை |
|
நன்று செய் மருங்கில் தீது இல்' என்னும் |
|
தொன்றுபடு பழமொழி இன்று பொய்த்தன்றுகொல்? |
|
தகர் மருப்பு ஏய்ப்பச் சுற்றுபு, சுரிந்த |
|
5 |
சுவல் மாய் பித்தை, செங் கண், மழவர் |
வாய்ப் பகை கடியும் மண்ணொடு கடுந் திறல் |
|
தீப் படு சிறு கோல் வில்லொடு பற்றி, |
|
நுரை தெரி மத்தம் கொளீஇ, நிரைப் புறத்து |
|
அடி புதை தொடுதோல் பறைய ஏகி, |
|
10 |
கடி புலம் கவர்ந்த கன்றுடைக் கொள்ளையர், |
இனம் தலைபெயர்க்கும் நனந்தலைப் பெருங் காட்டு, |
|
அகல் இரு விசும்பிற்கு ஓடம் போல, |
|
பகலிடை நின்ற பல் கதிர் ஞாயிற்று |
|
உருப்பு அவிர்பு உளரிய சுழன்று வரு கோடை, |
|
15 |
புன் கால் முருங்கை ஊழ் கழி பல் மலர், |
தண் கார் ஆலியின், தாவன உதிரும் |
|
பனி படு பல் மலை இறந்தோர்க்கு |
|
முனிதகு பண்பு யாம் செய்தன்றோஇலமே! |
|
பிரிவிடை வேறுபட்ட கிழத்தி தோழிக்குச் சொல்லியது; தோழி கிழத்திக்குச் சொல்லியதூஉம் ஆம். - மாமூலனார் | |
உரை |
வேந்து வினை முடித்தகாலை, தேம் பாய்ந்து |
|
இன வண்டு ஆர்க்கும் தண் நறும் புறவின் |
|
வென் வேல் இளையர் இன்புற, வலவன் |
|
வள்பு வலித்து ஊரின் அல்லது, முள் உறின் |
|
5 |
முந்நீர் மண்டிலம் ஆதி ஆற்றா |
நல் நால்கு பூண்ட கடும் பரி நெடுந் தேர், |
|
வாங்குசினை பொலிய ஏறி; புதல |
|
பூங் கொடி அவரைப் பொய் அதள் அன்ன |
|
உள் இல் வயிற்ற, வெள்ளை வெண் மறி, |
|
10 |
மாழ்கியன்ன தாழ் பெருஞ் செவிய, |
புன் தலைச் சிறாரோடு உகளி, மன்றுழைக் |
|
கவை இலை ஆரின் அம் குழை கறிக்கும் |
|
சீறூர் பல பிறக்கு ஒழிய, மாலை |
|
இனிது செய்தனையால் எந்தை! வாழிய! |
|
15 |
பனி வார் கண்ணள் பல புலந்து உறையும் |
ஆய் தொடி அரிவை கூந்தற் |
|
போது குரல் அணிய வேய்தந்தோயே! |
|
வினை முற்றி மீளும் தலைமகற்குத் தோழி சொல்லியது.- மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
முரசுடைச் செல்வர் புரவிச் சூட்டும் |
|
மூட்டுறு கவரி தூக்கியன்ன, |
|
செழுஞ் செய் நெல்லின் சேயரிப் புனிற்றுக் கதிர் |
|
மூதா தின்றல் அஞ்சி, காவலர் |
|
5 |
பாகல் ஆய்கொடிப் பகன்றையொடு பரீஇ, |
காஞ்சியின் அகத்து, கரும்பு அருத்தி, யாக்கும் |
|
தீம் புனல் ஊர! திறவதாகக் |
|
குவளை உண்கண் இவளும் யானும் |
|
கழனி ஆம்பல் முழுநெறிப் பைந் தழை, |
|
10 |
காயா ஞாயிற்றாக, தலைப்பெய, |
'பொய்தல் ஆடிப் பொலிக!' என வந்து, |
|
நின் நகாப் பிழைத்த தவறோ பெரும! |
|
கள்ளும் கண்ணியும் கையுறையாக |
|
நிலைக் கோட்டு வெள்ளை நால்செவிக் கிடாஅய் |
|
15 |
நிலைத்துறைக் கடவுட்கு உளப்பட ஓச்சி, |
தணி மருங்கு அறியாள், யாய் அழ, |
|
மணி மருள் மேனி பொன் நிறம் கொளலே? |
|
அரும்பு முதிர் வேங்கை அலங்கல் மென் சினைச் |
|
சுரும்பு வாய் திறந்த பொன் புரை நுண் தாது |
|
மணி மருள் கலவத்து உறைப்ப, அணி மிக்கு |
|
அவிர் பொறி மஞ்ஞை ஆடும் சோலை, |
|
5 |
பைந் தாட் செந் தினைக் கொடுங் குரல் வியன் புனம், |
செந் தார் கிள்ளை நம்மொடு கடிந்தோன் |
|
பண்பு தர வந்தமை அறியாள், 'நுண் கேழ் |
|
முறி புரை எழில் நலத்து என் மகள் துயர் மருங்கு |
|
அறிதல் வேண்டும்' என, பல் பிரப்பு இரீஇ, |
|
10 |
அறியா வேலற் தரீஇ, அன்னை |
வெறி அயர் வியன் களம் பொலிய ஏத்தி, |
|
மறி உயிர் வழங்கா அளவை, சென்று யாம், |
|
செல வரத் துணிந்த, சேண் விளங்கு, எல் வளை |
|
நெகிழ்ந்த முன் கை, நேர் இறைப் பணைத் தோள், |
|
15 |
நல் எழில் அழிவின் தொல் கவின் பெறீஇய, |
முகிழ்த்து வரல் இள முலை மூழ்க, பல் ஊழ் |
|
முயங்கல் இயைவதுமன்னோ தோழி! |
|
