கழுதை(அத்திரி) |
தெறு கதிர் ஞாயிறு நடு நின்று காய்தலின், |
|
உறு பெயல் வறந்த ஓடு தேர் நனந் தலை, |
|
உருத்து எழு குரல குடிஞைச் சேவல், |
|
புல் சாய் விடரகம் புலம்ப, வரைய |
|
5 |
கல் எறி இசையின் இரட்டும் ஆங்கண், |
சிள்வீடு கறங்கும் சிறிஇலை வேலத்து |
|
ஊழுறு விளைநெற்று உதிர, காழியர் |
|
கவ்வைப் பரப்பின் வெவ் உவர்ப்பு ஒழிய, |
|
களரி பரந்த கல் நெடு மருங்கின், |
|
10 |
விளர் ஊன் தின்ற வீங்குசிலை மறவர் |
மை படு திண் தோள் மலிர வாட்டி, |
|
பொறை மலி கழுதை நெடு நிரை தழீஇய |
|
திருந்து வாள் வயவர் அருந் தலை துமித்த |
|
படு புலாக் கமழும் ஞாட்பில், துடி இகுத்து, |
|
15 |
அருங் கலம் தெறுத்த பெரும் புகல் வலத்தர், |
வில் கெழு குறும்பில் கோள் முறை பகுக்கும் |
|
கொல்லை இரும் புனம் நெடிய என்னாது, |
|
மெல்லென் சேவடி மெலிய ஏக |
|
வல்லுநள்கொல்லோ தானே தேம் பெய்து |
|
20 |
அளவுறு தீம் பால் அலைப்பவும் உண்ணாள், |
இடு மணற் பந்தருள் இயலும், |
|
நெடு மென் பணைத் தோள், மாஅயோளே? |
|
மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - மதுரைக்காஞ்சிப் புலவர் | |
உரை |
நெடு வேள் மார்பின் ஆரம் போல, |
|
செவ் வாய் வானம் தீண்டி, மீன் அருந்தும் |
|
பைங் காற் கொக்கினம் நிரை பறை உகப்ப, |
|
எல்லை பைப்பயக் கழிப்பி, குடவயின் |
|
5 |
கல் சேர்ந்தன்றே, பல் கதிர் ஞாயிறு |
மதர் எழில் மழைக் கண் கலுழ, இவளே |
|
பெரு நாண் அணிந்த சிறு மென் சாயல் |
|
மாண் நலம் சிதைய ஏங்கி, ஆனாது, |
|
அழல் தொடங்கினளே பெரும! அதனால் |
|
10 |
கழிச் சுறா எறிந்த புண் தாள் அத்திரி |
நெடு நீர் இருங் கழிப் பரி மெலிந்து, அசைஇ, |
|
வல் வில் இளையரொடு எல்லிச் செல்லாது, |
|
சேர்ந்தனை செலினே சிதைகுவது உண்டோ |
|
பெண்ணை ஓங்கிய வெண் மணற் படப்பை |
|
15 |
அன்றில் அகவும் ஆங்கண், |
சிறு குரல் நெய்தல் எம் பெருங் கழி நாட்டே? |
|
தோழி, பகற்குறிக்கண் தலைமகனை இடத்து உய்த்து வந்து, தலைமகனை எதிர்ப்பட்டு நின்று சொல்லியது. - நக்கீரனார் | |
உரை |
அணங்குடை முந்நீர் பரந்த செறுவின் |
|
உணங்கு திறம் பெயர்ந்த வெண் கல் அமிழ்தம் |
|
குட புல மருங்கின் உய்ம்மார், புள் ஓர்த்துப் |
|
படை அமைத்து எழுந்த பெருஞ் செய் ஆடவர் |
|
5 |
நிரைப் பரப் பொறைய நரைப் புறக் கழுதைக் |
குறைக் குளம்பு உதைத்த கல் பிறழ் இயவின், |
|
வெஞ் சுரம் போழ்ந்த, அஞ்சுவரு கவலை, |
|
மிஞிறு ஆர் கடாஅம் கரந்து விடு கவுள, |
|
வெயில் தின வருந்திய, நீடு மருப்பு ஒருத்தல் |
|
10 |
பிணர் அழி பெருங் கை புரண்ட கூவல் |
தெண் கண் உவரிக் குறைக் குட முகவை, |
|
அறனிலாளன் தோண்ட, வெய்து உயிர்த்து, |
|
பிறைநுதல் வியர்ப்ப, உண்டனள்கொல்லோ |
|
தேம் கலந்து அளைஇய தீம் பால் ஏந்திக் |
|
15 |
கூழை உளர்ந்து மோழைமை கூறவும், |
மறுத்த சொல்லள் ஆகி, |
|
வெறுத்த உள்ளமொடு உண்ணாதோளே? |
|
மகட் போக்கிய தாய் சொல்லியது. - மதுரை எழுத்தாளன் சேந்தம்பூதனார் | |
உரை |
வாங்கு அமை புரையும் வீங்கு இறைப் பணைத் தோள், |
|
சில் சுணங்கு அணிந்த, பல் பூண், மென் முலை, |
|
நல் எழில், ஆகம் புல்லுதல் நயந்து, |
|
மரம் கோள் உமண் மகன் பேரும் பருதிப் |
|
5 |
புன் தலை சிதைத்த வன் தலை நடுகல் |
கண்ணி வாடிய மண்ணா மருங்குல், |
|
கூர் உளி குயின்ற கோடு மாய் எழுத்து, அவ் |
|
ஆறு செல் வம்பலர் வேறு பயம் படுக்கும் |
|
கண் பொரி கவலைய கானத்து ஆங்கண், |
|
10 |
நனந்தலை யாஅத்து அம் தளிர்ப் பெருஞ் சினை, |
இல் போல் நீழல் செல் வெயில் ஒழிமார், |
|
நெடுஞ் செவிக் கழுதைக் குறுங் கால் ஏற்றைப் |
|
புறம் நிறை பண்டத்துப் பொறை அசாஅக் களைந்த |
|
பெயர் படை கொள்ளார்க்கு உயவுத் துணை ஆகி, |
|
15 |
உயர்ந்த ஆள்வினை புரிந்தோய்; பெயர்ந்து நின்று |
உள்ளினை வாழி, என் நெஞ்சே! கள்ளின் |
|
மகிழின் மகிழ்ந்த அரி மதர் மழைக் கண், |
|
சில் மொழிப் பொலிந்த துவர் வாய், |
|
பல் மாண் பேதையின் பிரிந்த நீயே. |
|
தலைமகன் இடைச் சுரத்து மீளக் கருதிய நெஞ்சினைக் கழறிப் போயது. -மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
மேல் |