245. பாலை |
'உயிரினும் சிறந்த ஒண் பொருள் தருமார் |
|
நன்று புரி காட்சியர் சென்றனர், அவர்' என |
|
மனை வலித்து ஒழியும் மதுகையள் ஆதல் |
|
நீ நற்கு அறிந்தனைஆயின், நீங்கி, |
|
5 |
மழை பெயல் மறந்த கழை திரங்கு இயவில், |
செல் சாத்து எறியும் பண்பு இல் வாழ்க்கை |
|
வல் வில் இளையர் தலைவர், எல் உற, |
|
வரி கிளர் பணைத் தோள், வயிறு அணி திதலை, |
|
அரியலாட்டியர் அல்கு மனை வரைப்பில், |
|
10 |
மகிழ் நொடை பெறாஅராகி, நனை கவுள் |
கான யானை வெண் கோடு சுட்டி, |
|
மன்று ஓடு புதல்வன் புன் தலை நீவும் |
|
அரு முனைப் பாக்கத்து அல்கி, வைகுற, |
|
நிழல் படக் கவின்ற நீள்அரை இலவத்து |
|
15 |
அழல் அகைந்தன்ன அலங்குசினை ஒண் பூக் |
குழல் இசைத் தும்பி ஆர்க்கும் ஆங்கண், |
|
குறும் பொறை உணங்கும் ததர் வெள் என்பு |
|
கடுங் கால் ஒட்டகத்து அல்கு பசி தீர்க்கும் |
|
கல் நெடுங் கவலைய கானம் நீந்தி, |
|
20 |
அம் மா அரிவை ஒழிய, |
சென்மோ நெஞ்சம்! வாரலென் யானே. |
|
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சினைக் கழறி, தலைமகன் சொல்லிச், செலவு அழுங்கியது. - மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
மேல் |