நறை கால்யாத்த நளிர் முகைச் சிலம்பில் |
|
பெரு மலை விடரகம் நீடிய சிறியிலைச் |
|
20 |
சாந்த மென் சினை தீண்டி, மேலது |
பிரசம் தூங்கும் சேண் சிமை |
|
வரையக வெற்பன் மணந்த மார்பே! |
|
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. - பேரிசாத்தனார் | |
உரை |
இரு விசும்பு அதிர முழங்கி, அர நலிந்து, |
|
இகு பெயல் அழி துளி தலைஇ, வானம் |
|
பருவம் செய்த பானாட் கங்குல், |
|
ஆடு தலைத் துருவின் தோடு ஏமார்ப்ப, |
|
5 |
கடை கோல் சிறு தீ அடைய மாட்டி, |
திண் கால் உறியன், பானையன், அதளன், |
|
நுண் பல் துவலை ஒரு திறம் நனைப்ப, |
|
தண்டு கால் ஊன்றிய தனி நிலை இடையன், |
|
மடி விடு வீளை கடிது சென்று இசைப்ப, |
|
10 |
தெறி மறி பார்க்கும் குறு நரி வெரீஇ, |
முள்ளுடைக் குறுந் தூறு இரியப் போகும் |
|
தண் நறு புறவினதுவே நறு மலர் |
|
முல்லை சான்ற கற்பின் |
|
மெல் இயற் குறுமகள் உறைவு இன் ஊரே. |
|
தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - இடைக் காடனார் | |
உரை |
கூறாய், செய்வது தோழி! வேறு உணர்ந்து, |
|
அன்னையும் பொருள் உகுத்து அலமரும்; மென் முறிச் |
|
சிறு குளகு அருந்து, தாய் முலை பெறாஅ, |
|
மறி கொலைப் படுத்தல் வேண்டி, வெறி புரி |
|
5 |
ஏதில் வேலன் கோதை துயல்வரத் |
தூங்கும்ஆயின், அதூஉம் நாணுவல்; |
|
இலங்கு வளை நெகிழ்ந்த செல்லல்; புலம் படர்ந்து, |
|
இரவின் மேயல் மரூஉம் யானைக் |
|
கால் வல் இயக்கம் ஒற்றி, நடு நாள், |
|
10 |
வரையிடைக் கழுதின் வன் கைக் கானவன் |
கடு விசைக் கவணின் எறிந்த சிறு கல் |
|
உடு உறு கணையின் போகி, சாரல் |
|
வேங்கை விரி இணர் சிதறி, தேன் சிதையூஉ, |
|
பலவின் பழத்துள் தங்கும் |
|
15 |
மலை கெழு நாடன் மணவாக்காலே! |
வெறி அச்சுறீஇ,தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - கபிலர் | |
உரை |
நீடு நிலை அரைய செங் குழை இருப்பை, |
|
கோடு கடைந்தன்ன, கொள்ளை வான் பூ, |
|
ஆடு பரந்தன்ன, ஈனல் எண்கின் |
|
தோடு சினை உரீஇ உண்ட மிச்சில் |
|
5 |
பைங் குழைத் தழையர் பழையர் மகளிர் |
கண் திரள் நீள் அமைக் கடிப்பின் தொகுத்து, |
|
குன்றகச் சிறுகுடி மறுகுதொறும் மறுகும் |
|
சீறூர் நாடு பல பிறக்கு ஒழிய, |
|
சென்றோர் அன்பு இலர் தோழி!என்றும், |
|
10 |
அருந் துறை முற்றிய கருங் கோட்டுச் சீறியாழ்ப் |
பாணர் ஆர்ப்ப, பல் கலம் உதவி, |
|
நாளவை இருந்த நனை மகிழ்த் திதியன், |
|
வேளிரொடு பொரீஇய, கழித்த |
|
வாள் வாய் அன்ன வறுஞ் சுரம் இறந்தே! |
|
தலைமகன் பிரிவின்கண் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மாமூலனார் | |
உரை |
களவும் புளித்தன; விளவும் பழுநின; |
|
சிறு தலைத் துருவின் பழுப்பு உறு விளைதயிர், |
|
இதைப் புன வரகின் அவைப்பு மாண் அரிசியொடு, |
|
கார் வாய்த்து ஒழிந்த ஈர் வாய்ப் புற்றத்து |
|
5 |
ஈயல் பெய்து அட்ட இன் புளி வெஞ் சோறு |
சேதான் வெண்ணெய் வெம் புறத்து உருக, |
|
இளையர் அருந்த, பின்றை, நீயும் |
|
இடு முள் வேலி முடக் கால் பந்தர், |
|
புதுக் கலத்து அன்ன செவ் வாய்ச் சிற்றில், |
|
10 |
புனை இருங் கதுப்பின் நின் மனையோள் அயர, |
பாலுடை அடிசில் தொடீஇய, ஒரு நாள், |
|
மா வண் தோன்றல்! வந்தனை சென்மோ |
|
காடு உறை இடையன் யாடு தலைப்பெயர்க்கும் |
|
மடி விடு வீளை வெரீஇ, குறு முயல் |
|
15 |
மன்ற இரும் புதல் ஒளிக்கும் |
புன்புல வைப்பின் எம் சிறு நல் ஊரே. |
|
இரவுக்குறித் தலைமகளை இடத்து உய்த்து வந்து, தோழி தலைமகனை வரைவு கடாயது. - நன்பலூர்ச் சிறுமேதாவியார் | |
உரை |
மேல் |